Advertisment

IND vs ENG Highlights: பழி தீர்த்த இந்தியா... இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது!

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது அரையிறுதி போட்டியில் 68 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை இந்திய அணி எதிர்கொள்கிறது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
India vs England Live Score T20 World Cup 2024 2nd Semi Final Match 54 Today IND vs ENG latest scorecard updates in tamil

டி20 உலகக்கோப்பை, 2-வது அரைஇறுதிப் போட்டி: இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதல்

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய 2-வது அரைஇறுதிப் போட்டி இந்திய நேரப்படி இரவு 9:15 மணிக்கு கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் ஸ்டேடியத்தில் தொடங்கியது. 8 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டி மழை காரணமாக 1:15 மணி நேரம் தாமதமாக தொடங்கியது.

Advertisment

டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.  அதன்படி முதலாவதாக களமிறங்கி இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது.

இந்தியா அணி  சார்பில் ரோஹித் சர்மா அதிகபட்சமாக 57 ரன்கள் எடுத்தார்.

பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில்  கிரிஸ் ஜோர்டன் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

172 ரன்கள் இலக்குடன் தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி  16.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 103 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

இங்கிலாந்து அணி சார்பில் ஹாரி ப்ரூக் அதிகபட்சமாக 25 ரன்கள் எடுத்தார். பந்து வீச்சில் இந்தியா அணி  சார்பில் அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை இந்திய அணி எதிர்கொள்கிறது.

ஆங்கிலத்தில் படிக்கவும்: India vs England Live Score, T20 World Cup 2024 Semi Final

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

  • Jun 28, 2024 07:01 IST
    இங்கிலாந்துக்கு எதிரான தித்திப்பான வெற்றி; இறுதிப்போட்டிக்குள் நுழைந்த இந்தியா

    இங்கிலாந்துக்கு எதிரான தித்திப்பான வெற்றியின் மூலம் இந்தியா இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
    10 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி டி20 உலகக் கோப்பையில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. கயானாவில், ரோஹித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் அதிரடியால் இந்தியா 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. இந்தியா 5.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 40 ரன்கள் எடுத்திருந்தது. அதற்குள் ரோஹித் மற்றும் சூர்யகுமார் ஜோடி 73 ரன்களை குவித்து சிக்கலில் இருந்து காப்பாற்றியது. ரோஹித் 39 பந்தில் 57 ரன்களில் எடுத்தார். சூர்யகுமார் 36 பந்தில் 47 ரன்கள் எடுத்தார். இரண்டாவது இன்னிங்ஸில், அக்சர் படேல் 23 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளுடன் இங்கிலாந்தின் துரத்தலைத் தடுத்தார், குல்தீப் யாதவும் 19 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை எடுத்தார். நுழைந்தது.



  • Jun 28, 2024 06:55 IST
    இங்கிலாந்து 102 ரன்னில் ஆல் அவுட்

     

    இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதிய 2வது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து 103 ரன்னில் அவுட் ஆனது. இந்தியா 68 ரன்னில் அபார வெற்றி பெற்றது.



  • Jun 28, 2024 00:59 IST
    இங்கிலாந்து திணறல்; 9.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பு

    இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 9.1 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 55 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் வெற்றிக்கு 65 பந்துகளில் 117 ரன்கள் தேவை. கைவசம் 5 விக்கெட்டுகள் உள்ளன.



  • Jun 27, 2024 23:56 IST
    இந்தியா ரன் குவிப்பு 158-6

    இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா ரன் குவிப்பில் ஈடுபட்டது. 18.4 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்துள்ளது.



  • Jun 27, 2024 22:48 IST
    ஈரமான அவுட்ஃபீல்ட்; போட்டி நடப்பதில் தாமதம் - இரவு 10.45 மணிக்கு பிட்ச் ஆய்வு

    டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது அரைஇறுதிப் போட்டி இந்திய நேரப்படி இரவு 9:15 மணிக்கு கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் ஸ்டேடியத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 

    களத்தில் ரோகித் - சூரியகுமார் ஜோடி அதிரடியாக விளையாடி வாந்தார்கள். 8 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 65 ரன்கள் எடுத்தபோது, மீண்டும் மழை பெய்தது. இதனால், போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. 

