இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யவிருக்கும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. இந்த தொடர் நாளை புதன்கிழமை முதல் தொடங்கி நடைபெற உள்ளது. இத்தொடருக்கான ஆட்டங்கள் பெங்களூரு, புனே, மும்பை ஆகிய நகரங்களில் நடைபெற இருக்கிறது.
இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் என்பதால் இரு அணிகளுக்கும் இந்த தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையிலும், நியூசிலாந்து அணி டாம் லதாம் தலைமையிலும் களமாட உள்ளன.
ஆங்கிலத்தில் படிக்கவும்: IND vs NZ 1st Test Live Cricket Streaming: When and where to watch India vs New Zealand live?
இந்தியா vs நியூசிலாந்து முதல் டெஸ்ட் போட்டியை எப்போது நடக்கிறது?
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூரில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் அக்டோபர் 16-20 வரை நடைபெறுகிறது.
இந்தியா vs நியூசிலாந்து முதல் டெஸ்ட் போட்டி எப்போது தொடங்கும்?
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி காலை 9:30 மணிக்கு தொடங்க உள்ளது.
இந்தியா vs நியூசிலாந்து முதல் டெஸ்ட் போட்டியை எப்படி டிவி.யில் நேரலையில் பார்க்கலாம்?
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியை ஸ்போர்ட்ஸ்18 சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
இந்தியா vs நியூசிலாந்து முதல் டெஸ்ட் போட்டியை ஆன்லனில் லைவ் ஆக பார்ப்பது எப்படி?
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியை ரசிகர்கள் ஜியோசினிமா இணையதளம் மற்றும் ஆப் மூலம் லைவ் ஆக பார்க்கலாம்.
இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், சர்பராஸ் கான், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆகாஷ் தீப்.
நியூசிலாந்து: டாம் லாதம் (கேப்டன்), டெவோன் கான்வே, கேன் வில்லியம்சன், மார்க் சாப்மேன், வில் யங், டேரில் மிட்செல், க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர், ரச்சின் ரவீந்திரா, டாம் ப்ளன்டெல் (விக்கெட் கீப்பர்), அஜாஸ் பட்டேல், மேட் ஹென்றி, டிம் சவுத்டீ , வில்லியம் ஓ'ரூர்க், ஜேக்கப் டஃபி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“