/tamil-ie/media/media_files/uploads/2018/08/s875.jpg)
India vs England 1st test cricket match 2018: இந்தியா vs இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டி
India vs England 1st test:
இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ( India vs England 1st test) எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
இந்திய அணி கடைசியாக கடந்த 2014ம் ஆண்டு இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்ற போது, 3-1 என டெஸ்ட் தொடரை மோசமாக இழந்தது.
குறிப்பாக, விராட் கோலி 1, 8, 25, 0, 39, 28, 0, 7, 6, 20 என ஐந்து டெஸ்ட் போட்டியில், 10 இன்னிங்ஸில் மொத்தமாக 134 ரன்களே எடுத்தார்.
இந்நிலையில், நான்கு வருடங்களுக்கு பிறகு, இந்திய அணி மீண்டும் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டியில் கால் பதிக்கிறது.
ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில், இன்று முதல் போட்டி தொடங்குகிறது. அனைவரது கண்களும் கேப்டன் விராட் கோலியின் மீது உள்ளன என்றால் அது மிகையாகாது.
டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ரூட் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இங்கிலாந்து அணி 34 ஓவர்கள் முடிவில், 1 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் எடுத்துள்ளது. குக் 13 ரன்னில், அஷ்வின் ஓவரில் போல்டானார்.
India vs England 1st test cricket match watch live score and streaming online: இப்போட்டியின் Live Score Card-ஐ tamil.indianexpress.comல் நீங்கள் உடனுக்குடன் காணலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us