/indian-express-tamil/media/media_files/X8TowhEOgVZrqhGFmQdu.jpg)
India vs Bangladesh Live Streaming, 1st T20I: இந்தியா vs வங்கதேசம் முதலாவது டி20 அக்டோபர் 6, ஞாயிற்றுக்கிழமை இரவு 7:00 மணிக்கு (இந்திய நேரப்படி) தொடங்குகிறது.
India vs Bangladesh Live Streaming, 1st T20I: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் வங்கதேச கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் இந்தியாவிடம் 2-0 என்கிற கணக்கில் டெஸ்ட் தொடரை பறிகொடுத்த வங்கதேசம், அடுத்ததாக டி20 தொடரில் மோதவுள்ளது.
இந்நிலையில், இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியரில் உள்ள நியூ மாதவராவ் சிந்தியா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி டி20 தொடரையும் வெல்லுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் இந்திய அணி இருக்கிறது. டெஸ்ட் தொடரை இழந்த நஜூமுல் உசேன் ஷான்டோ தலைமையிலான வங்கதேச அணி டி20 தொடரை வெல்ல தீவிரம் காட்டும்.
இந்தியா vs வங்கதேச முதலாவது டி20 எப்போது தொடங்கும்?
இந்தியா vs வங்கதேசம் முதலாவது டி20 அக்டோபர் 6, ஞாயிற்றுக்கிழமை இரவு 7:00 மணிக்கு (இந்திய நேரப்படி) தொடங்குகிறது.
இந்தியா vs வங்கதேசம் முதலாவது டி20 போட்டி எங்கு நடைபெறும்?
இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் மோதும் முதல் டி20 போட்டி குவாலியரில் உள்ள ஸ்ரீமந்த் மாதவராவ் சிந்தியா மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்தியா vs வங்கதேசம் முதலாவது டி20 போட்டியின் நேரடி ஒளிபரப்பை எங்கே பார்ப்பது?
இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் மோதும் டி20 தொடரை ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் ஜியோ சினிமாவில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.