இந்திய தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், முகேஷ் குமார், அர்ஷ்தீப் சிங், திலக் வர்மா, அவேஷ் கான் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோரும் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்குப் பிறகு இந்திய டி20 அணியில் தங்கள் இடங்களைத் தக்கவைத்துள்ளனர்.
India vs Ireland, T20I series 2023 Tamil News: அயர்லாந்து மண்ணுக்கு சுற்றுப்பயணமாக சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. நாளை மறுநாள் ஆகஸ்ட் 18 ஆம் தேதி தொடங்கும் இந்த தொடருக்கான இந்திய அணியை ஜஸ்பிரித் பும்ரா வழிநடத்துகிறார். சீனியர் வீரர்கள் பலருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
Advertisment
பும்ரா கடந்த செப்டம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய டி20 தொடருக்குப் பிறகு எந்தவித கிரிக்கெட் தொடரிலும் விளையாடவில்லை. கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை மற்றும் ஆசிய கோப்பையையும் பும்ரா தவறவிட்டார். தொடர்ச்சியான முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக பும்ரா கிட்டத்தட்ட 11 மாதங்கள் ஓய்வில் இருந்தார். அவர் தற்போது உடற்தகுதி பெற்றுள்ள நிலையில், மீண்டும் அணிக்கு கம்பேக் கொடுக்கப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளார்கள்.
வேகப்பந்து வீச்சாளர் பும்ராவைத் தவிர, வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவும் காயத்திற்குப் பிறகு மீண்டும் வருகிறார். கடந்த ஆண்டு ஆகஸ்டில் இந்தியா ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதில் இருந்து இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டது. அதனால் அவரால் தொடர்ந்து விளையாட முடிவில்லை.
பும்ரா வழிநடத்தும் இந்திய அணிக்கு சி.எஸ்.கே நட்சத்திர வீரரான ருத்ராஜ் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோன்று சி.எஸ்.கே அணியின் சிவம் துபேவிற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ஐபிஎல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜிதேஷ் சர்மா, ரிங்கு சிங் போன்ற வீரர்களும் அணியில் இடம்பிடித்துள்ளனர்.
இந்திய தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், முகேஷ் குமார், அர்ஷ்தீப் சிங், திலக் வர்மா, அவேஷ் கான் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோரும் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்குப் பிறகு இந்திய டி20 அணியில் தங்கள் இடங்களைத் தக்கவைத்துள்ளனர். யுஸ்வேந்திர சாஹல், ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் இல்லாத நிலையில், அயர்லாந்துக்கு எதிராக சுழற்பந்து வீச்சாளர்களான ரவி பிஷ்னோய், ஷாபாஸ் அகமது மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய வீரர்கள் இருப்பார்கள்.
சுவாரஸ்யமாக, அயர்லாந்து தொடருக்கான இந்திய அணியுடன் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அல்லது தேசிய கிரிக்கெட் அகாடமி (NCA) தலைவர் வி.வி.எஸ் லக்ஷ்மன் ஆகியோர் வரமாட்டார்கள். 2023 ஆசியக் கோப்பைக்கு முன் இந்தியாவின் இறுதி வெள்ளைப் பந்து தொடருக்கான இந்திய சிந்தனையாளர்களின் ஒரு பகுதியாக பயிற்சியாளர்கள் சிதான்ஷு கோடக் மற்றும் சாய்ராஜ் பஹுதுலே இருப்பார்கள்.
இந்தியா vs அயர்லாந்து: ஆன்லைனில் நேரலையில் பார்ப்பது எப்படி?
அயர்லாந்து தொடரின் மூன்று டி20-களும் இந்தியாவில் ஜியோசினிமாவில் நேரடி ஸ்ட்ரீமில் பார்க்கலாம். மூன்று ஆட்டங்களும் இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு தொடங்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil