India vs New Zealand
முதல் போட்டியில் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்திய இந்தியா இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் தவறாக பேசி சர்ச்சையில் சிக்கிய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா மற்றும் கே.எல்.ராகுல் மீது விதிக்கப்பட்டிருந்த தடை நீங்கியது. பாண்ட்யா இந்திய அணிக்கு திரும்பியுள்ளார், ராகுல் இங்கிலாந்தில் நடக்கும் உள்ளூர் கவுண்டி போட்டிகளில் விளையாட உள்ளார்.
பாண்ட்யா இன்று நடக்கும் போட்டியில் உடனே களம் இறங்க வாய்ப்பில்லை. விஜய் ஷங்கருக்கு இன்னும் ஓரிரு போட்டிகளில் தனது திறமையை நிரூபிக்க வாய்ப்பு அளிக்கப்படும் என்றே தெரிகிறது.
முதல் போட்டியில் முற்றிலும் இந்தியா டாமினேட் செய்திருந்தாலும், கேட்ச்களை கோட்டை விடுதல், சில புவர் ஃபீலடிங் என்று தவறுகளை செய்தது. அதனை இப்போட்டியில் திருத்தியே ஆக வேண்டும். நியூசிலாந்தை அவ்வளவு சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.
India vs New Zealand 2nd ODI: இந்தியா vs நியூசிலாந்து
14:30 PM - 40.2 வது ஓவரில், நியூசிலாந்து 234 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால், 90 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா சிறப்பான வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இதன்மூலம், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், 2-0 என இந்தியா முன்னிலை வகிக்கிறது.
Another brilliant performance by the Men in Blue. #TeamIndia wrap the second ODI, win by 90 runs. 2-0 ???????????????? #NZvIND pic.twitter.com/2fTF9uQ5JM
— BCCI (@BCCI) 26 January 2019
14:15 PM - நியூசிலாந்து எட்டு விக்கெட்டுகளை இழந்து தோல்வியை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது. இருப்பினும், நியூசிலாந்து பவுலர் பிரேஸ்வெல், சிறப்பாக ஆடி வருகிறார். முதன் முறையாக ஓருநாள் போட்டியில் அரைசதம் அடித்து விளையாடி வருகிறார்.
13:05 PM - கேதர் ஜாதவ் ஓவரில், ராஸ் டெய்லரை கண்ணிமைக்கும் நேரத்தில் தோனி ஸ்டெம்பிங் செய்து அப்பீல் செய்தார். தோனியின் அப்பீலுக்கு மறு அப்பீல் ஏது!? 22 ரன்களில் சோகத்துடன் தல கையால் வெளியேற்றப்பட்டார் டெய்லர்.
New Zealand 103/4 after 18 overs in the game.#NZvIND #TeamIndia https://t.co/Wqno8X4OHs pic.twitter.com/rvtlNfpnWL
— BCCI (@BCCI) 26 January 2019
12:45 PM - சாஹல் ஓவரில், காலின் மன்ரோ 31 ரன்களில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார்.
12:25 PM - ஷமியின் நான்காவது ஓவரில் இரண்டு சிக்ஸர், ஒரு பவுண்டரி உட்பட 18 ரன்கள் விளாசிய கேப்டன் வில்லியம்சன், அதே ஓவரில் போல்டானார்.
The BCCI wishes you all a very Happy Republic Day #RepublicDay2019 pic.twitter.com/VXeH7EMr9R
— BCCI (@BCCI) 26 January 2019
12:10 PM - வாவ்! ஆரம்பமே அசத்தல்
நியூசிலாந்து தொடக்க வீரர் மார்ட்டின் கப்தில் 15 ரன்னில், புவனேஷ் குமார் ஓவரில் கேட்ச் ஆனார்.
11:50 AM - நியூசிலாந்து தனது இன்னிங்சை தொடங்கியது
முதல் ஆட்டத்தைப் போல, இன்றும் இந்திய பவுலர்கள் சிறப்பாக பந்து வீசுவார்களா?
