IND vs ENG 5th Test: அஸ்வினின் 100வது டெஸ்ட்; பும்ரா உள்ளே; யார் வெளியே? - இந்தியா ஆடும் லெவன் இழுபறி!

இந்த தொடரில் நடந்த கடைசி 3 போட்டிகளில் விளையாடிய மிடில் ஆர்டர் பேட்டரான ரஜத் படிதார் 32, 9, 5, 0, 17, 0 என 10.5 சராசரியில் 63 ரன்கள் மட்டும் தான் எடுத்துள்ளார்.

இந்த தொடரில் நடந்த கடைசி 3 போட்டிகளில் விளையாடிய மிடில் ஆர்டர் பேட்டரான ரஜத் படிதார் 32, 9, 5, 0, 17, 0 என 10.5 சராசரியில் 63 ரன்கள் மட்டும் தான் எடுத்துள்ளார்.

author-image
WebDesk
New Update
India vs England 5th Test Playing XI in tamil

இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இமாசலபிரதேச மாநிலம் தர்மசாலாவில் நாளை (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

India vs England, 5th Test, Dharamsala:இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இமாசலபிரதேச மாநிலம் தர்மசாலாவில் நாளை (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இங்கிலாந்துக்கு எதிரான தொடரை இந்தியா ஏற்கனவே 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டாலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு இந்த டெஸ்டின் மூலம் கிடைக்கும் புள்ளி இரு அணிக்கும் முக்கியமானதாகும்.

இந்தியா ஆடும் லெவன் எப்படி? 

Advertisment

 இந்திய அணியில் மிடில் ஆர்டர் பேட்டரான ரஜத் படிதார் ராஞ்சியில் நடந்த டெஸ்டில் மற்றொரு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த தொடரில் நடந்த கடைசி 3 போட்டிகளில் விளையாடிய அவர் 32, 9, 5, 0, 17, 0 என 10.5 சராசரியில் 63 ரன்கள் மட்டும் தான் எடுத்துள்ளார். அவர் சிறப்பாக பந்தை தடுத்து நிறுத்தி ஆடினாலும், சில நல்ல பந்துகளிலும் ஆட்டமிழந்த வெளியேறுகிறார். 

எல்லா வீரர்களும் அவர்களின் கிரிக்கெட் வாழ்க்கையில் இது போன்ற நேரங்களை கடந்து செல்வது வழக்கம் தான் என்றாலும், அவருக்கு இந்திய அணி நிர்வாகம் மற்றொரு வாய்ப்பை வழங்குமா என்பதில் சந்தேகம் தான் எழுகிறது. எனவே, தொடரில் எஞ்சியிருக்கும் ஆட்டத்தில் தேவ்தத் படிக்கல் அவருக்கு பதிலாக அணியில் உள்ள மற்றொரு வாய்ப்பாக இருப்பார். 

பும்ரா உள்ளே; யார் வெளியே?

முந்தைய ஆட்டத்தில் ஓய்வு பெற்ற பும்ரா 5வது டெஸ்டில் விளையாடும் லெவன் அணியில் இடம்பிடித்துள்ளார். ராஞ்சியில் நடந்த முதல் நாளில் ஆகாஷ் தீப் அதிரடியாக பந்து வீசினார். சிறிய உதவி கூட இல்லாத விக்கெட்டில், ஆகாஷ் அங்குள்ள ஈரப்பதத்தை முழுமையாகப் பயன்படுத்தி, தனது நுட்பமான வேகப்பந்து வீச்சால் இங்கிலாந்து வீரர்களை தொந்தரவு செய்தார். எனவே அவர் முகமது சிராஜுக்குப் பதிலாக மற்றொரு வாய்ப்பை பெறக்கூடிய பந்துவீச்சாளராக இருக்கலாம். 

அஸ்வின்-100

Advertisment
Advertisements

இந்திய மூத்த சுழற்பந்து வீச்சாளர் தமிழகத்தை சேர்ந்த ஆர்.அஸ்வினுக்கு இது 100-வது டெஸ்ட் ஆகும். இந்த மைல்கல்லை எட்டும் 14-வது இந்தியர், முதல் தமிழக வீரர் என்ற பெருமையை பெறுகிறார். 37 வயதான அஸ்வின் இதுவரை 99 டெஸ்டில் ஆடி 507 விக்கெட் வீழ்த்தி உள்ளார். இந்த தொடரில் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வரும் அவர் நாளைய போட்டியிலும் ஜொலிப்பார் என நம்பலாம். 

இந்திய அணி ஆடும் லெவன்: ரோஹித் ஷர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், ரஜத் படிதார், சர்ஃபராஸ் காஹ், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஆர்.அஷ்வின், ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், ஆகாஷ் தீப். 

ஆங்கிலத்தில் படிக்கவும்: IND vs ENG 5th Test Playing XI: Patidar puzzle, Bumrah is back, who will sit out? and R Ashwin’s 100

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

India Vs England

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: