India vs New Zealand 3rd ODI: இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பே ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியது. இரண்டாவது ஒருநாள் போட்டி நடந்த அதே மைதானத்தில் இன்றைய மூன்றாவது போட்டியும் நடைபெறுகிறது.
முதல் இரு போட்டிகளையும் இந்திய அணி வென்று ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என்று முன்னிலையில் உள்ளது. இதனால், இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா வெற்றிப் பெற்றால் ஒருநாள் தொடர் கோப்பையை வென்றுவிடலாம்.
அதுமட்டுமின்றி, இந்த நியூசிலாந்து தொடரில், கேப்டன் விராட் கோலியின் கடைசி போட்டியும் இதுவாகும். அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், வெற்றியோ தோல்வியோ, இன்றைய போட்டியோடு அவர் நாடு திரும்புகிறார். இதன் பிறகு நடக்கும் கடைசி இரு ஒருநாள் போட்டிகள் மற்றும், மூன்று டி20 போட்டிகளுக்கும் ரோஹித் ஷர்மா கேப்டனாக செயல்பட உள்ளார்.
இந்த நிலையில், இன்றைய போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Ind vs Nz 3rd ODI: இந்தியா vs நியூசிலாந்து கிரிக்கெட்
15:30 PM - மேலும் படிக்க - அம்பதி ராயுடு சர்வதேச போட்டிகளில் பந்து வீச ஐசிசி தடை!
15:00 PM - முன்னதாக, கடந்த 2008-09 சீசனில், தோனி தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய போது, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-1 என இந்திய அணி கைப்பற்றி இருந்தது. அதற்கு பிறகு, இம்முறை இந்திய அணி நியூசி மண்ணில் ஒருநாள் வென்று அசத்தியுள்ளது.
Finishing touches courtesy @DineshKarthik & @RayuduAmbati after half centuries from @ImRo45 & @imVkohli takes #TeamIndia to a 7-wicket win in the 3rd ODI. 3-0 ???????????????? #NZvIND pic.twitter.com/XGTwOHmetM
— BCCI (@BCCI) 28 January 2019
14:45 PM - 43 ஓவரில், இந்திய அணி 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து மூன்றாவது ஒருநாள் போட்டியை வென்றது. இதன்மூலம், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என இந்திய அணி கைப்பற்றியுள்ளது.
14:30 PM - நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அம்பதி ராயுடு, தினேஷ் கார்த்திக் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் கடந்து விளையாடி வருகின்றனர்.
13:55 PM - சாண்ட்னர் ஓவரில் இறங்கி வந்து சிக்ஸ் அடிக்க ஆசைப்பட்டு, 62 ரன்னில் ரோஹித் ஸ்டெம்பிங் ஆனார். அதைத் தொடர்ந்து, 60 ரன்னில் போல்ட் ஓவரில் விராட் கோலி கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
FIFTY!@imVkohli brings up his 49th ODI half-century off 59 deliveries ????????#NZvIND pic.twitter.com/5Oq7ai0NWz
— BCCI (@BCCI) 28 January 2019
13:15 PM - ரோஹித் ஷர்மா, தனது 39வது அரை சதத்தை பூர்த்தி செய்தார். 2வது ஒருநாள் போட்டியிலும் ரோஹித் அரைசதம் அடித்திருந்த நிலையில், இன்றைய போட்டியிலும் அரைசதம் அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Back to back fifties for Hitman ????????@ImRo45 brings up his 39th ODI half-century off 63 deliveries. #NZvIND pic.twitter.com/r4T2tj7tPV
— BCCI (@BCCI) 28 January 2019
12:50 PM - ரோஹித் ஷர்மா, விராட் கோலி இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. ரோஹித் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கலாம்.
12:25 PM - அதிரடியாக ஆடிக் கொண்டிருந்த தவான், 28 ரன்னில் போல்ட் ஓவரில் ராஸ் டெய்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். முதல் இரு போட்டியிலும் தவான் அரை சதம் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
12:15 PM - 244 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய ஓப்பனர்கள் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். தவான் மட்டும் அதிரடி காட்ட, ரோஹித் அடக்கி வாசிக்கிறார்.
