/tamil-ie/media/media_files/uploads/2018/08/d57.jpg)
India vs england 3rd test, day 3
India vs England 3rd Test Day 3 : இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட், டிரென்ட் பிரிட்ஜில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்ஸில் இந்தியா 329 ரன்கள் எடுக்க, இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 161 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதைத் தொடர்ந்து, இரண்டாம் இன்னிங்சை தொடர்ந்த இந்தியா, நேற்றைய ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்துள்ளது.
இன்று மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கவிருக்கிறது. இதில், இந்திய அணி எப்படி விளையாடுகிறது என்பதைப் பொறுத்தே, டிக்ளேர் செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும். அதாவது, இன்று விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழும் பட்சத்தில், இந்திய பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ஆடி, முடிந்த வரை டார்கெட்டை அதிகப்படுத்த முயற்சி செய்வார்கள். அங்கே, டிக்ளேர் எனும் வேலைக்கே இடமில்லை.
Day 3!
What's your prediction?#ENGvINDpic.twitter.com/Gws23481fC
— BCCI (@BCCI) August 20, 2018
ஒருவேளை, இன்று பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடும் பட்சத்தில், 200 - 220 ரன்கள் மேற்கொண்டு சேர்த்தால், டார்கெட் 450 - 500ஐ நெருங்கிவிடும். அட்லீஸ்ட், மேற்கொண்டு 150 - 200 ரன்கள் சேர்த்தாலே, டார்கெட் 400ஐ தாண்டிவிடும். அப்படி சிறப்பாக விளையாடும் பட்சத்தில், இன்று முழுவதும் இந்தியா பேட்டிங் செய்ய வாய்ப்புள்ளது.
இப்போட்டியின் Live Score Card-ஐ உடனுக்குடன் காண ஐஇதமிழ் தளத்தில் இணைந்திருங்கள். இதே செய்தியில் லைவ் ஸ்கோர்கார்டை நீங்கள் உடனுக்குடன் காணலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us