    தற்போது ஈரமான அவுட்ஃபீல்ட் காரணமாக போட்டி நடப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இரவு 10.45 மணிக்கு பிட்ச் ஆய்வு செய்யப்பட உள்ளது. 

     



  • Jun 27, 2024 21:55 IST
    மீண்டும் புகுந்த மழை...!

    டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது அரைஇறுதிப் போட்டி இந்திய நேரப்படி இரவு 9:15 மணிக்கு கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் ஸ்டேடியத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 

    களத்தில் ரோகித் - சூரியகுமார் ஜோடி அதிரடியாக விளையாடி வருகிறார்கள். 8 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 65 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது மீண்டும் மழை பெய்து வருகிறது. இதனால், போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 



  • Jun 27, 2024 21:52 IST
    களத்தில் ரோகித் - சூரியகுமார்... அதிரடியாக ரன்களை சேர்க்கும் இந்தியா! 

    டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது அரைஇறுதிப் போட்டி இந்திய நேரப்படி இரவு 9:15 மணிக்கு கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் ஸ்டேடியத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 

    களத்தில் ரோகித் - சூரியகுமார் ஜோடி அதிரடியாக விளையாடி வருகிறார்கள். 8 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 65 ரன்கள் எடுத்துள்ளது. 

    முன்னதாக, கோலி விக்கெட்டுக்குப் பின் வந்த ரிஷப் பண்ட் 4 ரன்னில் அவுட் ஆனார். 



  • Jun 27, 2024 21:30 IST
    கோலி அவுட்... ரசிகர்கள் அதிர்ச்சி! 

    டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது அரைஇறுதிப் போட்டி இந்திய நேரப்படி இரவு 9:15 மணிக்கு கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் ஸ்டேடியத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 

    இந்திய அணியில் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் - கோலி களமிறங்கி நிலையில், இந்த ஜோடியில் 9 பந்தில் ஒரு சிக்ஸரை பறக்கவிட்ட கோலி 9 ரன்னுக்கு அவுட் ஆனார். இதனால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.



  • Jun 27, 2024 21:20 IST
    முதல் ஓவர் முடிவில் இந்தியா 

    டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது அரைஇறுதிப் போட்டி இந்திய நேரப்படி இரவு 9:15 மணிக்கு கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் ஸ்டேடியத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 

    இந்திய அணியில் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் - கோலி களமிறங்கி மட்டையைச் சுழற்றி வருகிறார்கள். முதல் ஓவர் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்துள்ளது. 

     



  • Jun 27, 2024 21:19 IST
    ஆட்டம் இனிதே தொடக்கம்!

    டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது அரைஇறுதிப் போட்டி இந்திய நேரப்படி இரவு 9:15 மணிக்கு கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் ஸ்டேடியத்தில் தொடங்கியது. 8 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டி மழை காரணமாக 1:15 மணி நேரம் தாமதமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 20 ஓவர்கள் குறைக்கப்படவில்லை. 

    இந்திய அணியில் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் - கோலி களமிறங்கி மட்டையைச் சுழற்றி வருகிறார்கள். 



  • Jun 27, 2024 21:16 IST
    மழை பெய்யும் முன் பிட்ச் ரிப்போர்ட்

    "ஈரப்பதம் - 72%, காற்று மணிக்கு12 கி.மீ  வேகத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பவுண்டரி தூரம் 69 மீ மற்றும் 70 மீ ஸ்கொயர், நேராக - 79 மீ. ஆடுகளம் மிகவும் வறண்டதாகவும், விரிசலாகவும் தெரிகிறது மற்றும் விரிசல்கள் மிகவும் திடமானதாகவும், சுற்றி நகரவில்லை. டிரினிடாட்டில் நடந்த முதல் அரையிறுதியில் நாம் பார்த்த மாதிரியான துள்ளல் அல்லது சீரற்ற பவுன்ஸ், குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்களுக்கு மிகவும் குறைவாகவும், சறுக்கலாகவும் இருக்கும் 167. ஸ்பின்னர்களுக்கு சாதகமாக இருக்கும் ஒரு தாழ்வான சறுக்கல் ஆடுகளம்" என்று ஹர்ஷா போக்லே மற்றும் மைக்கேல் அதர்டன் ஆகியோர் மழைக்கு முன் மேற்பரப்பைப் பற்றி கூறியுள்ளனர்.



  • Jun 27, 2024 21:10 IST
    2021 முதல் முதலில் பேட்டிங் செய்த இந்தியா தோல்வி!

    இங்கிலாந்து அணி 3 டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் இரண்டாவது பேட்டிங் செய்து வெற்றி பெற்றுள்ளது. 2021ல் நியூசிலாந்துக்கு எதிராக மட்டுமே தோல்வியடைந்தது.

    ஆனால், 2021 முதல் ஐசிசி போட்டிகளில் இந்தியாவின் தோல்விகள் அனைத்தும் முதலில் பேட்டிங் செய்த பிறகு வந்தவை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 



  • Jun 27, 2024 21:02 IST
    டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்து (இன்றுக்கு முன்)!

    2021ல் முதலில் பேட்டிங் செய்து தோல்வி. இரண்டாவது பேட்டிங் செய்த 3 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. 3 வெற்றி (2010 இல் இலங்கைக்கு எதிராக, 2016 இல் நியூசிலாந்துக்கு எதிராக மற்றும் 2022 இல் இந்தியாவுக்குஎதிராக) ஆகும். 



  • Jun 27, 2024 20:56 IST
    இரு அணிகளின் பிளேயிங் லெவன் வீரர்கள் பட்டியல்: 

    இங்கிலாந்து: பிலிப் சால்ட், ஜோஸ் பட்லர்(கேப்டன் / விக்கெட் கீப்பர்), ஜானி பேர்ஸ்டோவ், ஹாரி புரூக், மொயீன் அலி, லியாம் லிவிங்ஸ்டோன், சாம் குர்ரன், கிறிஸ் ஜோர்டான், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், ரீஸ் டாப்லி. 

     



  • Jun 27, 2024 20:56 IST
    இரு அணிகளின் பிளேயிங் லெவன் வீரர்கள் பட்டியல்: 

    இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா. 



  • Jun 27, 2024 20:53 IST
    டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங்; இந்தியா முதலில் பேட்டிங்!

    இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி  பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதனால், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யும்.



  • Jun 27, 2024 20:51 IST
    இரவு 8.50 மணிக்கு டாஸ்; 09.15 மணிக்கு போட்டி தொடக்கம்!

    இன்றைய போட்டி நடக்கும் கயானாவின் பிராவிடன்ஸ் ஸ்டேடியத்தில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்ட வண்ணம் இருக்கிறது. தற்போது மழை நின்ற நிலையில், டாஸ் இந்திய நேரப்படி இரவு 8.50 மணிக்கு நடைபெறும் என்றும், போட்டி 09.15 மணிக்கு ஆட்டம் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



  • Jun 27, 2024 20:15 IST
    இரவு 8.30 மணிக்கு ஆய்வு

    இன்றைய போட்டி நடக்கும் கயானாவின் பிராவிடன்ஸ் ஸ்டேடியத்தில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்ட வண்ணம் இருக்கிறது. இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு ஆடுகளம் ஆய்வு செய்யப்பட்ட உள்ளது. அதன்பிறகு டாஸ் போடும் நேரம் மற்றும் போட்டி  தொடங்கும் நேரம் குறித்த அறிவிப்பை பெறலாம். 



  • Jun 27, 2024 19:55 IST
    புகுந்து விளையாடும் மழை... டாஸ் போடுவதில் தாமதம்!

    இன்றைய போட்டி நடக்கும் கயானாவின் பிராவிடன்ஸ் ஸ்டேடியத்தில் மழை புகுந்து விளையாடி வருகிறது. இதன் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 



  • Jun 27, 2024 19:33 IST
    ஈரமான அவுட்பீல்டு... டாஸ் போடுவதில் தாமதம்!

    இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது அரைஇறுதிப் போட்டி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் ஸ்டேடியத்தில் தொடங்க உள்ளது. 

    முன்னதாக, போட்டி நடக்கும் கயானாவில் மழை பெய்தது. சிறிது நேரம் இடைவெளி விட்டு மீண்டும் மழை பெய்தது. இதனால் மைதானம் ஈரமாக இருக்கிறது. இதன் காரணமாக தற்போது டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 



  • Jun 27, 2024 18:54 IST
    இந்தியா - இங்கிலாந்து போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டால் என்ன நடக்கும்?

    போட்டி சமனில் முடிந்தாலோ, வானிலை நிலைமைகள் சூப்பர் ஓவரை முடிப்பதைத் தடுத்தாலோ, அல்லது வானிலை காரணமாக போட்டி கைவிடப்பட்டாலோ அல்லது இந்தியா - இங்கிலாந்து ஆட்டம் முடிவடையவில்லை என்றாலோ, அதன் இரண்டாவது சுற்றில் முதல் இடத்தைப் பிடித்த அணி குழு (சூப்பர் 8) இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

    அதாவது, இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதி ஆட்டம் கைவிடப்பட்டால், சூப்பர் 8 சுற்றில் எந்த அணி தனது பிரிவில் முதலிடத்தில் இருந்ததோ, அந்த அணியே இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். அதன்படி, மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று, சூப்பர் 8-ல் குரூப் 1ல் முதலிடம் பிடித்த இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.



  • Jun 27, 2024 18:42 IST
    நின்ற மழை - போட்டிக்கு தாயாராகும் ஆடுகளம்!

    இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது அரைஇறுதிப் போட்டி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் ஸ்டேடியத்தில் தொடங்க உள்ளது. முன்னதாக, போட்டி நடக்கும்  கயானாவில் மழை பெய்தது. தற்போது மழை நின்ற நிலையில், ஆடுகளம் தயார் செய்யப்பட்டு வருகிறது. 



  • Jun 27, 2024 18:30 IST
    இந்தியா - இங்கிலாந்து போட்டியில் மழை குறுக்கிட்டால் என்ன நடக்கும்?

    பொதுவாக, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கு, குறைந்தபட்சம் 10 ஓவர்கள் இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிக்கு பந்துவீசப்பட வேண்டும். 

    முதல் அரையிறுதி உள்ளூர் நேரப்படி இரவு ஆட்டமாக இருந்ததால், திட்டமிட்ட நாளுக்கு மொத்தம் 60 நிமிடங்கள் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. அரையிறுதி 1 -இன் ரிசர்வ் நாளுக்கான மொத்த கூடுதல் விளையாட்டு நேரம் 190 நிமிடங்கள் ஆகும். 

    மறுபுறம், அரையிறுதி 2 -இன் திட்டமிடப்பட்ட நாளுக்கு அதிகபட்சமாக 250 நிமிடங்கள் ஒதுக்கப்படும் என்று விளையாடும் நிபந்தனைகள் கூறுகின்றன. அத்துடன், முதல் அரையிறுதிக்கு ஒதுக்கப்பட்டது போல் ரிசர்வ் டே கிடையாது. 



  • Jun 27, 2024 18:29 IST
    கயானா மைதானத்தில் மழை... அச்சத்தில் ரசிகர்கள்!

    இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது அரைஇறுதிப் போட்டி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் ஸ்டேடியத்தில் தொடங்க உள்ளது. இந்நிலையில், போட்டி நடக்கும்  கயானாவில் மழை தற்போது பெய்து வருகிறது. இதனால், போட்டி தாமதமாக தொடங்கும் என்கிற அச்சத்தில் ரசிகர்கள் உள்ளனர். 



  • Jun 27, 2024 17:57 IST
    ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்கு - க்கு அன்புடன் வரவேற்கிறோம்!

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது அரைஇறுதிப் போட்டி குறித்து உடனுக்குடன் தெரிந்துகொள்ள 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்' லைவ் பிளாக்குடன் இணைந்திருங்கள். 



T20 World Cup 2024 India Vs England
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment