பெண்கள் டுவென்டி 20 உலககோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு, இந்திய அணி முதன்முறையாக தகுதி பெற்றுள்ளது.
Advertisment
பெண்கள் டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட அணிகளின் பங்கேற்றுள்ள இந்த தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
சிங்காரச் சென்னை வரலாறு 1 : இது தங்கசாலை தெரு உருவான கதை...
முதல் அரையிறுதி : சிட்னியில் நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில், இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின. தொடர்மழை காரணமாக, பந்துகள் எதுவும் வீசப்படாதநிலையில், போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
தகுதி : ரிசர்வ் டே இல்லாத காரணத்தினால், ஏ பிரிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்திய அணி (8 புள்ளிகள்), இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றது.
இரண்டாவது அரையிறுதிப்போட்டியில், ஆஸ்திரேலிய - தென் ஆப்பிரிக்க அணிகள் மோதுகின்றன. இந்தபோட்டியில் வெற்றி பெறும் அணி, இறுதிப்போட்டியில், இந்திய அணியை எதிர்கொள்ளும்.
முதல்முறை: 2009, 2010 மற்றும் 2018ம் ஆண்டுகளில் நடைபெற்ற தொடர்களில் அரையிறுதிப்போட்டி உடன் வெளியேறிய இந்திய அணி, தற்போது தான் முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil