Rishabh Pant Miss Stumping At Chennai Test : இந்திய துணைக்கண்டத்தில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்டின் கீப்பிங் திறமை விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. ஆசிய நாடுகளில் உள்ள ஆடுகளங்கள் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், விக்கெட் கீப்பிங் பணிக்கு ரிஷப் பண்ட் சரியான நபராக இருப்பாரா என்பது பெரும் கேள்விக்குரியாகியுள்ளது.
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கடந்த 5-ந் தேதி சென்னையில் தொடங்கியது. சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 578 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இந்த போட்டியில் 3-வது நாளான இன்று விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் எளிதான ஸ்டெம்பிங் வாய்ப்பை தவறவிட்டது பெரும் விவாத்த்திற்கு உள்ளாகியுள்ளது.
இங்கிலாந்து அணியின் கடைசிகட்ட வீர்ர ஜாக் லீச் பேட்டிங் செய்தபோது, இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் வீசிய ஒரு ஆஃப்-ஸ்பின் பந்தை இறங்கி வந்து ஆட முயன்றார். ஆனால் பந்து அவரை ஏமாற்றி விக்கெட் கீப்பரிடம் சென்றது. இதனால் ஸ்டெமபிங் செய்ய எளிதாக வாய்ப்பு கிடைத்தும் பந்தை கோட்டை விட்ட பண்ட், ஸ்டெம்பிங் வாய்ப்பையும் தவறவிட்டார். இதனால் விரக்தியடைந்த அஸ்வின் இங்கிலாந்து அணி ஆல் அவுட் ஆன பிறகு பந்த் ஸ்டெம்பிக் தவறவிட்டது குறித்து பேசிக்கொண்டே களத்தில் இருந்து வெளியேறினார்.
இந்த போட்டியில் 578 ரன்கள் எடுத்து இங்கிலாந்து அணி ஆல்அவுட் ஆன நிலையில், அஸ்வின் விக்கெட்டுகளும் அஸ்வின் 3 விக்கெட்டுகளும், வீழ்த்தினர். பண்ட் ஸ்டெம்பிங் மிஸ் செய்திருந்தாலும், அவருக்கு ஆதரவாக பேசிய இந்தியாவின் பீல்டிங் பயிற்சியாளர் ஆர்.ஸ்ரீதர், கூறுகையில், “பந்த் ஒரு சிறந்த வீரர் இப்போதைக்கு நான் அவரை ஒவ்வொரு அணியிலும் தேர்ந்தெடுப்பேன். அவர் பின்னால் மற்றும் ஸ்டம்புகளுக்கு முன்னாள் ஒரு சிறந்த வீரர். கிரிக்கெட் போட்டிகளில் அவரின் அணுகுமுறை சிறந்த ஆட்டத்திற்கு வழி செய்கிறது.
ஆஸ்திரேலியாவிலேயே அவர் தனது பேட்டிங் வாய்ப்புளை பல சரியாக பயன்படுத்திக்கொண்டது இதற்கு ஒரு சிறந்த உதாரணம் "என்று தெரிவித்துள்ளார். பிரிஸ்பேனில் பார்த்த பண்ட் போல அவர் விரைவில் முன்னேற்றம் அடைவார் ”என்று அவர் கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"