Advertisment

IND-W vs BAN-W: ரேணுகா, ராதா மிரட்டல் பவுலிங்; மந்தனா, ஷஃபாலி அசத்தல் பேட்டிங்... வங்கதேசத்தை பந்தாடி இறுதிப் போட்டிக்குள் நுழைந்த இந்தியா!

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் முதலாவது அரைஇறுதியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, முன்னாள் சாம்பியனான வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
India vs Bangladesh LIVE Score Womens Asia Cup 1st Semi Final 2024 match today ind women vs ban women latest scorecard updates Tamil News

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்: முதலாவது அரைஇறுதி போட்டி - இந்தியா vs வங்கதேசம் மோதல்

9-வது பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் இலங்கையின் தம்புல்லாவில் நடந்து வருகிறது. இந்த தொடருக்கான லீக் சுற்று முடிவடைந்த நிலையில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. 

Advertisment

இந்நிலையில், இந்த தொடரில் இன்று அரைஇறுதி ஆட்டங்கள் நடக்கின்றன. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் முதலாவது அரைஇறுதியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, முன்னாள் சாம்பியனான வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. 

ஆங்கிலத்தில் படிக்கவும்: India vs Bangladesh LIVE Score Women’s Asia Cup Semi Final 2024

ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், நேபாளம் ஆகிய அணிகளை பந்தாடி 'ஏ' பிரிவில் முதலிடம் பிடித்து அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தது. மறுபுறம், வங்கதேசம் 'பி' பிரிவில் 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 2-வது இடத்தை பெற்று அரைஇறுதியை எட்டியது.

இந்த நிலையில், இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச பெண்கள் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதனால், இந்திய பெண்கள் அணி முதலில் பவுலிங் செய்தது. வங்கதேச அணி வீராங்கனைகள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக பொறுப்புடன்  ஆடிய கேப்டன் நிகர் சுல்தானா 32 ரன்கள் எடுத்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்கு வங்கதேச அணி 80 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் மிரட்டலான பவுலிங்கை வெளிப்படுத்திய ரேணுகா சிங், ராதா யாதவ் தலா 3 விக்கெட்டையும்,  தீப்தி சர்மா, பூஜா வஸ்த்ரகர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தினர்.

இதனைத் தொடர்ந்து, 81 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய இந்திய அணியில், தொடக்க வீராங்கனைகளாக களமாடி ஷபாலி வர்மா மற்றும் ஸ்மிரிதி மந்தனா ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் பொறுப்புடன் ஆடிய நிலையில், ஸ்மிரிதி மந்தனா சிறப்பாக ஆடி அரைசதம் விளாசினார். இறுதியில், இந்திய அணி 11 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 83 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இரு அணிகளின் ஆடும் லெவன் வீராங்கனைகள் பட்டியல்:- 

இந்தியா: ஷபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, உமா செத்ரி, ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), தீப்தி சர்மா, பூஜா வஸ்த்ரகர், ராதா யாதவ், தனுஜா கன்வர், ரேணுகா தாக்கூர் சிங். 

வங்கதேசம்: திலாரா அக்டர், முர்ஷிதா காதுன், நிகர் சுல்தானா (கேப்டன் / விக்கெட் கீப்பர்), ருமானா அகமது, இஷ்மா தன்ஜிம், ரிது மோனி, ரபேயா கான், ஷோர்னா அக்டர், நஹிதா அக்டர், ஜஹானாரா ஆலம், மருபா அக்டர். 

இரவு 7 மணிக்கு நடைபெறும் மற்றொரு அரைஇறுதியில் இலங்கை - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Asia India Vs Bangladesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment