james anderson tamil news: இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்நிலையில், கடந்த 4ஆம் தேதி துவங்கிய முதலாவது டெஸ்ட் போட்டியில் முதல் இனிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து அணி 183 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் 64 ரன்கள் குவித்தார். அதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி நேற்று 3வது நாளில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 278 ரன்கள் குவித்தது.
இந்திய அணியின் தொடக்க வீரராக களம் கண்ட கேஎல் ராகுல் சிறப்பாக விளையாடி 84 ரன்கள் சேர்த்து அசத்தினார். மிடில் - ஆடரில் களமிறங்கி மிரட்டிய ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 56 ரன்கள் குவித்தார். இந்திய அணி 232 ரன்கள் சேர்ந்திருந்த போது 8 விக்கெட்டுகளை இழந்தது. எனவே இந்திய அணி 250 ரன்னை கூட எட்டாது என பலர் நினைத்தனர். ஆனால், கடைசி நேரத்தில் அதிரடியாக ரன் சேர்த்தனர் இந்திய அணியின் வேகபந்து வீச்சாளர்கள். மேலும் அணி 278 ரன்னை எட்ட உதவியும் இருந்தனர்.
இந்திய அணி 90 ரன்கள் முன்னிலை பெற்று இருந்த போது, களத்தில் பேட்டிங் செய்து கொண்டிருந்த இளம் வீரர் முகமது சிராஜை இங்கிலாந்து அணியின் மூத்த வீரரும் வேகப்பந்து வீச்சாளருமான ஜேம்ஸ் ஆண்டர்சன் சில வார்த்தைகளை உதிர்த்தார். மேலும் சிராஜின் நெஞ்சிலும் உரசிவிட்டு சென்றார். இந்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக வலம் வருபவர் ஜேம்ஸ் ஆண்டர்சன். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக அனுபவம் கொண்ட வீரராகவும் உள்ளது. இப்படிப்பட்ட ஒரு முன்னணி வீரர் இந்தியாவின் டெய்ல் எண்டர் பேட்ஸ்மேனை வீழ்த்த முடியாமல் இப்படி சீண்டலில் ஈடுபடுவது தவறு என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
Mohammed Siraj sledging Jimmy Anderson 😂 #ENGvsIND #Anderson #KLRahul pic.twitter.com/YlnVLPyPxP
— Ashwani Pratap Singh (@Ashwani45singh) August 6, 2021
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறt.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.