Advertisment

IND vs ENG 1st Test: 3 ஸ்பின்னர்களுடன் களமாடும் இங்கி.,: இந்தியாவின் ஆடும் லெவன் எப்படி இருக்கும்?

இந்திய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் களத்தில் 'விளையாடும் 11' பேர் கொண்ட அணியை இங்கிலாந்து அணி டெஸ்ட் போட்டிக்கு ஒரு நாள் முன்னதாகவே அறிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
India vs England 1st Test Hyderabad playing XI in tamil

இடது கை சுழற்பந்து வீச்சாளர்களான ஜாக் லீச் மற்றும் டாம் ஹார்ட்லி மற்றும் லெக் ஸ்பின்னர் ரெஹான் அகமது ஆகியோர் விளையாட உள்ளனர்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

India vs England: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. இதில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை வியாழக்கிழமை முதல் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் தொடங்குகிறது.

Advertisment

இந்நிலையில், களத்தில் 'விளையாடும் 11' பேர் கொண்ட அணியை இங்கிலாந்து அணி டெஸ்ட் போட்டிக்கு ஒரு நாள் முன்னதாகவே அறிவித்துள்ளது. அவர்களின் பந்துவீச்சு வரிசையில் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களையும், ஒரு வேகப்பந்து வீச்சாளர்களையும் தேர்வு செய்துள்ளனர். வேகப்பந்து வீச்சாளராக மார்க் வுட் களமாடுவார். அதே நேரத்தில், இடது கை சுழற்பந்து வீச்சாளர்களான ஜாக் லீச் மற்றும் டாம் ஹார்ட்லி மற்றும் லெக் ஸ்பின்னர் ரெஹான் அகமது ஆகியோர் விளையாட உள்ளனர். 

முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரரான மான்டி பனேசர் நமது இதழுக்கு அளித்த பேட்டியில், இளம் வீரரான டாம் ஹார்ட்லியை உயர்வாக மதிப்பிட்டு அவரை இந்திய சுழற்பந்து வீச்சாளரான அக்சர் படேலுடன் ஒப்பிட்டு பேசினார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “டாம் ஹார்ட்லி அக்சரைப் போன்ற பந்து வீச்சாளர். அவர் குறித்து அக்சருக்குத் தெரியும். அவர் டர்னிங் இல்லாத பந்து வீச்சுக்கு பேட்டரை செட் செய்ய பார்க்கிறார். பின்னர் நீங்கள் அவரது வித்தியாசமான திரும்பும் பந்துகளை வீசுகிறார். அவை ஸ்கொயராக திரும்பும். அவர் பந்தை கொஞ்சம் கொஞ்சமாக திரும்ப வைப்பார். ஜடேஜாவைப் போல் கூர்மையாக பந்துகள் திரும்பாது. அதனால்தான் அவை ஒன்றுக்கொன்று வித்தியாசமாக உள்ளது. ஒன்று உயரமாகவும், மற்றொருன்று ஷார்ட் ஆகவும் வரும்" என்று கூறினார். 

ஹாரி புரூக் அணியில் இல்லாத நிலையில், பென் ஃபோக்ஸ் விக்கெட் கீப்பராகவும், ப்ரூக்கிற்கு பதிலாக ஜானி பேர்ஸ்டோ ஸ்பெஷலிஸ்ட் பேட்டராகவும் விளையாடுவார்கள்.

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணியின் விளையாடும் லெவன்: ஜாக் கிராலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், பென் ஃபோக்ஸ், ரெஹான் அகமது,  ஜாக் லீச், டாம் ஹார்ட்லி, மார்க் வூட். 

இந்தியாவின் ஆடும் லெவன் எப்படி இருக்கும்? 

கோலிக்கு பதிலாக ரஜத் படிதார் 

இந்தியாவைப் பொறுத்தவரை, முன்னணி வீரரான விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக முதல் இரண்டு டெஸ்டுகளுக்கு ஓய்வு கோரினார். அதனால் அவருக்குப் பதிலாக ரஜத் படிதார் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

முதல் டெஸ்டில் சுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் கே.எல் ராகுல் ஆகியோர் இந்தியாவின் மிடில் ஆர்டரை உருவாக்குவார்கள் என்றாலும், கடைசி நிமிடத்தில் காயம் ஏற்பட்டாலோ அல்லது மூளையதிர்ச்சிக்கு மாற்றாகப் பயன்படுத்துவதற்கோ அணியில் வேறு பேக்-அப் பேட்ஸ்மேன் இல்லை.

காயத்துடன் கிட்டத்தட்ட 8 மாதங்கள் கழித்து திரும்பியுள்ள ரஜத் படிதார், இந்திய அணி நிர்வாகம் மற்றும் தேர்வாளர்கள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார் என்பது புரிந்து கொள்ளப்படுகிறது. மத்தியப் பிரதேச அணிக்காக விளையாடி வரும் அவர் அவரது சிறப்பான ஆட்டத்திற்கு பெயர் பெற்றவர். அவர் நம்பர்.4 இல் பேட்டிங் செய்யப் பழகிவிட்டார். மேலும் உள்நாட்டு போட்டிகளில் உறுதியான பேட்ஸ்மேனாகவும் இருந்து வருகிறார். பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுக்க விரும்புகிறவராகவும் உள்ளார். 

இந்திய அணியின் உத்தேச விளையாடும் 11 வீரர்கள்: ரோகித் சர்மா, யஷவி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், கே.எஸ் பாரத், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஆர் அஷ்வின், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

ஆங்கிலத்தில் படிக்கவும்: India vs England: Ben Stokes picks three spinners in playing XI for 1st IND vs ENG Test in Hyderabad

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

India Vs England
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment