Advertisment

India vs England 2nd Test, Day 3 Live Streaming: பதிலடி கொடுக்குமா இந்தியா?

India Vs England 2nd Test Live Cricket Score Streaming: இன்று காலை முதல் லண்டனில் வெயில் அடித்து வருவதால், பிட்ச் பேட்டிங்கிற்கு சப்போர்ட் செய்ய அதிக வாய்ப்புள்ளது. எனவே, இந்திய பவுலர்களுக்கு இது கடும் சோதனையாக இருக்கக் கூடும்.

author-image
WebDesk
Aug 11, 2018 15:34 IST
India Vs England 2nd Test Live Score:

India vs England 2nd Test, Day 3 Live Streaming: இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி, லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில், கடந்த 9ம் தேதி தொடங்கியது. ஆனால், கனமழை பெய்ததால் முதல் நாள் ஆட்டம் முற்றிலும் தடைப்பட்டது. நேற்று, 2ம் நாள் ஆட்டம் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், பீல்டிங்கை தேர்வு செய்தார்.

Advertisment

இதையடுத்து, முதலில் பேட் செய்த இந்திய அணி, 107 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக, ரவிச்சந்திரன் அஷ்வின் 29 ரன்களும், கேப்டன் கோலி 23 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில், ஆண்டர்சன் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து, மூன்றாம் நாள் ஆட்டமான இன்று, இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சை தொடங்குகிறது. பிட்ச் நன்றாக ஸ்விங் ஆவதால், அதனை பயன்படுத்தி, இந்திய பவுலர்களும் இங்கிலாந்திற்கு ஆட்டம் காட்ட வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதேசமயம், இன்று காலை முதல் லண்டனில் வெயில் அடித்து வருவதால், பிட்ச் பேட்டிங்கிற்கு சப்போர்ட் செய்ய அதிக வாய்ப்புள்ளது. எனவே, இந்திய பவுலர்களுக்கு இது கடும் சோதனையாக இருக்கக் கூடும்.

மேலும் படிக்க: இது அடுக்குமா கோலி? பொங்கி வந்த புஜாராவை திருப்பி அனுப்பலாமா?

India vs England 2nd Test, Day 3 Live Streaming: இப்போட்டியின் Live Cricket ScoreCard-ஐ இதே செய்தியில் நீங்கள் உடனுக்குடன் கண்டு ஸ்கோர் அப்டேட்டுகளை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment