New Update
/indian-express-tamil/media/media_files/zpfZnkhQhq2X8PWnKWLZ.jpg)
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நாளை வெள்ளிக்கிழமை முதல் நடைபெற உள்ளது.
00:00
/ 00:00
இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 13.65 சராசரியில் 17 விக்கெட்டுகளுடன் இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள் வரிசையில் முன்னணியில் உள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நாளை வெள்ளிக்கிழமை முதல் நடைபெற உள்ளது.
India Vs England, 4th Test, Ranchi | இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய ராஜ்கோட் டெஸ்டில், இந்தியா 434 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. இதனால், தொடரில் இந்தியா 2- 1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நாளை வெள்ளிக்கிழமை முதல் நடைபெற உள்ளது.
ராஞ்சி ஆடுகளம் மெதுவாகவும் தாழ்வாகவும் உள்ளது என்றும், செவ்வாய் கிரகத்தில் இருந்து எடுத்து வரப்பட்ட மண்ணால் ஆடுகளம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் தனது மதிப்பீட்டில் இங்கிலாந்து அணியின் துணை கேப்டன் ஒல்லி போப் கூறியுள்ளார்.
இங்கிலாந்து அணி எப்போது போல் தங்களது ஆடும் லெவன் வீரர்களை போட்டிக்கு முந்தைய நாளான இன்று அறிவித்துள்ளது. அதே வேளையில், இந்தியாவின் ஆடும் லெவன் வீரர்கள் வரிசை எப்படி இருக்கும் என்று இங்கு பார்க்கலாம்.
பும்ரா இல்லை
இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 13.65 சராசரியில் 17 விக்கெட்டுகளுடன் இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள் வரிசையில் முன்னணியில் உள்ளார். அவர் இல்லாத வெற்றிடத்தை நிரப்புவது கடினம். விக்கெட்டின் தன்மையைப் பொறுத்தவரை, கூடுதல் சுழற்பந்து வீச்சாளர்களை விளையாட இந்தியாவும் ஆசைப்படலாம். விசாகப்பட்டினத்தில் முகேஷ் குமாரின் செயல்படு மெச்சும்படியாக இல்லாததால், பெங்கால் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் அறிமுக வீரராக களமிறங்கலாம்.
தக்க வைக்கும் ரஜத் படிதார்
மத்தியப் பிரதேச பேட்ஸ்மேனான ரஜத் படிதார் தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் அமைதியான தொடக்கத்தைக் கொண்டுள்ளார். இரண்டு ஆட்டங்களில் 11.50 சராசரியில் 46 ரன்கள் எடுத்துள்ளார். அவர் தனது ஷாட் மேக்கிங்கால் நேர்த்தியாகவும், அவரது கால் அசைவில் வேகமானவராகவும் காணப்பட்டாலும், திறமையை இதுவரை கணிசமான ஸ்கோராக மாற்ற முடியவில்லை. இருப்பினும், கே.எல் ராகுல் இல்லாததால், 30 வயதான அவர் தன்னை ராஞ்சி மண்ணில் நிரூபிக்க மேலும் ஒரு வாய்ப்பு கிடைக்கும்.
ஈர்க்கும் துருவ் ஜூரல்
கே.எஸ்.பாரத் அணியில் நீண்ட ரன் எடுத்தாலும், அணிக்காக பேட்டிங் மூலம் மதிப்புமிக்க பங்களிப்பை செய்ய முடியவில்லை. ராஜ்கோட்டில் அவருக்குப் பதிலாக வந்த ஜூரல், அந்தச் சந்தர்ப்பத்தில் குழப்பமடையாதவராகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் மனோநிலை ரீதியாகவும் சிறந்தவராகவும் இருந்தார். பந்து திரும்பத் தொடங்கியபோது ஸ்டம்புகளுக்குப் பின்னால் அவர் திறமையாகவும் இருந்தார்.
இந்தியாவின் உத்தேச லெவன் வீரர்கள் பட்டியல்: ரோகித் சர்மா, யாஷவி ஜெய்ஸ்வால், சுப்மான் கில், ரஜத் படிதார், சர்பராஸ் கான், தேவ்தத் பாடிக்கல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஆர் அஷ்வின், ஆகாஷ் தீப், முகமது சிராஜ்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.