Ind vs NZ 2nd T20 Match updates: இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 2வது டி20 போட்டி நியூசிலாந்தில் உள்ள மவுண்ட் மாங்கானுவில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு செய்ததால் இந்திய அணி பேட்டிங் செய்யத் தொடங்கியது. 7வது ஓவரின் போது மழை பெய்ததால் ஆட்டம் தடைபட்டது. மழை நின்ற பிறகு மீண்டும் ஆட்டம் தொடங்கி நடைபெறுகிறது.
இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்திய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே முதல் டி20 போட்டி மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், 2வது டி20 போட்டி மவுண்ட் மாங்கானுவில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது.
நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா, விராட்கோலி, லோகேஷ் ராகுல், அஸ்வின் உள்பட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், டி20 அணிக்கு ஹர்திக் பாண்ட்யாவும், ஒருநாள் போட்டி அணிக்கு ஷிகர் தவானும் கேப்டனாக இருப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மவுன்ட் மாங்கானுவில் மேகமூட்டம் நிலவியதால் முதல் போட்டியைப் போலவே இந்த போட்டியும் மழையால் பாதிக்கப்படும் என்ற கவலை ரசிகர்கள் மத்தியில் நிலவியது. மவுன்ட் மாங்கானுவில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்லதாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 2வது போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்ததால் இந்திய அணி முதலில் பேட்டி செய்தது. தொடக்க வீரர்களாக இஷான் கிஷன் மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் களம் இறங்கினர். ரிஷப் பண்ட் 13 பந்துகளுக்கு 6 ரன்கள் எடுத்திருந்த நிலையில், லாக்கி ஃபெர்குசன் பந்தில் டிம் சௌதியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இவரையடுத்து சூர்யகுமார் யாதவ் களம் இறங்கினார்.
இந்திய அணி 6.4 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 50 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மழை பெய்யத் தொடங்கியாதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது. மழை நின்ற பிறகு ஆட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இஷான் கிஷனும் - சூர்யகுமார் யாதவும் அதிரடியாக விளையாடினர்.
இஷான் கிஷன் 36 ரன்கள் எடுத்திருந்தபோது ஐஷ் சோதி பந்தில், டிம் சௌதியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இவரையடுத்து வந்த ஷ்ரேயஸ் ஐயர் 9 பந்துகளில் 13 ரன்கள் எடுத்திருந்த நிலையில், லாக்கி ஃபெர்குசன் பந்தில் ஹிட் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த ஹர்திக் பாண்ட்யா 13 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து டிம் சௌதி பந்தில் ஜேம்ஸ் நீஷம் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ஆனால், மறுமுனையில் சூர்யகுமார் யாதவ் சிக்சர் ஃபோர் என பந்துகளைப் பறக்கவிட்டுக்கொண்டிருந்தார். அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 49 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். கடைசி ஓவரை வீசிய டிம் சௌதி ஹர்திக் பாண்ட்யா விக்கெட்டை வீழ்த்தியதோடு மட்டுமில்லாமல் தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர் அடுத்தடுத்து அவுட் ஆக்கி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார்.
இதனால், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது. சூர்யகுமார் யாதவ் 51 பந்துகளில் 111 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். சூர்யகுமார் இந்த போட்டியில் 7 சிக்ஸ், 11 ஃபோர் அடித்து தெறிக்கவிட்டார். புவனேஷ்குமார் 1 ரன் எடுத்திருந்தார்.
இதன்மூலம் 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி விளையாடியது. இந்த நிலையில், இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்து 65 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.