India vs England 2025 ODI Series Schedule, Live Streaming: இந்தியாவுக்கு சுற்றுப்பயணமாக வருகை தந்துள்ள ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், முதலில் டி20 தொடர் நடைபெபெற்ற நிலையில், தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: India vs England ODI Series 2025: Schedule, squad, time table, venues, timings, live streaming info
இந்நிலையில், இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி முதலாவது ஒருநாள் போட்டி 6 ஆம் தேதி நாக்பூரிலும், 2-வது போட்டி 9 ஆம் தேதி கட்டாக்கிலும், 3-வது மற்றும் கடைசி போட்டி 12 ஆம் தேதி அகமதாபாத்திலும் நடைபெற உள்ளது.
டி-20 தொடரை சூரியகுமார் தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி நிலையில், ஒருநாள் தொடரை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்ற நினைக்கும். மேலும், வருகிற 19 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னோட்டமாகவும் இந்தத் தொடர் பார்க்கப்படும். இந்தத் தொடரில் ஜொலிக்கும் வீரர்கள் சாம்பியன்ஸ் டிராபிக்கான ஆடும் லெவன் அணியில் இடம் பெறும் வாய்ப்பை பெறுவர். அதனால், இரு அணி வீரர்களும் சிறப்பாக செயல்பட விரும்புவர். எனவே, இவ்விரு அணிகள் மோதும் போட்டிகளில் கடுமையான போட்டி நிலவும்.
இந்த நிலையில், இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறவிருக்கும் ஒருநாள் தொடர் போட்டிகளில் ஆன்லைனில் நேரலை எப்படி பார்க்கலாம் என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் ஒருநாள் தொடர் போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ்18 நெட்வொர்க்குகளில் ஒளிபரப்பப்படும். டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆப் மற்றும் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.
இந்தியா vs இங்கிலாந்து ஒருநாள் தொடர்; இரு அணி வீரர்கள் பட்டியல்:
இந்திய ஒருநாள் அணி: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ரிஷப் பந்த், கே.எல். ராகுல், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், முகமது ஷமி சக்கரவர்த்தி.
இங்கிலாந்து ஒருநாள் அணி: ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஹாரி புரூக், பென் டக்கெட், ஜோ ரூட், பிலிப் சால்ட், ஜேமி ஸ்மித், ஜேக்கப் பெத்தேல், பிரைடன் கார்ஸ், லியாம் லிவிங்ஸ்டோன், ஜேமி ஓவர்டன், ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், சாகிப் மஹ்மூத், ஆதில் ரஷித், மார்க் வுட்.