Advertisment

Ind vs Eng, women's hockey world cup: நாளை இங்கிலாந்துடன் மோதும் இந்தியா

Ind vs Eng, women's hockey world cup match score: இந்தியா, இங்கிலாந்து மோதல்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Women's hockey world cup 2018: India vs england

Ind vs Eng, women's hockey world cup match score:

Ind vs Eng, women's hockey world cup match: பெண்கள் ஹாக்கி உலகக் கோப்பை தொடர் நாளை (ஜூலை 21) லண்டனில் தொடங்குகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியாவும், இங்கிலாந்தும் மோதுகின்றன. 16 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர், ஆகஸ்ட் 5ம் தேதி வரை நடக்கிறது. ராணி ராம்பால் தலைமையில் இந்திய அணி களமறிங்கி உள்ளது.

Advertisment

'பி' பிரிவல் இடம்பெற்றுள்ள இந்திய அணி, நாளை நடைபெறவுள்ள முதல் போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. நாளை மாலை 06.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து, ஜூலை 26ம் தேதி நடக்கவுள்ள இரண்டாவது போட்டியில், அயர்லாந்தை எதிர்கொள்ளும் இந்திய அணி, ஜூலை 29ம் தேதி அமெரிக்காவை சந்திக்கிறது.

இத்தொடர் குறித்து, இந்திய கேப்டன் ராணி கூறுகையில், "நாளையை போட்டியில், பிரஷர் இங்கிலாந்துக்கு தான் உள்ளது. எங்களுக்கு அல்ல. உள்ளூரில் விளையாடுவது அந்த அணிக்கு சாதகமான விஷயம் தான். இருப்பினும், மிகப்பெரிய ரசிகர் கூட்டத்திற்கு மத்தியில் விளையாடுவது எங்களுக்கு ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன்னதாக, நாங்கள் இங்கிலாந்துக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டுள்ளோம். அந்த நம்பிக்கையோடு நாளைய போட்டியிலும் நாங்கள் களமிறங்குவோம்" என்றார்.

இதற்கு முன்னதாக, கடந்த 2014ம் ஆண்டு நெதர்லாந்தில் நடைபெற்ற பெண்கள் ஹாக்கி உலகக் கோப்பையில் இந்திய அணி தகுதி இடம்பெறவில்லை.  1974ம் ஆண்டு முதன் முதலில் பெண்கள் ஹாக்கி உலகக் கோப்பை தொடங்கியது போது நான்காம் இடம் பிடித்து இருந்ததே இந்திய மகளிர் அணியின் சிறந்த செயல்பாடாகும். தற்போது நடப்பு சாம்பியனாக ஆஸ்திரேலியா இருப்பது குறிப்பிடத்தக்கது.

Womens World Cup
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment