India vs England 5th Test Day 2 Live: இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையேயான ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்து, நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்திருந்தது. பட்லர் 11 ரன்களுடனும், அடில் ரஷித் 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில், இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்னும் 3 விக்கெட் மட்டுமே, இங்கிலாந்து வசம் உள்ள நிலையில், இந்திய பவுலர்கள் விரைவில் விக்கெட்டுகளை வீழ்த்தி, முதல் இன்னிங்ஸில் இந்தியா லீட் எடுக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ஏனெனில்... இந்த சீரிஸில் லோ ஆர்டர் பேட்ஸ்மேன்களிடம் நமது பவுலர்கள் அடி வாங்குவது வாடிக்கையாகிவிட்டது. அப்படி எதுவுமின்றி, இங்கிலாந்தை அட்லீஸ்ட் 250 ரன்களுக்குள்ளாவது ஆல் அவுட் செய்ய வேண்டியது அவசியம்.
India vs England 5th Test Day 2 Live : இப்போட்டியின் Live Cricket Score Card-ஐ இங்கே நீங்கள் உடனுக்குடன் கண்டுகளிக்கலாம்.