/indian-express-tamil/media/media_files/2025/03/09/uT73fYATfX8UGi4JYJ64.jpg)
இந்தியா vs நியூசிலாந்து, இறுதிப் போட்டி - லைவ் கிரிக்கெட் ஸ்கோர், ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபி, 2025, துபாய்
பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வந்த 9-வது ஐ.சி.சி.சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது. 8 அணிகள் பங்கேற்றிருந்த இந்த தொடரின் லீக் மற்றும் அரைஇறுதி சுற்றுகளின் முடிவில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன.
ஆங்கிலத்தில் படிக்கவும்: India vs New Zealand LIVE Cricket Score, Champions Trophy Final 2025
இந்நிலையில், ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது.
துபாயில் நடந்த முதல் அரையிறுதியில், 2023 ஒருநாள் உலகக்கோப்பை நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. மேலும், இந்தத் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, ஆதிக்கம் செலுத்தி வரும் அணியாக இருந்து வருகிறது. லீக் சுற்றில் அனைத்து போட்டிகளிலும் உறுதியான வெற்றியைப் பெற்றது.
மறுபுறம், நியூசிலாந்து அணி, லாகூரில் நடந்த 2-வது அரையிறுதியில் தென் ஆப்பிரிக்காவை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதன் மூலம், 2009-க்குப் பிறகு முதல் முறையாக சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. மிட்செல் சாண்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணி, 2000-ஆம் ஆண்டு கடைசியாக சாம்பியன்ஸ் டிராபியை வென்ற நிலையில், இரண்டாவது முறையாக சாம்பியன்ஸ் டிராபி பட்டத்தை வெல்லும் உறுதியுடன் களமாட உள்ளது. எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.
நேருக்கு நேர்
இந்தியா - நியூசிலாந்து அணிகள் இதுவரை 119 ஒருநாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 61 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. அதே நேரத்தில், நியூசிலாந்து 50 முறை வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி டையில் முடிந்தது. ஏழு போட்டிகள் கைவிடப்பட்டன.
கடைசியாக இவ்விரு அணிகள் துபாயில் மோதிய லீக் ஆட்டத்தில் இந்தியா நியூசிலாந்தை 44 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
-
Mar 09, 2025 21:56 IST
ஸ்டம்ப் எடுத்து கத்தி சண்டை போட்டு விராட் கோலி - ரோகித் சர்மா கொண்டாட்டம்
இந்திய அணி ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபியை வென்றதை அடுத்து, விராட் கோலி - ரோகித் சர்மா ஸ்டம்ப் எடுத்து கத்தி சண்டை போட்டு உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
-
Mar 09, 2025 21:54 IST
ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபியை வென்றது இந்தியா; வீரர்கள் உற்சாகக் கொண்டாட்டம்
நியூசிலாந்து அணியை வீழ்த்தி ஐ.சி.சி டிராபியை வென்ற இந்திய அணி வீரர்கல் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
-
Mar 09, 2025 21:50 IST
இந்திய அணி அபார வெற்றி
இந்திய அணி 49 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம், இந்திய அணை ஐ.சி.சி டிராபியை வென்றது.
-
Mar 09, 2025 21:41 IST
ஹர்திக் பாண்ட்யா அவுட்
ஹர்திக் பாண்ட்யா 18 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஜேமிசன் வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இந்திய அணி 47.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் குவித்துள்ளது. அடுத்து ஜடேஜா பேட்டிங் செய்ய வந்துள்ளார்.
-
Mar 09, 2025 21:28 IST
இந்திய அணி 45 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் குவிப்பு
இந்திய அணி 45 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 220 குவித்துள்ளது. ஹர்திக் பாண்டியா, கே.எல். ராகுல் விளையாடி வருகின்றனர்.
-
Mar 09, 2025 21:13 IST
அக்ஷர் படேல் அவுட்
அக்ஷர் படேல் 40 பந்துகளில் 29 ரன்கள் எடுத்திருந்தபோது, பிரேஸ்வெல் பந்தில், ரூக் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து ஹர்திக் பாண்ட்யா பேட்டிங் செய்ய வந்துள்ளார். இந்திய அணி 41.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்துள்ளது.
