33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த 28 ஆம் தேதி முதல் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்திய தரப்பில் 117 வீரர் - வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 10:30 மணிக்கு தொடங்கி நடைபெற்ற ஆடவர் ஹாக்கி போட்டியின் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியா - ஜெர்மனி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மிகவும் பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்திய ஜெர்மனி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. கடைசி நிமிடம் வரை போராடிய இந்தியாவின் போராட்டம் வீணானது.
ஒலிம்பிக் ஹாக்கி இறுதிப்போட்டியில் ஜெர்மனி நெதர்லாந்தை எதிர்கொள்கிறது. தோல்வியுற்ற இந்திய அணி ஸ்பெயின் அணியுடன் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் விளையாடும்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: India vs Germany Live Score, Hockey Paris Olympics Semi Final
இந்தியா vs ஜெர்மனி ஹாக்கி: நேருக்கு நேர்
ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவும் ஜெர்மனியும் 18 முறை நேருக்கு நேர் மோதியதில் இந்தியா 8-6 என முன்னிலை பெற்றுள்ளது. நான்கு போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. ஜெர்மனியின் 37 கோல்களுடன் ஒப்பிடும்போது இந்தியா 41 கோல்களை அடித்துள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் நடந்த வெண்கலப் பதக்கப் போட்டியில் இந்தியா 5-4 என்ற கணக்கில் வென்று அசத்தியது. கடைசி நேரத்தில் இந்திய கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் சிறப்பாக பங்காற்றி இருந்தார்.
இந்தியா - ஜெர்மனி அணிகள் கடைசியாக விளையாடிய 6 போட்டிகளில் இந்தியா ஐந்தில் வெற்றி பெற்றுள்ளது. எவ்வாறாயினும், எஃப்.ஐ.எச் புரோ-வில் ஜெர்மனி 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது.
இந்தப் போட்டியை ஸ்போர்ட்ஸ் 18 1 மற்றும் ஸ்போர்ட்ஸ் 18 2 சேனல்களில் நேரலையில் பார்க்கலாம். அல்லது ஜியோசினிமா ஆப் மற்றும் இணையதளத்தில் லைவ் ஆக பார்க்கலாம்.
முன்னதாக மாலையில் தொடங்கிய முதல் அரையிறுதி போட்டியில் ஸ்பெயின் அணியுடன் மோதிய நெதர்லாந்து அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.