Advertisment

IND vs ENG 1st Test: இந்தியா - இங்கிலாந்து மோதும் டெஸ்ட் போட்டியை ஆன்லைனில் லைவ் ஆக பார்ப்பது எப்படி?

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை வியாழக்கிழமை முதல் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் தொடங்குகிறது.

author-image
WebDesk
New Update
India vs England 1st Test match time live telecast and streaming details in tamil

இந்தியா vs இங்கிலாந்து முதலாவது டெஸ்ட் போட்டி: நேரலை ஒளிபரப்பு மற்றும் லைவ் ஸ்ட்ரீமிங் விவரங்கள்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

India vs England 1st Test Live Streaming: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. இதில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை வியாழக்கிழமை முதல் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் தொடங்குகிறது.

Advertisment

சமீபத்திய ஆண்டுகளாக 'பேஸ்பால்' கிரிக்கெட்டை இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது. அதனையே பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்திய ஆடுகளங்களில் செயல்படுத்த நினைக்கும். மறுபுறம், ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சொந்த மண்ணில் தனது ஆதிக்கத்தை தொடர முயலும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் டெஸ்ட் போட்டியில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது. 

நேருக்கு நேர்

இந்தியா - இங்கிலாந்து அணிகள் 1932 முதல் 131 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளன. ஒட்டுமொத்தமாக இங்கிலாந்து 50 வெற்றிகளுடன் முன்னிலை வகிக்கிறது. அதே நேரத்தில் இந்தியா 31 வெற்றிகளைப் பெற்றுள்ளது. 

இந்தியாவில் நடைபெற்ற 54 போட்டிகளில் இந்தியா 22 இல் வெற்றி பெற்றுள்ளது, 14 போட்டிகளில் இங்கிலாந்து வென்றுள்ளது. 28 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. டெஸ்ட் தொடர் வெற்றிகளைப் பொறுத்த வரையில், இங்கிலாந்து 19 தொடர்களைக் கைப்பற்றியுள்ள நிலையில், இந்தியா 11 தொடர்களை வென்றுள்ளது.

இந்தியா vs இங்கிலாந்து இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி மற்றும் டாஸ் நேரம், நேரலை ஒளிபரப்பு மற்றும் ஸ்ட்ரீமிங் விவரங்கள்:-

இந்தியா vs இங்கிலாந்து முதலாவது டெஸ்ட் போட்டி எப்போது தொடங்கும்?

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை வியாழக்கிழமை (ஜனவரி 25-ம் தேதி) தொடங்குகிறது.

இந்தியா vs இங்கிலாந்து முதலாவது டெஸ்ட் போட்டி நடக்கும் இடம் எது?

ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது.

இந்தியா vs இங்கிலாந்து முதலாவது டெஸ்ட் நேரடி டாஸ் எப்போது நடக்கும்?

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் காலை 9:00 மணிக்கு போடப்படும். 

இந்தியா vs இங்கிலாந்து முதலாவது டெஸ்ட் ஹைதராபாத்தில் எப்போது தொடங்கும்?

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி காலை 9:30 மணிக்கு தொடங்கும். 

இந்தியா vs இங்கிலாந்து முதலாவது போட்டியை எந்த டிவி சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பும்?

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் போட்டிகளை நேரலையில் ஸ்போர்ட்ஸ் 18 HD/SD ஒளிபரப்பு செய்கிறது. 

இந்தியா vs இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டியின் ஆன்லைனில் லைவ் ஆக எப்படி பார்ப்பது?

இந்தியாவில் நடக்கும் இந்தியா மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகளை ஆன்லைனில் ஜியோ சினிமாவில் நேரலையில் பார்க்கலாம். 

ஆங்கிலத்தில் படிக்கவும்: India vs England Live Streaming, 1st Test: When and where to watch IND vs ENG 1st Test?

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

India Vs England
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment