மிடுக்கான மிடில் ஆர்டரால் மிளிர்ந்த இந்தியா – 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

When and Where to watch IND Vs NZ Match : இந்தியா vs நியூசிலாந்து முதல் டி20 லைவ்

By: Jan 24, 2020, 9:13:03 PM

 IND vs NZ T20 Ball By Ball Score: இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது.

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு ஐந்து 20 ஓவர் போட்டி, மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் இரண்டு டெஸ்டுகளில் விளையாடுகிறது. இதில் முதல் டி20 போட்டி இன்று (ஜன.24) ஆக்லாந்தில் நடைபெற்றது.

இதில், முதலில்  பேட்டிங் செய்த நியூசிலாந்து 203-5 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் 58, ராகுல் 56 ரன்கள் உதவியுடன் 19 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்கள் எடுத்து வென்றது.

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என இந்தியா முன்னிலை வகிக்கிறது.

IE Tamil commentary

India in New Zealand, 5 T20I Series, 2020Eden Park, Auckland 25 November 2020

New Zealand 203/5 (20.0)

vs

India 204/4 (19.0)

Match Ended ( Day - 1st T20I ) India beat New Zealand by 6 wickets

Live Blog
15:51 (IST)24 Jan 2020
இந்தியா வெற்றி

கோலி, ஷிவம் துபே அடுத்தடுத்து அவுட்டாக, இந்திய Dug out ல் பதற்றம் தொற்றிக் கொண்டது. ஆனால், ஷ்ரேயாஸ் ஐயரின் பளீர் ஆட்டம் இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தது. 29 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து இறுதி வரை களத்தில் இருந்தார். 

இதனால், இந்திய அணி 19 ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து  204  ரன்கள் எடுத்து வென்றது.

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என இந்தியா முன்னிலை வகிக்கிறது. 

15:07 (IST)24 Jan 2020
ராகுல் அவுட்

அட வாய வச்சிக்கிட்டு சும்மா இருக்க மாட்டியா!! என்று நீங்கள் டென்ஷனாவது புரியுது!..

10 நிமிடத்திற்கு முன்னாடி நாம் மகிழ்ந்த லோகேஷ், 56 ரன்களில் கேட்ச் ஆனார். 

அடுத்து ஷ்ரேயாஸ் ஐயர் இன்...

14:58 (IST)24 Jan 2020
லோகேஷ் அரைசதம்

ஆல் ரவுண்ட் ஆள் லோகேஷ் ராகுல் அரைசதம் அடித்து தனது அட்டகாசமான ஃபார்மை தொடர்ந்து வருகிறார். 

விராட் கோலிக்கும் சரி, பிசிசிஐக்கும் சரி இவரது ஃபார்ம் மாபெரும் ஆறுதல்!

14:22 (IST)24 Jan 2020
ரோஹித் அவுட்

சான்ட்னர் ஓவரில் சிக்ஸ் அடிக்க ஆசைப்பட்டு கேட்ச் கொடுத்து 7 ரன்களில் வெளியேறினர் ரோஹித் ஷர்மா. 

14:06 (IST)24 Jan 2020
4-31-1 இது தான் இந்தியாவின் பெஸ்ட் பவுலிங்

இந்திய அணியில் சிறப்பாக போட்டிருப்பது பும்ரா மட்டுமே. 

4-31-1

முகமது ஷமி நான்கு ஓவரில் 53 ரன்கள் விட்டுக் கொடுத்துள்ளார். விக்கெட் ஏதுமில்லை. 

மற்றபடி ஷர்துள், ஜடேஜா, துபே, சாஹல் தலா 1 விக்கெட் பெற்றனர்.

14:04 (IST)24 Jan 2020
204 ரன்கள் இலக்கு

முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 20 ஓவர்கள் முடிவில், 5 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்துள்ளது. 

காலின் மன்ரோ 59(42)

கேன் வில்லியம்சன் 51(26)

ஆறு ஆண்டுகளில் டி20 போட்டியில் முதல் அரைசதம் எடுத்துள்ளார் ராஸ் டெய்லர் 54(27)

13:58 (IST)24 Jan 2020
இந்தியா பிளேயிங் XI

ரோஹித் ஷர்மா, லோகேஷ் ராகுல், விராட் கோலி(c), ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே. ஷர்துள் தாகூர், ஜஸ்ப்ரித் பும்ரா, யுவேந்திர சாஹல், முகமது ஷமி

Web Title:India vs new zealand 1st t20 live streaming online when and where to watch

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
இதைப் பாருங்க!
X