Advertisment

India vs England 5th Test Day 3 Live Cricket Score: தாக்குப்பிடிக்குமா இந்தியா?

India vs England 5th Test Day 3 Live Cricket Score : இவர்கள் இருவரும் குறைந்தது 70 - 80 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இவர்களுக்கு அடுத்து இறங்க வேண்டிய பேட்ஸ்மேன்களில் இஷாந்த் ஷர்மாவால் மட்டும் 30 - 40 ரன்கள் வரை தாக்குப்பிடிக்க முடியும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
India vs England 5th Test Day 3 Live

India vs England 5th Test Day 3 Live

India vs England 5th Test Day 3 Live: இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையேயான ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று தொடங்குகிறது.

Advertisment

லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்றுமுன்தினம் தொடங்கிய இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து, 332 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. ஜோஸ் பட்லர் 89 ரன்களும், மொயின் அலி 50 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 181 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்த இங்கிலாந்து, அதன்பிறகு கடைசி 3 விக்கெட்டுகளை வைத்துக் கொண்டு 332 ரன்கள் சேர்த்தது.

இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா, நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 174 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. அறிமுக வீரர் ஹனுமா விஹாரி 25 ரன்களுடனும், ஜடேஜா 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இவர்கள் இருவரும் குறைந்தது 70 - 80 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இவர்களுக்கு அடுத்து இறங்க வேண்டிய பேட்ஸ்மேன்களில் இஷாந்த் ஷர்மாவால் மட்டும் 30 - 40 ரன்கள் வரை தாக்குப்பிடிக்க முடியும். ஆக, கைவசம் இருக்கும் 4 விக்கெட்டுகளை வைத்துக் கொண்டு 100 - 120 ரன்கள் அடித்தே தீர வேண்டும். இல்லையெனில், இந்தப் போட்டியில் இந்தியா தோற்பதை யாராலும் தடுக்க முடியாது என்பதே உண்மை.

இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தின் Live Cricket Score Card-ஐ நீங்கள் இங்கே கண்டுகளிக்கலாம்.

India Vs England
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment