இந்தியா - நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே நியூசிலாந்தில் உள்ள ஈடன் பார்க் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வென்றது.
நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. ஆக்லாந்தில் நடைபெற்ற முதல் போட்டியில், இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து, ஈடன் பார்க் ஸ்டேடியத்தில் இந்தியா - நியூசிலந்து அணிகள் இடையே இரண்டாவது டி20 போட்டி நடைபெற்றது.
இந்திய அணியில் விராட் கோலி (கேப்டன்). ரோகித் சா்மா, கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), மணிஷ் பாண்டே, ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ஸ்ரேயாஸ் ஐயர், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யுவேந்திர சஹல், முகம்மது ஷமி, ஜஸ்பிரீத் பும்ரா, ஷர்துல் தாகூர், நவ்தீப் சைனி,வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
நியூசிலாந்து அணியில் கேன் வில்லியம்சன் (கேப்டன்), மார்டின் குப்டில், ராஸ் டெய்லர், ஸ்காட் குஜ்ஜிலின், கோலின் முன்ரோ, கோலின் டி கிராண்ட்ஹோம், டாம் புருஸ், டாரில் மிட்செல், மிட்செல் சான்ட்னர், டிம் செய்பெர்ட் (விக்கெட் கீ்ப்பர்), ஹமீஷ் பென்னட், ஐஸ் ஷோதி, டிம் சவுத்தீ, பிளெய்ர் டிக்னர் ஆகிய வீரர்கள் இடம் பெற்றிருந்தனர்.
முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்தது. அடுத்து 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணியின் வீரர்கள் மிகவும் சிறப்பாக் விளையாடினர். இந்திய அணி 17.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்து எளிதாக நியூசிலாந்து அணியை வென்றது.
IND vs NZ 2nd T20 Live Score: ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஹாட் ஸ்டார் உள்ளிட்ட சேனல்களில் ஒளிபரப்பாக உள்ளது. உடனடி ஸ்கோர், விக்கெட்டுகள் குறித்து தெரிந்துகொள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்..
IND vs NZ 1st T20 Live Score: மழை வருமா : போட்டி நடைபெறும் ஆக்லாந்து மைதானத்தில் இரவு 8 மணி வரை வெயில் அடிக்கும். மழைக்கு வாய்ப்பில்லை.
யாருக்கு சாதகம் : இந்த மைதானத்தில் நடைபெற்ற 2 போட்டிகளிலும் இந்திய அணி சேஸ் செய்து வெற்றி பெற்றுள்ளது.
Highlights