Advertisment

பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா த்ரில் வெற்றி!

முத்தரப்பு டி20 இறுதி கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று தொடரைக் கைப்பற்றியது.

author-image
WebDesk
Mar 18, 2018 18:40 IST
பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா த்ரில் வெற்றி!

இந்தியா, வங்கதேசம் இடையே கொழும்புவில் நடைபெற்ற முத்தரப்பு டி20 இறுதி கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று தொடரைக் கைப்பற்றியது.

டாஸ் வென்ற ரோஹித் ஷர்மா முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதைத் தொடர்ந்து முதலில் களமிறங்கிய வங்கதேச அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தது. சபீர் ரஹ்மான் அதிகபட்சமாக 50 பந்துகளில் 77 ரன்கள் குவித்தார். இந்திய தரப்பில் சாஹல் 4 ஓவர்கள் வீசி 18 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியில், கேப்டன் ரோஹித் ஷர்மா அதிகபட்சமாக 56 ரன்கள் எடுத்து அவுட்டானார். இறுதிக் கட்டத்தில் 8 பந்துகளில் 29 விளாசிய தினேஷ் கார்த்திக், கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து  இந்திய அணியை வெற்றிப் பெற வைத்தார்.

#Rohit Sharma
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment