Advertisment

India vs Ireland Score, T20 World Cup 2024: அயர்லாந்து அணியை ஊதி தள்ளிய இந்தியா; 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

டி20 உலகக்கோப்பை தொடரில் 8-வது லீக்கில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா - அயர்லாந்து அணிகள் இடையே நியூயார்க்கில் புதன்கிழமை நடைபெற்ற போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

author-image
WebDesk
New Update
india vs ireland live score t20 world cup 2024 match 8 today ind vs ire latest scorecard updates in tamil

டி20 உலகக் கோப்பை 2024: இந்தியா vs அயர்லாந்து லைவ் ஸ்கோர்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

India vs Ireland Score,  T20 World Cup 2024 Match Today: 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் கடந்த 2 ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது.

Advertisment

இந்தத் தொடரில் புதன்கிழமை இரவு 8 மணிக்கு  நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் அரங்கேறும் 8-வது லீக்கில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா - அயர்லாந்து அணிகள் மோதியது. 

டி20 உலகக்கோப்பை தொடரில் 8-வது லீக்கில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா - அயர்லாந்து அணிகள் இடையே நியூயார்க்கில் புதன்கிழமை நடைபெற்ற போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 

ஆங்கிலத்தில் படிக்கவும்: India vs Ireland Live Score, T20 World Cup 2024

இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, அயர்லாந்து அணி பேட்டிங் செய்தது.

அயர்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆண்ட்ரியு பாப்பிர்னி மற்றும் பால் ஸ்டிர்லிங் களமிறங்கினர். இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாத அயர்லாண்து பேட்டர்கள் மலமலவென விக்கெட்டைப் பறிகொடுத்தனர். பால் ஸ்டிர்லிங் 2 ரன்னிலும், ஆண்ட்ரியு பால்பிர்னி 5 ரன்னிலும், லோர்கன் டக்கர் 10 ரன்னிலும், ஹாரி டெக்டர் 4 ரன்னிலும், குர்டி கேம்பெர் 12 ரன்னிலும், ஜார்ஜ் டாக்ரெல் 3 ரன்னிலும் அவுட் ஆனார்கள். 

அயர்லாந்து அணி 9.4 ஓவர்களில் 46 ரன்களுக்கு எல்லாம் 6 விக்கெட்டுகளை இழந்து திணறியது. ஆனால், அயர்லாந்து வீரர்களில், கரேத் டெலானி மட்டும் அதிரடியாக விளையாடி ரன் குவித்தார். 

மறுமுனையில், மார்க் அடைர் 3 ரன்னிலும், பேரி மெக்கார்த்தி 0 ரன்னிலும், ஜோஷுவா லிட்டில் 14 ரன்னிலும் அவுட் ஆனார்கள். மறுமுனையில் உறுதியாக விளையாடிய கரேத் டெலானி 14 பந்துகளில் 26 ரன்கள் எடுத்திருந்தபோது சிராஜ் ஆல் ரன் அவுட் செய்து வெளியேற்றினார். 

இதனால், இந்திய அணி வீரர்களின் பந்துவீச்சில் தாக்குப்பிடிக்க முடியாத அயர்லாந்து அணி 16 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 96 ரன்களில் சுருண்டது.

இந்திய அணி தரப்பில், ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்டுகளும் அர்ஷ்தீப் சிங், பும்ரா தலாஅ 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து, 97 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் சர்மா மற்று விராட் கோலி களமிறங்கினர். அயர்லாந்து அணி பந்துவீச்சாளர் மார்க் அடைர் தொடக்கமே அதிர்ச்சி அளித்தார். விராட் கோலி 1 ரன் மட்டுமே எடுத்து, மார்க் அடைர் பந்தில், பெஞ்சமினிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து, ரிஷப் பண்ட் பேட்டிங் செய்ய வந்தார். 
அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா  37 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். ஆனால், அவர் காயம் காரணமாக பெவிலின் சென்றார். அடுத்து சூர்யகுமார் யாதவ் வந்தார். அவர் 2 ரன்கள் எடுத்திருந்த நிலையில், பெஞ்சமின் ஒயிட் பந்தில், ஜார்ஜ் டோக்ரெல் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அடுத்து வத ஷிவம் துபே 2 பந்துகளை மட்டுமே சந்தித்தார். ஆனால், அதற்குள் ரிஷப் பண்ட் 26 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். 

இந்திய அணி, 12,2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் விராட் கோலி, ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, பும்ரா, முகமது சிராஜ், ஜடேஜா என்று அனைத்து முன்னணி வீரர்களும் இருப்பதால் வலுவாக காணப்படுகிறது. மறுபுறம்,  பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணியில் ஆன்டி பால்பிர்னி, லோர்கன் டக்கர், டெக்டர், ஜார்ஜ் டாக்ரெல் உள்ளிட்டோர் நிலைத்து நின்று விட்டால் அதிரடியில் மிரட்டி விடுவார்கள். 

அந்த அணி சிறிய அணியாக கருதப்பட்டாலும், முந்தைய காலங்களில் பெரிய அணிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்து இருக்கிறது. அதனால் அவர்களை துளி கூட சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று இந்திய வீரர்களை அணி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. கடந்த மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 183 ரன் இலக்கை விரட்டிப்பிடித்து கவனத்தை ஈர்த்தனர். இதனால் அதிக நம்பிக்கையுடன் களம் இறங்குவார்கள். முடிந்த வரை 20 ஓவர் முழுமையாக ஆட முயற்சிப்பார்கள்.

நேருக்கு நேர் 

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 7 முறை மோதியுள்ளன. 7 ஆட்டங்களிலும் இந்தியாவே வெற்றி கண்டுள்ளது. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

India Vs Ireland T20 World Cup 2024
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment