U19 ICC World Cup | India vs Bangladesh: 15-வது ஜூனியர் உலகக் கோப்பை போட்டி தென் ஆப்பிரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் குரூப் -ஏ-வில் இடம் பிடித்துள்ள நடப்பு சாம்பியன் இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான போட்டி ப்ளூம்ஃபோன்டைனில் உள்ள மங்காங் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்தியா பேட்டிங்
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பந்துவீச்சுவதாக அறிவித்தது. இதனையடுத்து இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.
இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ஆதர்ஷ் சிங் - அர்ஷின் குல்கர்னி ஜோடி களமிறங்கிய நிலையில், அர்ஷின் குல்கர்னி 7 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த முஷீர் கான் 3 ரன்னுக்கு நடையைக் கட்டினார்.
இதன்பிறகு, தொடக்க வீரர் ஆதர்ஷ் சிங் கேப்டன் உதய் சஹாரனுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைத்தது. இதில், ஆதர்ஷ் சிங் 67 பந்துகளில் அரைசதம் விளாசினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவர் 76 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
அரைசதம் அடித்த கேப்டன் உதய் சஹாரன் 64 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அடுத்து வந்த வீரர்களில் பிரியன்ஷு மோலியா 23 ரன்னுக்கும், ஆரவெல்லி அவனிஷ் 23 ரன்னுக்கும், சச்சின் தாஸ் 26 ரன்னுக்கும் அவுட் ஆகினர்.
இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 251 ரன்கள் எடுத்தது. இதனால், வங்கதேச அணிக்கு 252 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வங்கதேச அணியில் அதிகபட்சமாக மருஃப் மிருதா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
வங்கதேசம் பேட்டிங்
252 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணியில் தொடக்க வீரர்கள் அஷ்கியூர் ரஹ்மான் ஜஸ்ஹன் ஆலம் ஆகியோர் தலா 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த சவுத்ரி ரிஸ்வான் 6 பந்துகளை சந்தித்து ரன் கணக்கை தொடங்காமலே வெளியேறினார். இதனால் வங்கதேச அணி 41 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், 4-வது விக்கெட்டுக்கு, அரிஃபுல் அஸ்லாம் சிறிது நேரம் தாக்குபிடித்து ஆடினார்.
அரைசதத்தை நெருங்கிய அவர் 71 பந்துகளில், 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அரர் அமீன் 5 ரன்களில் வெளியேறிய நிலையில், ரஹ்மான் ராபி 4 ரன்களிலும் ஆட்டமிழந்தார். அரைசதம் கடந்த முகது ஷிகாப் 54 ரன்களில் வெளியேறிய நிலையில், போசன், இம்மோன் ஆகியோர் ரன் கணக்கை தொடங்காமலே ஆட்டமிழந்த நிலையில், மிர்தா ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார்.
இதனால் வங்கதேச அணி 167 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால், இந்திய அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் சவுமி பாண்டே 4 விக்கெட்டுகளும், முஷீர்கான் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: India vs Bangladesh Live Score, U19 World Cup 2024
இரு அணிகளின் ஆடும் 11 வீரர்கள் பட்டியல்:
வங்கதேசம் அணி
ரஹ்மான் ஷிப்லி (விக்கெட் கீப்பர்), ஜிஷான் ஆலம், சௌத்ரி முகமது ரிஸ்வான், அரிஃபுல் இஸ்லாம், அஹ்ரார் அமீன், முகமது ஷிஹாப் ஜேம்ஸ், மஹ்ஃபுஸூர் ரஹ்மான் ரபி (கேப்டன்), ஷேக் பாவேஸ் ஜிபோன், முகமது இக்பால் ஹொசைன் எம்மோன், மஹோருட் எமன், மருஃப் மிருதா, ரோஹனத் டவுல்லா போர்சன்
இந்திய அணி
ஆதர்ஷ் சிங், அர்ஷின் குல்கர்னி, முஷீர் கான், உதய் சஹாரன் (கேப்டன்), சச்சின் தாஸ், பிரியன்ஷு மோலியா, ஆரவெல்லி அவனிஷ் (விக்கெட் கீப்பர்), முருகன் அபிஷேக், சௌமி பாண்டே, ராஜ் லிம்பானி, நமன் திவாரி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.