India-vs-bangladesh | cricket | sports: இலங்கை மண்ணில் நடைபெற்று வரும் 16-வது ஆசிய கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 6 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில் இந்தியா மற்றும் நடப்பு சாம்பியானான இலங்கை அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன. இந்நிலையில், இந்த தொடருக்கான சூப்பர் 4 சுற்றில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கும் கடைசி போட்டியில் இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதியது.
அணியில் 5 மாற்றம் - டாஸ் வென்ற இந்தியா பவுலிங்: வங்கதேசம் முதலில் பேட்டிங்
இந்தப் போட்டியில் டாஸ் இந்திய அணி பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. அதனால், வங்கதேசம் அணி முதலில் பேட்டிங் செய்கிறது. இந்திய அணியில் விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, முகமது சிராஜ், பும்ரா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி முதலில் களமிறங்கிய வங்கதேச அணியில் டென்சடு ஹசன் லிட்டன் தாஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் லிட்டன் தாஸ் 2 பந்துகளை சந்தித்து ரன் கணக்கை தொடங்காமலே முகமது ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். டென்சடு ஹசன் 12 பந்துகளில் 13 ரன்கள் குவித்து தாகூர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த அனுமோல் 4 ரன்களிலும், மெஹந்தி ஹசன் மிஸ்ரா 13 ரன்களுக்கும் ஆட்டமிழந்ததால், வங்கதேச அணி 54 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து 5-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் ஷாகிப் அல் ஹசன் – டவ்ஹாடு ஹார்டாய் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்க போராடியது. இருவரும் நேர்த்தியான பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி ரன்கள் சேர்ந்தனர்.
இதில் சிறப்பாக விளையாடிய கேப்டன் ஷாகிப் அல் ஹாசன் அரைசதம் கடந்த நிலையில், மறுனையில், ஷாகிப்புக்கு கை கொடுத்த டவ்ஹாடு ஹார்டாய் அரைசதம் கடந்து 54 ரன்களில், ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையா சதத்தை நெருங்கிய ஷாகிப் அல் ஹசன் 85 பந்துகளில் 3 பவுண்டரி 3 சிக்சருடன் 80 ரன்கள் குவித்து தாகூர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய ஷம்மி குஷன் 1 ரன்னில் வெளியேறினாலும், அதிரடியாக விளையாடிய நசூம் அகமது 44 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்சருடன் 45 ரன்கள் குவித்து வெளியேறினார். இறுதிக்கட்டத்தில் மெகந்தி ஹசன், அதிரடியாக விளையாடி 29 (23) ரன்களும், டசிம் ஹசன் ஷாகிப் 14 (8) ரன்களும் குவித்து களத்தில் இருந்தனர். நிர்ணையிக்கப்பட்ட 50 ஓவர்களில் வங்கதேச அணி 8 விக்கெட் இழப்பிற்கு 265 ரன்கள் குவித்துள்ளது.
இந்திய அணி தரப்பில், தாகூர் 3 விக்கெட்டுகளும், ஷமி 2 விக்கெட்டுகளும், பிரசீத், அக்சர், ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
போராடிய இந்தியா
தொடர்ந்து 266 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்த நிலையில், அடுத்து வந்த திலக் வர்மா 5 ரன்களில் வெளியேறினார். சிறிது நேரம் தாக்குபிடித்த லோகேஷ் ராகுல் 19 ரன்களுக்கு ரன்களுக்கும், இஷான் கிஷான் 5 ரன்களுக்கும் ஆட்டமிழந்தார்.
ஒருபுறம் விக்கெட் சரிந்தாலுமு் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சுப்மான் கில் சீரான் இடைவெளியில் பவுண்டரி சிக்சர் அடித்து அணிக்கு ஸ்கோரை உயர்த்தி கொடுத்தார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த சூர்யகுமார் யாதவ், 26 ரன்களுக்கு வெளியேறினார். தொடர்ந்து களமிறங்கிய ஜடேஜா 7 ரன்களில் வெளியேறி அதிர்ச்சியளித்தார்.
சீரான இடைவெளியில் விக்கெட் சரிந்தாலும், மறுமுனையில், ஆறுதல் அளிக்கும் வகையில் விளையாடிய சுப்மான் கில் சதமடித்து அசத்தினார். இதன் காரணமாக இந்தியாவின் வெற்றி உறுதியாகிவிடும் என்று ரசிகர்கள் நம்பிக்கொண்டிருந்தனர். அதற்கு ஏற்றார்போல் சதமடித்தவுடன் அதிரடியாக விளையாடிய கில், 133 பந்துகளில் 8 பவுண்டரி 5 சிக்சருடன் 121 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இதனால் இந்தியாவின் வெற்றி நம்பிக்கை தகர்ந்தாக நினைத்தாலும், அடுத்து களமிறங்கிய அக்சர் பட்டேல் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்ந்தார். இக்கட்டான சூழ்நிலையில், சிக்சர் பவுண்டரி அடித்து உற்சாகத்தை ஏற்படுத்திய அக்சர் பட்டேல் அதிரடியால் இந்திய அணிக்கு கடைசி 12 பந்துகளில் 17 ரன்கள் தேவைப்பட்டது. இதில் முதல் பந்தில் தாகூர் 11 ரன்களில் வெளியேறினார்.
அடுத்த பந்தில் ஒரு ரன் கிடைத்த நிலையில், 3-வது பந்தில் பவுண்டரி அடித்த அக்சர் பட்டேல் 4-வது பந்தில் ஆட்டமிழந்தார். 34 பந்துகளை சந்தித்த அக்சர் 3 பவுண்டரி 2 சிக்சருடன் 42 ரன்கள் குவித்தார். அடுத்த இரு பந்துகளும் டாட் பாலாக அமைந்ததால், கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது கைவசம் ஒரு விக்கெட் மட்டுமே இருந்தது.
கடைசி ஓவரை வீசிய டன்சிம் ஹசன், முதல் 3 பந்துகளையும் டாட் செய்த நிலையில், 4-வது பந்தில் முகமது ஷமி பவுண்டரி அடித்தார். இதனால் கடைசி 2 பந்தில் 8 ரன்கள் தேவை என்ற நிலையில், 5-வது பந்தில் 2 ரன்கள் ஓட முயற்சித்த நிலையில், முகமது ஷமி ரன் அவுட் ஆனார். இதனால் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை தழுவியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.