11:50 AM : இந்தியா விளையாடத் தொடங்கியது
244 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியுள்ளது இந்தியா. ரோஹித் ஷர்மா மற்றும் ஷிக்கர் தவான் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கியுள்ளனர்.
Innings Break!
New Zealand all out for 243 in 49 overs (Shami 3/41, Hardik 2/45)
The dinner break has been reduced to 30 minutes for today's game
Scorecard - https://t.co/0SXKeJvZSs #NZvIND pic.twitter.com/lukAdaoZwc
— BCCI (@BCCI) 28 January 2019
இந்தியாவிற்கு 244 வெற்றி இலக்கு
244 ரன்கள் எடுத்தால் வெற்றி... 243 ரன்களுக்கு சுருண்டது நியூசிலாந்து அணி. 49 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது நியூசிலாந்து.
11:10 AM : 93 ரன்களில் வெளியேறினார் ராஸ்
டாம் லாத்தம் மற்றும் ராஸ் டெய்லர் நான்காவது விக்கெட்டிற்கு நின்று நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள். 51ல் லாத்தம் வெளியேற நின்று ஆடினார் ராஸ். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 93 ரன்களில் ஷமி பந்தில் வெளியேறினார் ராஸ். இன்றைய ஆட்டத்தில் தன்னுடைய 45வது அரை சதத்தை அடித்தார் ராஸ்.
11:00 AM : இரண்டாவது விக்கெட்டை கைப்பற்றினார் ஹர்திக் பாண்டியா
ஹர்திக் பாண்டியா மீண்டும் ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். ஹென்றி நிக்லோஸ்ற்கு பிறகு களம் இறங்கிய மிச்செல் சாண்ட்நெரை 3 ரன்களில் வெளியேற்றி இந்த ஆட்டத்தில் தன்னுடைய இரண்டாவது விக்கெட்டை கைப்பற்றினார் பாண்டியா.
10:40 AM : முதல் விக்கெட்டை கைப்பற்றினார் ஹர்திக் பாண்டியா
8 பந்துகளில் 6 ரன்களை எடுத்த ஹென்றி நிக்கோல்ஸ் ஹர்திக் பாண்டியாவின் பந்தில் ஆட்டமிழந்தார். நியூசிலாந்தின் தற்போதைய ஸ்கோர் 191 ரன்களுக்கு 5 விக்கெட்.
10:30 AM : 51 ரன்களின் வெளியேறினார் டாம் லாத்தம்
அரை சதத்தை முடித்த கையோடு பவிலியன் திரும்பினார் டாம் லாத்தம். அவரைத் தொடர்ந்து ஹென்றி நிக்கோலஸ் ஆட்டத்தில் உள்ளார்.
10:00 AM : அரை சதம் அடித்தார் ராஸ் ட்ரெய்லர்
கேதர் ஜாதவ் வீசிய பந்தை ஃபோருக்கு விரட்டி தன்னுடைய அரை சதத்தை அடித்தார் ராஸ் ட்ரெய்லர்.
08:30 AM - மார்ட்டின் கப்தில் 13 ரன்னிலும், காலின் மன்ரோ 7 ரன்னிலும், கேப்டன் வில்லியம்சன் 28 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஷமி, புவனேஷ், சாஹல் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.
Time for a drinks break here at the Bay Oval
New Zealand 59/3 after 16.2 overs https://t.co/0SXKeJvZSs #NZvIND pic.twitter.com/mhh6Vfch95
— BCCI (@BCCI) 28 January 2019
07:20 AM - இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. காயம் காரணமாக தோனிக்கு பதில் தினேஷ் கார்த்திக்கும், விஜய் ஷங்கருக்கு பதில் ஹர்திக் பாண்ட்யாவும் களமிறங்கியுள்ளனர்.
07:00 AM - டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன், பேட்டிங்கை தேர்வு செய்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.