Ind vs NZ 4th ODI Live Score Update: இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி ஹாமில்டனில் இன்று தொடங்கியது.
இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், முதல் மூன்று போட்டிகளில் வென்று தொடரை இந்திய அணி கைப்பற்றிவிட்டது. இந்தநிலையில், ஹாமில்டனில் இன்று நான்காவது ஒருநாள் போட்டி தொடங்கியது.
விராட் கோலிக்கு கடைசி 2 ஒருநாள் போட்டி மற்றும் டி20 தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், இன்றைய போட்டி உட்பட மீதமுள்ள அனைத்து போட்டிகளுக்கும் ரோஹித் ஷர்மா கேப்டனாக செயல்படுவார். இந்திய நேரப்படி இன்று காலை 7.30 மணிக்கு ஆட்டம் தொடங்கியது. டாஸ் வென்ற நியூசி கேப்டன் வில்லியம்சன் இந்தியாவை பேட் செய்ய அழைத்தார்.
Ind vs NZ 2019 4th ODI Live Score Updates: இந்தியா vs நியூசிலாந்து லைவ் அப்டேட்ஸ்
11:00 AM : ஆட்டத்தை வென்றது நியூசிலாந்து அணி
93 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களம் சென்ற நியூசிலாந்து அணி, இலக்கை வெறும் 14.4 ஓவர்களிலேயே எட்டியது. ஹென்றி மற்றும் நிக்கோலஸ் ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்கு வழி வகுத்தனர்.
10: 55 AM : இலக்கை நெருங்கியது நியூசிலாந்து அணி
ராஸ் டெய்லர் மற்றும் ஹென்றி நிக்கோல்ஸ் தற்போது நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தி வருகின்றனர். ஹென்றி 29 ரன்கள் மற்றும் ராஸ் 27 ரன்கள் எடுத்துள்ளனர். அணியின் ஸ்கோர் 82 ரன்களுக்கு 2 விக்கெட் 14.1 ஓவர் முடிவில்.
10:40 AM : 10 ஓவர்கள் முடிவில் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து விளையாடி வருகிறது இந்தியா.
10:20 AM : இரண்டாவது விக்கெட்டை கைப்பற்றினார் புவனேஷ்வர் குமார். கானே வில்லியம்சன் தற்போது ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பியுள்ளார். நியூசிலாந்து அணியின் ஸ்கோர் தற்போது 6.2 ஓவருக்கு 39 ரன்கள். இரண்டு விக்கெட் இழப்பு.
10:00 AM : நியூசிலாந்தின் ஆட்டம் துவங்கியது
25 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்துள்ளது அந்த அணி. தற்போது ஹென்றி நிக்கோல்ஸ் மற்றும் கானே வில்லியம்சன் இருவரும் விளையாடி வருகிறார்கள். புவனேஷ்வர் குமார் முதல் விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.
09:50 AM : நியூசிலாந்து பவுலர்களின் அசாத்திய பவுலிங்கால், 30.5 ஓவர்களில் 92 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது இந்திய அணி. 93 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்க உள்ளது நியூசிலாந்து. இந்த அட்டத்தில் ட்ரெண்ட் பவுல்ட் நியூசிலாந்து வீரர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
09:00 AM : ஹர்திக் பாண்டியா 18வது ஓவரில் 3 four-களை அடித்து அணியின் ரன்களை கணிசமாக உயர்த்தினாலும் 16 ரன்களுக்கு அவரும் பெவிலியன் திரும்பினார். 55 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தவித்து வருகிறது இந்தியா.
08:50 AM : அவரை அடுத்து களம் இறங்கிய புவனேஷ்வர் குமாரை பெரிதும் எதிர்பார்த்து இருந்த நிலையில் 12 பந்துகளில் ஒரே ஒரு ரன் மட்டும் எடுத்து ஆட்டம் இழந்தார். 40 ரன்களுக்கு 7வது விக்கெட்டையும் பறிகொடுத்தது இந்தியா.
08:45 AM : சுப்மன் கில், கேதர் ஜாதவ் என அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க 35 ரன்களுக்கு இந்தியா 6 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.
08:30 AM : அடுத்து களம் இறங்கிய அம்பாத்தி ராயூடு இந்தியாவின் 33 ரன்களில் வெளியேறினார்.
08:15 AM : ரோஹித் ஷர்மா 23 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார். ரோஹித் ஷர்மாவிற்கு இது 200வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
08:00 AM : ஐந்து ஒருநாள் போட்டிகளை கொண்ட தொடரில் முதல் மூன்று போட்டிகளை அபாரமாக விளையாடியது இந்தியா. இன்று துவக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய சிகர் தவான் 13 ரன்களில் வெளியேறினார்.
07:30 AM - இந்தியா தனது இன்னிங்சை தொடங்கியது. ரோஹித், தவான் களமிறங்கியுள்ளனர்.
07:20 AM - காயத்தில் இருந்து தோனி இன்னும் மீளாததால், அவருக்கு பதில் தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பராக களம் இறங்கியுள்ளார்.
07:15 AM - இந்திய அணி வீரர்கள் விவரம்
ரோஹித், தவான், ஷுப்மன் கில், அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா, புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல், கலீல் அஹ்மது.