இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தவிர்க்க போராடி வருகிறது.
India vs England 5th Test :
இங்கிலாந்து அணியுடனான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் 4 போட்டிகளில் 3ல் தோற்ற இந்திய அணி தொடரை இழந்துள்ளது.இந்தியா - இங்கிலாந்து இடையே நடைபெற்று வரும் ஐந்தாவது டெஸ்டின் நான்காம் நாள் ஆட்டம் நேற்று (10.9.18) முடிவடைந்தது. அலாஸ்டர் குக் மற்றும் கேப்டன் ஜோ ரூட் அபாரமாக விளையாடி சதம் அடித்தனர்.
குக் தனது இறுதி போட்டியில் சதம் கடந்தது மட்டுமல்லாமல் டெஸ்ட் அரங்கில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் இலங்கையின் குமார் சங்கக்காராவை முந்தி ஐந்தாவது இடத்தை பிடித்தார். இந்த பார்ட்னெர்ஷிப் 259-ரன்கள் சேர்த்த நிலையில் ஹனுமா விஹரரி பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியில் இங்கிலாந்து 423 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.
India vs England
463 ரன்களை இலக்காக கொண்டு களம் இறங்கிய இந்தியா அணி ஆரம்பத்திலே தடுமாறியது. தவான் (1 ) புஜாரா (௦) மற்றும் கோலி (௦) சொற்ப ரங்களில் வெளியேற, இந்தியா ஆட்ட நேர முடிவில், 58 /3 என்று பரிதவித்து கொண்டிருக்கிறது. இந்தியா வெற்றி பெற 406 ரன்கள் தேவை என்கின்ற நிலையில் இந்த ஆட்டம் இங்கிலாந்து பக்கம் செல்வதற்க்கே அதிக வாய்ப்பு உள்ளது.