IND vs ENG LIVE Score, 2nd ODI: ‘ஹிட்மேன்’ ரோகித் சர்மா அதிரடி சதம்... இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1:30 ஒடிசா மாநிலம் கட்டாக்கில் தொடங்கி நடைபெறுகிறது.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1:30 ஒடிசா மாநிலம் கட்டாக்கில் தொடங்கி நடைபெறுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
India vs England 2nd ODI Live Cricket Score updates  Commentary 2025 Barabati Stadium Cuttack Tamil News

இந்தியா - இங்கிலாந்து, 2-வது ஒருநாள் போட்டி லைவ் ஸ்கோர், கட்டாக்

இந்தியாவுக்கு சுற்றுப்பயணமாக வருகை தந்துள்ள ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், முதலில் டி20 தொடர் நடைபெபெற்ற நிலையில், தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

Advertisment

இந்நிலையில், இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. அதன்படி, இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று வியாழக்கிழமை நாக்பூரில் நடைபெற்றது. மிகவும் பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இதன்  மூலம், தொடரில் இந்தியா 1-0 என்கிற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது. இந்த நிலையில், இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1:30 ஒடிசா மாநிலம் கட்டாக்கில் தொடங்கி நடைபெறுகிறது. 

முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்கிய இருப்பதால் அதே உற்சாகத்துடன் இன்றைய ஆட்டத்திலும் இந்தியா களமாடும். அதேநேரத்தில், தொடரில் கம்பேக் கொடுக்க இங்கிலாந்து கடுமையாக போராடும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது. 

Advertisment
Advertisements

இந்த சூழலில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பிலிப் சால்ட் மற்றும் பென் டக்கெட் ஆகியோர் களமிறங்கியுள்ளனர். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இருவரும் அணியின் ரன்களை கணிசமாக உயர்த்தியுள்ளனர். அதன்படி, பிலிப் சால்ட் 26 பந்துகளில் 24 ரன்களும், பென் டக்கெட் 34 பந்துகளில் 48 ரன்களும் எடுத்துள்ளனர். 10 ஓவர்களின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 75 ரன்களை இங்கிலாந்து அணி குவித்தது.

இந்நிலையில், 26 ரன்களை எட்டிய பிலிப் சால்ட், வருண் சக்ரவர்த்தியின் பந்து வீச்சில் தனது விக்கெட்டை இழந்தார். எனினும், அதிரடியாக விளையாடிய பென் டக்கெட் அரை சதம் விளாசினார். 56 பந்துகளில் 65 ரன்கள் எடுத்த பென் டக்கெடின் விக்கெட்டை, ரவீந்திர ஜடேஜா வீழ்த்தினார். அடுத்ததாக களமிறங்கிய ஹாரி புரூக், தனது பங்குக்கு 31 ரன்கள் எடுத்து ஹர்ஷித் ராணா பந்துவீச்சில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.

நிதானமாக ஆடிய ஜோ ரூட், 72 பந்துகளில் 69 ரன்கள் குவித்து அணியின் ரன்கள் உயர்வதற்கு உதவினார். இவரது விக்கெட்டை ரவீந்திர ஜடேஜா வீழ்த்தினார். மற்றொரு புறம் அணியின் அணியின் கேப்டனான ஜாஸ் பட்லர் தனது பங்குக்கு 34 ரன்கள் குவித்தார். இதேபோல்,  லியாம் லிவிங்ஸ்டோனும் 32 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினார்.

எனினும், அணியின் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஜேமி ஓவர்டன் 6 ரன்களிலும், கஸ் அட்கின்சன் 3 ரன்களிலும், அடில் ரஷித் 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மார்க் வூட் ரன்கள் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். இறுதியாக, 49.5 ஓவர்களில் இங்கிலாந்து அணி 304 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணிக்கு 305 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியா தரப்பில் இருந்து ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளும், முகமது ஷமி, ஹர்ஷித் ராணா, ஹர்திக் பாண்டியா மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

இதைத் தொடர்ந்து, 305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, சுப்மன் கில் களமிறங்கினர். இருவரும் சிக்சர், ஃபோர் என்று அதிரடியாக அடித்து ஆடினார்கள். 7வது ஓவரின்போது, மைதானத்தில் மின்விளக்கு பழுதானதால் போதிய வெளிச்சமின்மையால் சிறிது நேரம் போட்டி நிறுத்தப்பட்டது. மீண்டும் போட்டி தொடங்கியதும், இருவரின் அதிரடியும் தொடர்ந்தது. 

அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா, அரைசதம் அடித்தார். அவரைத் தொடர்ந்து அரைசதம் அடித்த சுப்மன் கில், 52 பதுகளில் 60 ரன்கள் எடுத்த நிலையில், ஓவர்டான் பந்தில் போல்ட் அவுட் ஆனார். அடுத்து வந்த விராட் கோலி 5 ரன்கள் மட்டுமே எடுத்து ஆதில் ரஷித் பதில் பில் சால்ட் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து, ஷ்ரேயஸ் ஐயர் பேட்டிங் செய்ய வந்தார்.

தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 76 பந்துகளில் சதம் அடித்தார். தொடர்ந்து அடித்து ஆடிய ரோகித் சர்மா  90 பந்துகளில் 7 சிக்சர் 9 பவுண்டரிகளுடன் 119 ரன்கள் எடுத்திருந்தபோது, லியாம் லிவிங்ஸ்டோன் பந்தில் ஆதில் ரஷித்  இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து, வந்த அக்சர் படேல், ஷ்ரேயஸ் ஐயருடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடினர்.

ஆனால், எதிர்பாரத விதமாக,  ஷ்ரேயஸ் ஐயர் 44 ரன்கள் எடுத்திருந்தபோது, ஜோஸ் பட்லரால் ரன் அவுட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார். அடுத்து, வந்த கே.எல். ராகுல் 10 ரன்கள் எடுத்திருந்தபோது, ஓவர்டான் பந்தில் பில் சால்ட் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த ஹர்திக் பாண்டியாவும் 10 ரன்கள் எடுத்திருந்தபோது, கஸ் அக்கின்சன் பந்தில் ஓவர்டான் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து, ரவீந்திர ஜடேஜா அக்சர் படேல் உடன் இணைந்து இந்திய அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். 44.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் எடுத்து இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. அக்சர் படேல் 43 பந்துகளில் 41 ரன்களும் ரவீந்திர ஜடேஜா 7 பந்துகளில் 11 ரன்களும் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றனர்.

இரு அணி வீரர்கள் பட்டியல்: 

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சுப்மன் கில், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, வருண் சக்ரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர், ரிஷப் பண்ட், அர்ஷ்தீப் சிங்

இங்கிலாந்து: பென் டக்கெட், பிலிப் சால்ட் (விக்கெட் கீப்பர்), ஜோ ரூட், ஹாரி புரூக், ஜோஸ் பட்லர் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், ஜேக்கப் பெத்தேல், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், சாகிப் மஹ்மூத், கஸ் அட்கின்சன், மார்க் வூட், ஜேமி ஓவர்டன், ஜேமி ஸ்மித். 

Jos Buttler Rohit Sharma India Vs England

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: