Indian England 2-nd Test Match Update : இந்தியா இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் கடைசி நாள் ஆட்டத்தில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. நாட்டிங்காமில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டி ‘டிரா’வில் முடிந்தது.
இதையடுத்து, இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஆகஸ்ட் 12ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ரோகித் சர்மாவும் கே.எல்.ராகுலும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினார்கள். இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 276 ரன்கள் எடுத்திருந்த நிலையில், முதல் நாள் ஆட்ட நேரம் முடிவடைந்தது. கே.எல்.ராகுல் 127 ரன்கள் உடன் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார்.
இதையடுத்து ஆகஸ்ட் 13ம் தேதி இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே கே.எல்.ராகுல் 129 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்தும் இந்திய 364 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணி தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து, தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 2வது நாள் ஆட்ட நேர முடிவில், 3 விக்கெட்டுகளை இழந்து 119 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் ரூட் 48 ரன்களுடனும் பேர்ஸ்டோ 6 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து இன்று தொடங்கிய 3-வது நாள் ஆட்டத்தில் தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அரைசதம் கடந்த பேர்ஸ்டோ 57 ரன்களில் ஆட்டமிழந்தார். பேர்ஸ்டோ ரூட் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 121 ரன்கள் சேர்த்தது. அடுத்து களமிறங்கிய பட்லர் 23 ரன்களிலும், மொயின் அலி 27 ரன்களிலும், சாம் கரன் 2 ஒல்லி ராபின்சன் 6 ரன்களிலும் பெவிலியன் திரும்பியனர். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் நங்கூரம் போல் நின்ற கேப்டன் ரூட் சதம் கடந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
சற்றுமுன்வரை இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 123 ஓவர்களில் 8 விக்கெட் 366 ரன்கள் குவித்துள்ளது. ரூட் 165 ரன்களுடனும், மார்க்வுட் 3 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி கைவசம் 2 விக்கெட்டுகள் உள் நிலையில், இந்தியாவை விட 2 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்த போட்டியில் இன்னும் 2 நாட்கள் மீதமுள்ள நிலையில், எந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்பது கணிக்க முடியாத ஒன்றாக உள்ளது.
3வது நாள் ஆட்ட முடிவில், இங்கிலாந்து அணி 128 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 391 ரன்கள் எடுத்தது. இதன் மூலம், இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ் முடிவில், 27 ரன்கள் முன்னிலையில் இருந்தது.
இதனை தொடர்ந்து ஆகஸ்ட் 15ம் தேதி 4வது நாள் போட்டியில், இந்தியா 2வது இன்னிங்சை விளையாடியது. இதில், தொடக்க ஆட்டக்காரர்களான கே.எல். ராகுல் (5), ரோகித் (21) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து விளையாடிய புஜாரா (45), கோலி (20) ரன்கள் எடுத்து வெளியேறினர். ரஹானே 61 ரன்கள் எடுத்தார். ஜடேஜா 3 ரன்களில் போல்ட் ஆனார். ரஹானே அவுட் ஆன பிறகு, ரிஷப் பண்ட் 14 ரன்களுடனும் இஷாந்த் சர்மா 4 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.
4வது நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி 82 ஓவர்களுக்கு, 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா 154 ரன்கள் முன்னிலையில் இருந்தது. .
5வது நாள் ஆட்டம் கடைசி நாள் ஆட்டம் என்பதால், இந்திய அணி 6 விக்கெட்டுகளை பறிகொடுத்து இருந்ததால் விரைவில் மற்ற 4 விக்கெட்டுளை இழக்கும் என்று எதிர்பார்த்த இங்கிலாந்து அணிக்கு ஷமியும் புர்மாவும் சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார்கள். 8வது விக்கெட்டுக்கு இருவரும் 77 ரன்கள் குவித்தனர். இதில் ஷமி அதிரடியாக விளையாடி 70 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார். 8 விக்கெட் இழப்புக்கு 298 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இந்திய அணி டிக்ளேர் செய்தது. இதனால், இந்திய அணி 271 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணி முதல் ஓவரில் இருந்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணி 2வது இன்னிங்ஸில் 51.5 ஓவர்களை சந்தித்து 120 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. இதனால், இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபாரா வெற்றி பெற்றது. இந்திய அணியின் வேகப்பந்து விச்சாளர்கள் முஹமது சிராஜ், பும்ரா வேகப்பந்து வீச்சு புயலில் இங்கிலாந்து அணி நிலைகுலைந்து போனது. 2வது இன்னிங்ஸில் சிறப்பாக பந்து வீசிய முஹமது சிராஜ் 4 விக்கெட்டுகளும் பும்ரா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”