11:30 AM - நியூசிலாந்தில் இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோர்
393/4 கிறிஸ்ட்சர்ச், 2009
324/4 மவுண்ட் மாங்கநுய், 2019*
314/9 ஆக்லாந்து, 2014
11:00 AM - இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 324 ரன்கள் எடுத்துள்ளது.
ரோஹித் ஷர்மா- 87
தவான் - 66
விராட் கோலி - 43
அம்பதி ராயுடு - 47
எம் எஸ் தோனி - 48*
கேதர் ஜாதவ் - 22*
நியூசிலாந்து தரப்பில் போல்ட், ஃபெர்கியூசன் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
Innings Break
A clinical batting performance from #TeamIndia as they post a total of 324/4 for the @BLACKCAPS to chase.
What's your prediction for the same? https://t.co/Wqno8X4OHs #NZvIND pic.twitter.com/hGKUfa3P3T
— BCCI (@BCCI) 26 January 2019
10:45 AM - அம்பதி ராயுடு அவுட்
சிறப்பாக ஆடி வந்த அம்பதி ராயுடு, பெர்க்யூசன் ஓவரில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். 49 பந்தில் 47 ரன்கள் எடுத்து ராயுடு வெளியேறினார்.
10:30 AM - மீண்டும் அரைசதம் தவறவிட்ட கேப்டன் கோலி
இந்திய கேப்டன் விராட் கோலி, போல்ட் ஓவரில் 43 ரன்களில் கேட்ச் ஆனார்.
10:00 AM - 35வது ஓவரில் இந்திய அணி 200 ரன்களை கடந்துள்ளது. விராட் கோலி, அம்பதி ராயுடு களத்தில் உள்ளனர். தொடர்ந்து சிறப்பாக ஆடும் பட்சத்தில் இந்திய அணி 350க்கும் மேல் இலக்கு நிர்ணயிக்க வாய்ப்பு உள்ளது.
09:32 AM - ரோஹித் அவுட்!
சிறப்பாக ஆடி வந்த ரோஹித், சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஃபெர்கியூசன் ஓவரில் கேட்ச் ஆனார். 96 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து ரோஹித் அவுட்டானார்.
09:15 AM - தவான் அவுட்!
67 பந்துகளில் 66 ரன்கள் எடுத்திருந்த தவான், போல்ட் ஓவரில் லாதமிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
09:00 AM - கப்பர் தவான் அசத்தல்!
மற்றொரு தொடக்க வீரர் ஷிகர் தவான், தனது 27வது ஒருநாள் அரைசதத்தை பூர்த்தி செய்தார். முதல் ஒருநாள் போட்டியிலும் தவான் அரைசதம் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
08:40 AM - கமான் ரோஹித்!
சிக்ஸருடன் அரைசதம் விளாசினார் துணை கேப்டன் ரோஹித் ஷர்மா. இது அவரது 38வது ஒருநாள் அரைசதம் ஆகும்.
FIFTY!@ImRo45 looking solid out there in the middle, brings up his 38th ODI half-century ????????
Live - https://t.co/Wqno8X4OHs #NZvIND pic.twitter.com/z3UzpdZ4XZ
— BCCI (@BCCI) 26 January 2019
08:30 AM - ரோஹித், தவான் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இருவரும் அட்டாக்கிங், டிபன்ஸ் என கலவையான ஆட்டத்தை கையாண்டு வருகின்றனர்.
08:00 AM - நிதானமான ஆட்டத்தை கடைப்பிடித்து வரும் இந்திய ஓப்பனர்கள் ரோஹித், தவான் இணை விக்கெட் இழப்பின்றி 50 ரன்களை கடந்துள்ளது.
After 10 overs in the game #TeamIndia 56/0 (Rohit 30*, Dhawan 24*)
Follow the game here - https://t.co/Wqno8X4OHs #NZvIND pic.twitter.com/BJuZos8sl9
— BCCI (@BCCI) 26 January 2019
07:30 AM - டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.