சென்னை டெஸ்ட் போட்டி : வெற்றி பெறுமா இந்தியா? இன்னும் 381 ரன்கள் தேவை

India Vs England First Test Update : சென்னையில் நடைபெற்று வரும் இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 337 ரன்களுன்னு ஆட்டமிழந்தது.

Chennai Test Match Update : இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி கடந்த 5-ந் தேதி சென்னையில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 63 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், 3-வது விக்கெட்டுக்கு இணைந்த தொடக்க ஆட்டகாரர் சிப்ளி மற்றும் கேப்டன் ஜோ ரூட் நிதானமாக ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் சேர்த்தனது.

இவர்களின் நேர்த்தியான ஆட்டத்தால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 263 ரன்கள் எடுத்திருந்தது. அபாரமாக விளையாடிய சிப்ளி 87 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், ரூட் 118 ரன்களுடன் களத்தில் இருந்தார்.  இவர்கள் இருவரும் 3-வது விக்கெட்டுக்கு 200 ரன்கள் சேர்த்தனர்.

தொடர்ந்து நேற்று தொடங்கிய 2-வது நாள் ஆட்டத்தில், களமிறங்கிய ரூட் ஸ்டோக்ஸ் ஜோடி இந்திய பந்துவீச்சை கவனமாக எதிர்கொண்டு ரன்கள் சேர்த்தது. இதில் அரைசதம் கடந்த ஸ்டோக்ஸ் 83 ரன்களிலும், 100 வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்த ஜோ ரூட் 218 ரன்களிலும், வெளியேறினர். தொடர்ந்து களமிறங்கிய ஒல்லி போப் 34 ரன்களிலும், பட்லர் 30 ரன்களிலும், டாம் பாஸ் 34 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து அணி 190.1 ஓவர்களில் 578 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில், பும்ரா அஸ்வின் தலா 3 விக்கெட்டுகளும், இஷாந்த், நதீம் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியில், ரோகித் சர்மா சுப்மான் கில் தொடக்க ஆட்டகாரர்களாக களமிறங்கினர். இதில் அதிரடி ஆட்டகாரர் ரோகித் சர்மா, 6 ரன்களில் வெளியேறினார். ஆஸ்திரேலிய தொடரில் முத்திரை பதித்த சுப்மான் கில், 29 ரன்களிலும், கேப்டன் விராட்கோலி 11 ரன்களிலும், ரஹானே 1 ரன்களிலும், ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி 73 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது.

இதனையடுத்து 5-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த புஜாரா, பண்ட் ஜோடி விக்கெட் சரிவை தடுத்து நிறுத்தியது. இதில் வழக்கத்திற்கு மாறாக சற்று அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய புஜாரா அரைசதம் கடந்த நிலையில், 73 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.  பண்ட் புஜாரா ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 119 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் 88 பந்துகளில் 8 பவுண்டரி 5 சிக்சருடன் 91 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். நேற்றை 3-ம் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் எடுத்திருந்தது. வாஷிங்டன் சுந்தர் 33 ரன்களுடனும், அஸ்வின் 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். தொடர்ந்து இன்று நடைபெற்ற 4-வது நாள் ஆட்டத்தில் அசத்தலாக விளையாடிய வாஷிங்டன் சுந்தர் அரைசதம் அடித்து கைகொடுக்க இந்திய அணி 300 ரன்களை கடந்தது. மறுமனையில் சிறப்பாக விளையாடிய அஸ்வின், 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால், இந்திய அணி முதல் இன்னிங்சில் 337 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அசத்தலாக விளையாடிய வாஷிங்டன் சுந்தர் 85 ரன்களுடன் களத்தில் இருந்தார். இங்கிலாந்து அணி தரப்பில், டோமனிக் பெஸ் 4 விக்கெட்டுகளும், ஆர்ச்சர், ஜேக் லீச், ஆண்டர்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 241 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, இந்திய வீரர்களின் அபாரா வந்துவீச்சில் சிக்கி அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில், 178 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக கேப்டன் ரூட் 40 ரன்களும்,ஒல்லி போப் 28 ரன்களும், பெஸ் 25 ரன்களும், பட்லர் 24 ரன்களும் எடுத்தனர்.  இந்திய அணி தரப்பில், அபராமாக பந்துவீசிய உள்ளூர் நாயகன் அஸ்வின் 6 விக்கெட்டுகளும், நதீம் 2 விக்கெட்டுகளும், இஷாந்த், பும்ரா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். முதல் இன்னிங்சை சேர்த்து இந்திய அணி 420 ரன்கள் இலக்காக நிர்ணையிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 4-வது நாள் ஆட்டநேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 39 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டகாரர் ரோகித் சர்மா 12 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், புஜாரா 12 ரன்களிலும், கில் 15 ரன்களிலும் களத்தில் உள்ளனர். இந்தியாவின் வெற்றிக்கு இன்னும் 381 ரன்கள் தேவை என்ற நிலையில், கைவசம் 9 விக்கெட்டுகள் உள்ளது. ஆனாலும் நாளை கடைசி நாள் ஆட்டம் என்பதால் இந்த போட்டி டிராவில் முடியவே அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: India vs england first test chennai match update

Next Story
ஐபிஎல் ஏலத்திற்கு காத்திருக்கும் 1097 வீரர்கள்: பெரும் தொகை கையில் வைத்திருக்கும் பஞ்சாப்PL 2021 Auction 1097 registered players for this year auction KXIP goes into the auction with the biggest purse available at Rs 53.20 crore
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com