இந்தியாவுக்கு சுற்றுப்பயணமாக வருகை தந்துள்ள ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், முதலில் நடந்த டி20 தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
இதையடுத்து, இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான முதல் மற்றும் 2-வது போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம், 2-0 என்ற கணக்கில் தொடரையும் இந்தியா கைப்பற்றியது.
இந்நிலையில், இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) பிற்பகல் முதல் தொடங்கி நடக்கிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் செய்வதாக அறிவித்தது. இதனையடுத்து, இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடி வருகிறது.
இந்த நிலையில், இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியின் நேரலை இந்தியில் மட்டும் ஹாட்ஸ்டார் செயலி ஒளிபரப்பு செய்ததால் ரசிகர்கள் பலரும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். பலரும் ஹாட்ஸ்டாரை வறுத்தெடுத்து வருகிறார்கள்.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் தொடரை இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் நிறுவனம் ஒளிபரப்பி வருகிறது. தொலைக்காட்சியிலும், இணைய தளம் மற்றும் மொபைல் ஆப்களில் நேரலையில் ஒளிபரப்பும் உரிமையை அந்த நிறுவனம் தான் வைத்துள்ளது. அதன்படி, இந்தியா - இங்கிலாந்து அணிகள் தொடரை டி.வி-யில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலிலும், இணைய தளத்தில் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஆகியவையும் ஒளிபரப்பி வருகிறது.
டி.வி சேனல்களில் ஆங்கிலம், தமிழ் மற்றும் பிற மொழிகளில் போட்டியின் வர்ணனை மற்றும் ஸ்கோர் கார்டுகளை பார்க்கும் வசதி இருக்கிறது. இதே வசதி டிஸ்னி ஹாட்ஸ்டாரிலும் உள்ளது. ஹாட்ஸ்டாரில் கிரிக்கெட் போட்டிகள் பொதுவாக ஆங்கிலம், ஹிந்தி, மராத்தி, பெங்காலி, தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றன. இதன் மூலம் இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்கள் தங்கள் விருப்பமான மொழியில் வர்ணனையை அனுபவிக்க முடியும்.
இந்நிலையில், இன்றைய இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நேரலையின் போது, ரசிகர்கள் இந்தியைத் தவிர மற்ற எந்த மொழிகளிலும் மாற்ற முடியவில்லை. ஹாட்ஸ்டாரில் இயல்பு மொழியாக இந்தி இருக்கும். அதனை ரசிகர்கள் தங்களது மொழியில் தேர்வு செய்து மாற்றிக் கொள்ளலாம்.
ஆனால், ஹாட் ஸ்டாரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வெறும் இந்தியில் மட்டும் தான் கிரிக்கெட் வர்ணனை மற்றும் வீரர்களின் பெயர்களை பார்க்க முடிந்துள்ளது. இதனால், ரசிகர்கள் கடும் எரிச்சலடைந்தனர். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டு ஹாட்ஸ்டாரை வறுத்தெடுத்து வருகிறார்கள்.
IND vs Eng: இந்தியில் கிரிக்கெட் நேரலை... ஹாட்ஸ்டாரை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!
இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியின் நேரலை இந்தியில் மட்டும் ஹாட்ஸ்டார் செயலி ஒளிபரப்பு செய்ததால் ரசிகர்கள் பலரும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். பலரும் ஹாட்ஸ்டாரை வறுத்தெடுத்து வருகிறார்கள்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.