worldcup 2023 | indian-cricket-team | netharlands: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நாளை மறுநாள் வியாழக்கிழமை (அக்.5) முதல் தொடங்குகிறது. நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த தொடரில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்பட 10 அணிகள் பங்கேற்க உள்ளன.
வியாழக்கிழமை குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கும் தொடக்க போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டிக்கு முன்னதாக, தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கான பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடக்கும் 9வது பயிற்சி ஆட்டத்தில் இந்தியா - நெதர்லாந்து அணிகள் மோத இருந்தன. இப்போட்டியானது பிற்பகல் 2 மணிக்கு தொடங்க இருந்தது.
ஆங்கிலத்தில் படிக்க:- India vs Netherlands Live Score, World Cup 2023 Warm-Up Match
திருவனந்தபுரத்தில் மழை - டாஸ் போடுவதில் தாமதம்
ஆனால், இன்றைய போட்டி நடக்கும் திருவனந்தபுரம் கிரீன்ஃபீல்ட் சர்வதேச மைதானத்தில் மழை கொட்டித் தீர்த்தது. இந்தனால் போட்டிக்கு தொடங்க டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. இறுதியாக போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே, இங்கிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், இப்போட்டியும் ரத்து செய்யப்பட்டது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 2 பயிற்சி ஆட்டம் ஒதுக்குப்பட்ட ஒரு பந்தைக் கூட எதிர்கொள்ளமல் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடக்க போட்டியுடன் தொடரை தொடங்குகிறது இந்தியா. இப்போட்டியானது வருகிற 8ம் தேதி மதியம் 2 மணிக்கு நடைபெற உள்ளது.
இரு அணிகளின் வீரர்கள் பட்டியல்:
இந்திய அணி
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, ஜஸ்பிரித் பிம் , முகமது சிராஜ்
நெதர்லாந்து அணி:
விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓடோவ்ட், வெஸ்லி பாரேசி, பாஸ் டி லீட், கொலின் அக்கர்மன், சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட், ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), லோகன் வான் பீக், ஷாரிஸ் அகமது, ஆர்யன் தத், ரோலோஃப் வான் டெர் மெர்வே, தேஜா நிவான்டா மீகெரென், ரியான் க்ளீன், சாகிப் சுல்பிகர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“