Advertisment

IND vs NED: பும்ரா, சூர்யகுமார் வெளியே; இஷான் கிஷன் உள்ளே - கோலிக்கு ஓய்வு? இந்தியா ஆடும் லெவன் இழுபறி

நெதர்லாந்துக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் விராட் கோலி அல்லது கேப்டன் ரோகித் சர்மா ஆகியோரில் ஒருவருக்கும் இந்த போட்டியில் இருந்து ஓய்வளிக்கப்படலாம்.

author-image
WebDesk
New Update
India vs Netherlands Playing XI For Cricket World Cup 2023 in tamil

முகமது சிராஜுக்கு ஓய்வு அளித்து ஷர்துல் தாக்கூர் அணியில் சேர்க்கப்படலாம். ஹர்திக் பாண்டியா காயம் அடைந்ததைத் தொடர்ந்து, ஷர்துல் ஆடும் லெவன் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

worldcup 2023 | India vs Netherlands | indian-cricket-team: இந்திய மண்ணில் விறுவிறுப்பாக அரங்கேறி வரும் 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த தொடரில் புள்ளிகள் பட்டியலில் முதல் 3 இடங்களைப் பிடித்துள்ள இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன. மீதமுள்ள ஒரு இடத்துக்கு நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. 

Advertisment

நடப்பு  உலகக் கோப்பை தொடரில் விளையாடிய 8 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி எட்டிலும் வெற்றியை ருசித்து அரையிறுதிக்கு வீறுநடை போட்டுள்ளது. முதல் அரையிறுதியில் இந்தியாவை சந்திக்க போவது எந்த அணி என்பது இன்னும் முடிவாகவில்லை. 

இந்நிலையில், இந்தியா அதன் கடைசி லீக் போட்டியில் நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டியானது பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இந்த நிலையில், இப்போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்கள் சிலருக்கு ஓய்வு வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ள பிரசித் கிருஷ்ணா நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் விளையாட வாய்ப்புள்ளதாகவும், அவர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு பதிலாக ஆடும் லெவன் அணியில் இடம்பிடிக்கலாம் என்றும் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதேபோல், முகமது சிராஜுக்கு ஓய்வு அளித்து ஷர்துல் தாக்கூர் அணியில் சேர்க்கப்படலாம். ஹர்திக் பாண்டியா காயம் அடைந்ததைத் தொடர்ந்து, ஆல்ரவுண்டர் ஆல்-ரவுண்டர் வீரரான ஷர்துல் தாக்கூர் ஆடும் லெவன் அணியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாகத் தான் முகமது ஷமி சேர்க்கப்பட்டார். 

இந்திய அணி நிர்வாகம் பேட்டிங் வரிசையிலும் சில வீரர்களை மாற்றலாம். பேட்டிங்கில் திறம்பட செயல்பட்டு வரும் சூர்யகுமார் யாதவுக்கு நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் ஓய்வு வழங்கப்படலாம். அவரது இடத்தில் இஷான் கிஷானை முயற்சி செய்ய வாய்ப்புள்ளது. 

விராட் கோலி அல்லது கேப்டன் ரோகித் சர்மா ஆகியோரில் ஒருவருக்கும் இந்த போட்டியில் இருந்து ஓய்வளிக்கப்படலாம் என்ற ஊகங்கள் உள்ளன. இருப்பினும், அவர்கள் சிறப்பான ஃபார்மில் இருப்பதால் அவர்களின் வேகத்தை குறைக்க இந்திய நிர்வாகம் முயலாது கோலி 8 போட்டிகளில் 2 சதங்கள் உட்பட 543 ரன்களும், ரோகித் 442 ரன்களும் எடுத்து உள்ளார்கள்.  

நெதர்லாந்துக்கு எதிராக இந்தியாவின் உத்தேச ஆடும் லெவன்: 

ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், இஷான் கிஷன், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Worldcup India vs Netherlands Indian Cricket Team
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment