பெண்கள் ஹாக்கி உலகக் கோப்பை 2018: பலம் வாய்ந்த இங்கிலாந்தை டிரா செய்த இந்தியா

இந்திய அணி நெகட்டிவ் யுக்திகள் பயன்படுத்தி விளையாடியதாக குற்றம் சாட்டினார்

By: July 22, 2018, 10:21:25 AM

Ind vs Eng, women’s hockey world cup match: பெண்கள் ஹாக்கி உலகக் கோப்பை தொடர் நேற்று (ஜூலை 21) லண்டனில் தொடங்கியது.  16 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர், ஆகஸ்ட் 5ம் தேதி வரை நடக்கிறது.

ராணி ராம்பால் தலைமையிலான இந்திய அணி ‘பி’ பிரிவல் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், நேற்று மாலை 06.30 மணிக்கு நடந்த போட்டியில், இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொண்டது. பலம் வாய்ந்த அணி என்பதால், இங்கிலாந்து எளிதில் வெற்றிப் பெறும் என்பதே கணிப்பாக இருந்தது.

போட்டிக்கு முன்னதாக இந்திய கேப்டன் ராணி அளித்த பேட்டியில், “பிரஷர் இங்கிலாந்துக்கு தான். எங்களுக்கு அல்ல. உள்ளூரில் விளையாடுவது அந்த அணிக்கு சாதகமான விஷயம் தான். இருப்பினும், மிகப்பெரிய ரசிகர் கூட்டத்திற்கு மத்தியில் விளையாடுவது எங்களுக்கு ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன்னதாக, நாங்கள் இங்கிலாந்துக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டுள்ளோம். அந்த நம்பிக்கையோடு இப்போட்டியிலும் நாங்கள் களமிறங்குவோம்” என்றார்.

அதன்படி, இப்போட்டியில் ஆரம்பம் முதலே ஆக்ரோஷமான ஆட்டத்தை இந்திய அணி வெளிப்படுத்தியது. இதன பலனாக, ஆட்டத்தின் 25வது நிமிடத்தில் இந்திய வீராங்கனை நேஹா கோயல் முதல் கோல் அடித்து, இந்திய அணியை முன்னிலைப்படுத்தினார்.

இதன்பிறகு, ஆட்டத்தின் 53வது நிமிடத்தில் இங்கிலாந்து வீராங்கனை லிலி ஒஸ்லே கோல் அடித்தார். இதனால், ஆட்டம் 1-1 என டிராவானது. ஆனால், இப்போட்டியில், இங்கிலாந்து மொத்தம் பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இந்தியாவுக்கு ஒன்று கூட கிடைக்கவில்லை. மேற்கொண்டு, இரு அணியும் கோல் அடிக்காததால் ஆட்டம் 1-1 என டிராவானது.

போட்டி முடிந்த பிறகு பேட்டியளித்த இங்கிலாந்து பயிற்சியாளர் டேனி கெர்ரி, இந்திய அணி நெகட்டிவ் யுக்திகள் பயன்படுத்தி விளையாடியதாக குற்றம் சாட்டினார்.

இதைத் தொடர்ந்து, ஜூலை 26ம் தேதி நடக்கவுள்ள இரண்டாவது போட்டியில், அயர்லாந்தை எதிர்கொள்ளும் இந்திய அணி, ஜூலை 29ம் தேதி அமெரிக்காவை சந்திக்கிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:India vs england womens hockey world cup highlights india play 1 1 draw vs england in pool b opener

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X