இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி, 7 விக்கெட்டுக்கு 198 ரன்கள் எடுத்தது.
இந்திய அணி:
இந்தியா-இங்கிலாந்து இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று (7.9.18) ஓவல் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், பேட்டிங்கை தேர்வு செய்தார்.தன்னுடய கடைசி போட்டியில் களம் இறங்கிய அலாஸ்டர் குக் தொடக்கம் முதலே கவனமாக இந்திய பந்துவீச்சாளர்களை கையாண்டார்.
பேட்டிங் செய்வவதற்கு சுலபமாக இருந்த தட்ப வெட்ப சூழலை இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் சரியாக பயன்படுத்தி கொண்டனர். முதல் விக்கெட்டிற்கு 60 ரன்கள் சேர்த்த நிலையில் கீட்டன் ஜென்னிங்ஸ், இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். அடுத்ததாக களம் இறங்கிய மெயின் அலி குக் உடன் சேர்ந்து வலுவான பாட்னர்ஷிப் அமைத்தார்.
இந்த ஜோடியை பிரிக்க இந்திய கேப்டன் விராட் கோலி பல முறை முயன்றும் பலன் கிடைக்கவில்லை. நிதானமாக ஆடிய குக் தனது 57வது அரை சதத்தை நிறைவு செய்தார். இந்தியாவிற்கு எதிராக அறிமுகனான இவர் தனது அறிமுக போட்டியிலும் அரை சதம் நிறைவு செய்திருந்தார், தற்போது தனது இறுதி போட்டியிலும் அரை சதத்தை நிறைவு செய்தார்.
அலாஸ்டர் குக்
ஒரே அணியுடன் தனது அறிமுகம் மற்றும் இறுதி போட்டியில் அரை சதம் கடந்த வீரர்கள் இருவர் மட்டுமே, ஒருவர் ப்ருஸ் மிட்செல் மற்றொருவர் குக். கடைசியாக ஜஸ்பிரிட் பும்ராஹ் இந்தியாவிற்கு பிரேக் கொடுத்தார். இவர் பந்தில் குக் 71 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். குக் விக்கெட்டிற்கு பிறகு இந்தியா, போட்டியில் முன்னிலை பெற்றது.
கேப்டன் ரூட் மற்றும் ஜானி பரிஸ்டோவ் தனது எண்ணிக்கையை தொடங்காமல் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். ஜடேஜா பந்துவீச்சில் ஆல்-ரவுண்டர் ஸ்டோக்ஸ் (11) நடையை கட்ட, இங்கிலாந்து 171-5 என்ற நிலையில் பரிதவித்து கொண்டிருந்தது.
ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் பொறுப்பாக ஆடிய அலி தனது 12வது அரை சதத்தை நிறைவு செய்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இங்கிலாந்து 198-7 என்ற நிலையில் உள்ளது. இந்திய சார்பில் அதிகபட்சமாக இஷாந்த் சர்மா மூன்று விக்கெட்டுகளையும், பும்ராஹ் மற்றும் ஜடேஜா தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.