IND vs NZ T20 Ball By Ball Score: இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது.
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு ஐந்து 20 ஓவர் போட்டி, மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் இரண்டு டெஸ்டுகளில் விளையாடுகிறது. இதில் முதல் டி20 போட்டி இன்று (ஜன.24) ஆக்லாந்தில் நடைபெற்றது.
இதில், முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 203-5 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் 58, ராகுல் 56 ரன்கள் உதவியுடன் 19 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்கள் எடுத்து வென்றது.
இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என இந்தியா முன்னிலை வகிக்கிறது.
Highlights