By: WebDesk
Updated: November 24, 2019, 02:05:21 PM
இந்தியா – வங்கதேச அணிகளுக்கிடையேயான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி தற்போது வென்றுள்ளது. இரண்டாவது டெஸ்டின் மூன்றாவது நாள் ஆட்டத்தில், 152 /4 என்ற ரன்களோடு களமிறங்கிய வங்கதேச அணி 195 ரன்கள் எடுப்பதற்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துது. இந்திய அணியின் சார்பில் உமேஷ் யாதவ் ஐந்து விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா நான்கு விக்கெட்டுகளையும் எடுத்தனர். இந்தியா இரண்டாவது டெஸ்ட் ஒரு இன்னிங்க்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.
இந்தியா -வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்டில், கேப்டன் கோலி டெஸ்ட் அரங்கில் 27வது சதத்தை நிறைவு செய்துள்ளார். இதன்மூலம், மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கரின் சத சாதனையை சமன் செய்துள்ளார்.
இந்தியா வந்துள்ள வங்கதேச கிரிக்கெட் அணி டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்த நிலையில், தற்போது டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில், இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம், இத்தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இரண்டாவது டெஸ்ட், கோல்கட்டாவில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தியாவின் முதல் பகல் – இரவு டெஸ்ட் போட்டியாக இது நடைபெற்று வருகிறது. பகல் இரவு போட்டி என்பதால், பிங்க் கலர் பந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 106 ரன்களுக்கு சுருண்டது. அடுத்து முதல் இன்னிங்சை துவங்கிய இந்திய அணி , 9விக்கெட்கள் இழப்பிற்கு 347 வது ஓவரில் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது.
இரண்டாவது இன்னிங்சை துவக்கிய வங்கதேச அணி 2வது நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்களை மட்டும் எடுத்துள்ளது. 89 ரன்கள் பின்தங்கியுள்ள நிலையில், 4 விக்கெட்கள் மட்டும் அதன் வசம் உள்ளன. இந்திய பவுலர்கள் துல்லியமாக பிங்க் பந்தை வீசிவருவதால், மூன்றாவது நாளிலேயே, இந்திய அணி வெற்றி பெற்றுவிடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இப்போட்டியின் லைவ் ஸ்கோர் கார்டை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் நீங்கள் காணலாம். இந்த போட்டியை ஹாட்ஸ்டார், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக கண்டுகளிக்கலாம்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook
Web Title:India vs bangladesh 2nd test virat kohli equals sachin ton record