Sriram Veera
இந்திய கிரிக்கெட் அணி உலககோப்பையை மூன்றாவது முறையாக வெல்லும் என்ற 100 கோடி மக்களின் கனவு, 45 நிமிட மோசமான கிரிக்கெட்டால் நிராசையானது.
உலககோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. முதல் அரையிறுதி போட்டியில், இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில், நியூசிலாந்து அணியிடம் தோல்வியை தழுவி தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.
மவுனமே வார்த்தையாய்...: இந்திய அணியின் தோல்விக்கு பிறகு கேப்டன் கோலி உள்ளிட்ட வீரர்களிடம் மவுனமே வார்த்தையாய் இருந்தது. பால்கனியிலிருந்து இறங்கி வந்த கோலி யாருடனும் பேசவில்லை. தோனி, கைகுலுக்கினார். போட்டியின் ஹீரோவாக திகழ்ந்த ஜடேஜாவின் முடியை கோதினார் கோலி. கோலியின் பின்னால் நின்ற பிசியோதெரபி பயிற்சியாளர் பாட்ரியாக் பர்ஹாத்தும் மவுனமாக நின்றார். பயிற்சியாளர்கள் ரவி சாஸ்திரி மற்றும் பாரத் அருண் யாருடனும் பேசாமல் அமைதியாக நின்றனர்.
அந்த 45 நிமிடங்கள் : இந்த தொடரின் துவக்கத்தில் இருந்து இந்திய அணி சிறப்பாக விளையாடி வந்தது.. இந்த போட்டியில், 45 நிமிடங்கள் மோசமாக ஆடியதன் விளைவாக தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது. . இதை ஏற்கவே மனம் மறுக்கிறது. ஷிகர் தவானுக்கு காயம் ஏற்பட்டதை தொடர்ந்து அவர் ஓய்வில் உள்ளார். அப்போதைய நிலையில் இருந்து துவக்க வீரர்களாக மயங்க் அகர்வாலை இறக்குவதா அல்லது ராகுலை இறக்குவதா என்ற குழப்பத்திலேயே தாங்கள் இருந்தோம். புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள நாம், 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து 4ம் இடத்திற்கு தள்ளப்படுவோம் என்று யாரும் நினைத்துப்பார்க்கவில்லை; பார்க்கவும் முடியவில்லை.
தோனி மற்றும் ஜடேஜாவை இந்தநேரத்தில் நினைத்துப்பார்க்கிறேன். இருவரும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக வெளிப்படுத்தினர். ஜடேஜா மீண்டும் தன்னை ஒரு ஆல்ரவுண்டர் என்பதை நிரூபித்து தன் மீதான விமர்சனத்திற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார். தோனியும் சிறப்பாக விளையாடினார். அவர் ரன் அவுட் ஆனதே, போட்டியின் முடிவை தலைகீழாக மாற்றிவிட்டது. இதனை அவரே எதிர்பார்த்திருக்கமாட்டார்.
தவான் இல்லாதது, ரோகித் விரைவில் அவுட் ஆனது அந்த நேரத்தில் யாரை இறக்குவது என்பதில் கடும் குழப்பம் ஏற்பட்டது. விக்கெட் கீப்பிங் தெரிந்த ஒரு நபரை இறக்கினால் சரியாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனால், எங்கள் கணிப்பு பொய்யானது.
ஐபிஎல் தொடர், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் உள்ளிட்டவைகளில் சிறப்பாக விளையாடிய தினேஷ் கார்த்திக், இந்த தொடரில் ஏனோ சோபிக்க தவறிவிட்டார். போட்டியின் கடைசி நிமிடங்களில், இந்திய அணியின் மோசமான செயல்பாட்டால், தொடரிலிருந்தே வெளியேறியுள்ளது, இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மீளாமுடியா அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.