India vs Bangladesh Live Streaming : ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் இன்று (21.9.18) இந்தியா வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. கிரிக்கெட் ரசிகர்களே இன்று நடைபெறும் இந்தியா vs வங்க தேசம் அணிகள் போட்டியை மொபைலில் எளிதாக காணலாம்.
14வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவருகிறது. சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய 4 அணிகளும் தகுதி பெற்றுள்ளன. சூப்பர் 4 சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்றொரு அணியுடன் தலா ஒருமுறை மோதும். சூப்பர் 4 சுற்றில் இன்று இந்தியா - வங்கதேச அணிகள் மோதுகின்றன. மற்றொரு போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
When and where to watch Asia Cup India vs Bangladesh ODI Cricket Match online and Live Streaming : மொபைலில் லைவ்!
இன்று நடைபெறும் போட்டியில் இந்திய அணியை பொருத்தவரையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தினேஷ் கார்த்திக் இந்த போட்டியிலும் களமிறக்கப்படுவது உறுதியாகியுள்ளது. ஹர்திக் பாண்டியா காயத்தால் தொடரை விட்டு வெளியேறியுள்ளதால் அவரது இடத்தில் கலீல் அகமது அல்லது தீபக் சாஹர் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை வெளியான தகவல் அடிப்படையில் இந்திய அணி 6 பேட்ஸ்மேன்கள் மற்றும் 5 பவுலர்கள் என்ற கலவையில் களம் காணும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. கேதர் ஜாதவ் பந்து வீச்சில் எதிரணிகளை அச்சிறுத்தி வருகிறார்.
எங்கே? எப்படி?
இந்தியா-வங்க தேசம் கிரிக்கெட் போட்டி தொடங்கும் நேரம்: செப்டம்பர் 21 (இன்று) இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு துபாயில் உள்ள துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் போட்டி தொடங்குகிறது.
இந்தியா-வங்கதேசம் கிரிக்கெட் டி.வி. ஒளிபரப்பு: இன்றைய போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனல்களில் காணலாம். தவிர, மொபைலில் ஹாட்ஸ்டார் ‘ஆப்’பிலும் ‘லைவ்’வாக பார்க்கலாம்!
இத்துடன் இந்திய எக்ஸ்பிரஸ் தமிழிலும் உங்களுக்கான லைவ் அப்டேட் காத்துக் கொண்டிருகிறது.