IND VS BAN 2nd ODI Match Prediction in tamil : Left-arm spinner Axar Patel on the left and Speedster Umran Malik on the right. (FILE)
IND vs BAN Team Prediction, 2nd ODI 2022 in tamil: வங்க தேச மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் - 05) நடந்த முதலாவது ஒரு போட்டியில் வங்கதேச அணி இந்தியாவை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்நிலையில், இவ்விரு அணிகள் மோதும் 2வது ஒருநாள் ஆட்டம் நாளை புதன்கிழமை அதே டாக்கா மைதானத்தில் பகல் 11:30 மணிக்கு நடக்கிறது. இதையடுத்து இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
Advertisment
இந்தியா vs வங்க தேசம்: ஆடும் 11 எப்படி?
வங்கதேசத்துக்கு எதிரான முதல் போட்டியிலே இந்திய அணி தோல்வியடைந்துள்ள நிலையில், அணியின் திட்டங்களை கேப்டன் ரோகித் மாற்றி அமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அணியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு வரிசையில் சில மாற்றங்கள் நிகழும் என்றும் தெரிகிறது. அதன்படி, ஆட்டத்தின் முக்கிய தருணங்களில் கூடுதல் அனுபவத்தை சேர்க்க ஷபாஸ் அஹமதுக்கு பதில் அக்சர் படேல் வர உள்ளார். மேலும் குல்தீப் சென்னுக்கு பதிலாக மற்றொரு இளம் வேகமான உம்ரான் மாலிக் சேர்க்கப்பட உள்ளார்.
ரிஷப் பந்த் காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறிய நிலையில், சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். முதல் ஆட்டத்தில் விக்கெட் கீப்பராக கே.எல்.ராகுல் செயல்பட்டதால் அந்தத் துறையில் எந்த மாற்றமும் ஏற்பட வாய்ப்பில்லை.
தொடரும் ஷ்ரேயாஸின் ஷார்ட் பால் அவலங்கள்
ஷ்ரேயாஸ் ஐயர் ஷார்ட் ஷார்ட்-பாலில் ஆட்டமிழந்து வெளியேறுவது தொடர்ந்து வருகிறது. முதல் ஆட்டத்தில் அவர் மீண்டும் ஷார்ட் பந்தில் அவுட் ஆகி வெளியேறி இருந்தார். எபாடோட் ஷார்ட் பந்தின் வரிசையை தொடர்ந்து பந்துவீசினார். மற்றும் ஷ்ரேயாஸ் மீது அதிக அழுத்தத்தை குவித்தார். இறுதியில் அந்த அழுத்தத்திற்கு அடிபணிந்த ஷ்ரேயாஸ் ஆட்டமிழந்தார்.
இருப்பினும், ஷ்ரேயாஸ் ஐயர் 2022 ஆம் ஆண்டில் இந்தியாவுக்காக ஒருநாள் போட்டிகளில் நல்ல ஃபார்மில் இருக்கும் வீரராக இருந்தார். அவர் இந்த ஆண்டு 58.33 சராசரியுடன் 639 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், அவர் விராட் கோலி மற்றும் ராகுல் போன்ற ஒரு திடமான மிடில் ஆர்டர் வீரர் போல் தெரிகிறது.
கவலை தரும் தொடக்க ஜோடி
இந்தியாவுக்கு நல்ல வலுவான மற்றும் விரைவான தொடக்கம் தேவை. ஆக்லாந்தில் நியூசிலாந்திற்கு எதிரான தொடக்க நிலையைத் தவிர, இந்த ஆண்டு ஒருநாள் போட்டிகளில் இந்திய தொடக்கங்கள் சமமானதாக இருந்தன.
ஷிகர் தவானின் ஸ்டிரைக் ரேட் ஒருநாள் போட்டிகளில் குறைந்து வருகிறது. அவர் இந்த ஆண்டு 20 ஒருநாள் ஆட்டங்களில் 75 ரன்களை சராசரியாக 38 என்ற சராசரியுடன் அடித்துள்ளார். மறுபுறம், கேப்டன் ரோகித் ஷர்மா நீண்ட காலமாக மோசமான பார்மில் இருக்கிறார். இதனால், இந்தியாவின் டாப் ஆடர் கவலை தருவதாகவே உள்ளது. உலகக் கோப்பைக்கு முன் இந்த ஜோடியில் யார் நிலையான தொடக்க வீரர் என்பதை நிர்வாகம் கண்டறிய வேண்டும்.
இந்தியா vs வங்க தேசம்: இரு அணி உத்தேச வீரர்கள் பட்டியல்: