/indian-express-tamil/media/media_files/WbpGUNyFSAeB2t6THSIH.jpg)
டி20 உலகக் கோப்பை: இந்தியா - கனடா அணிகள் மோதல்
India vs Canada Live Score, T20 World Cup 2024 Match Today: 9-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் கடந்த 2 ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் லீக் சுற்று போட்டிகள் நிறைவடையவிருக்கும் நிலையில், ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா - கனடா அணிகளுக்கு இடையிலான 33-வது லீக் ஆட்டம் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடெர்ஹில் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்க இருந்தது
இந்த நிலையில், இந்த ஆட்டம் மழை காரணமாக டாஸ் கூட போடப்படாமல் ரத்து செய்யப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது. இதன் மூலம் ஏ பிரிவின் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ள இந்திய அணி தோல்வியே சந்திக்காமல் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: ‘Imported’ cricketers: Behind United States’ success in T20 World Cup
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.