-
Mar 09, 2025 21:00 IST
ஸ்ரேயஸ் ஐயர் அவுட்
இந்திய அணி 39-வது ஓவரில் 3 விக்கெ இழப்புக்கு 183 ரன்கள் எடுத்திருந்தபோது, 48 ரன்கள் அடித்திருந்த ஸ்ரேயஸ் ஐயர், சாண்ட்னர் பந்தில் ரச்சின் ரவீந்திராவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து, கே.எல். ராகுல் பேட்டிங் செய்ய வந்தார்.
-
Mar 09, 2025 20:59 IST
இந்தியா 38 ஓவர்களில் 183/3
இந்திய அணி 38 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்ரெயஸ் ஐயர் 48 ரன்கள் எடுத்துள்ளார்.
-
Mar 09, 2025 20:17 IST
ஸ்ரேயஸ் ஐயர் - அக்ஷர் படேல் நிதான ஆட்டம்
இந்திய அணி 27 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்ரேயஸ் ஐயர் - அக்ஷர் படேல் நிதானமாக விளையாடி வருகின்றனர்.
-
Mar 09, 2025 20:14 IST
ரோகித் சர்மா 76 ரன்களில் அவுட்
ரோகித் சர்மா 76 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ரச்சின் ரவீந்திரா வீசிய பந்தில் விக்கெட் கீப்பர் டாம் லேத்தமால் ஸ்டப்பிங் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார். ரோகித் சர்மா சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது.
-
Mar 09, 2025 19:54 IST
இந்திய அணி நிதான ஆட்டம்
இந்திய அணி19.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் சர்மா அரைசதத்துடனும் ஸ்ரேயஸ் ஐயர் 1 ரன்னுடனும் விளையாடி வருகின்றனர்.
-
Mar 09, 2025 19:52 IST
விராட் கோலி 1 ரன்னில் அவுட்
விராட் கோலி 1 ரன் மட்டுமே எடுத்த நிலையில் பிரெஸ்வெல் பந்தில், கால்காப்பில் பட்டு எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆனார். விராட் கோலியின் அவுட் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.
-
Mar 09, 2025 19:50 IST
சுப்மன் கில் அவுட்
சுப்மன் கில் 50 பந்துகளில் 31 ரன்கள் அடித்திருந்த நிலையில், சாண்ட்னர் பந்தில் பிலிப் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து விராட் கோலி பேட்டிங் செய்ய வந்தார்.
-
Mar 09, 2025 19:23 IST
ரோகித் சர்மா அதிரடி அரைசதம்
இந்திய அணி 10 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 64 ரன்கள் எடுத்திருந்தது. 11வது ஓவரில் ரோகித் சர்மா 41 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
-
Mar 09, 2025 19:07 IST
சிக்சர்களைப் பறக்க விட்டு ரோஹித் சர்மா அதிரடி
252 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் ரோஹித் சர்மா, சுப்மன் கில் பேட்டிங் செய்து வருகின்றனர். ரோஹித் சர்மா சிக்சர்களைப் பறக்க விட்டு வருகிறார். 8வது ஓவரை வீசிய என். ஸ்மித் பந்தில் சிக்சர், ஃபோர் பறக்க விட்டார்.
-
Mar 09, 2025 19:04 IST
நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் குவித்தது
நியூசிலாந்து அணி 7 விக்கெ இழப்புக்கு 251 ரன்கள் குவித்தது. இதன் மூலம் இந்திய அணி252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது. தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா அதிரடியாக் விளையாடி வருகிறார்.
-
Mar 09, 2025 17:34 IST
91 பந்துகளில் அரைசதம்
நிதானமாக ஆடி வந்த டேரில் மிட்செல் 91 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
-
Mar 09, 2025 17:03 IST
அக்சர் படேலுக்கு கை விரலில் காயம்
விளையாட்டின்போது அக்சர் படேலுக்கு கை விரலில் காயம் ஏற்பட்டுள்ளது.
-
Mar 09, 2025 16:23 IST
டாம் லாதம் விக்கெட்டை வீழ்த்தினார் ரவீந்திர ஜடேஜா!
டாம் லாதம் நியூசிலாந்து அணிக்காக போட்டியை சிறப்பாக தொடங்கினார், ஆனால் அவர் கடைசி இரண்டு ஆட்டங்களில் கொஞ்சம் தடுமாறினார். ஆனால் ரவீந்திர ஜடேஜா வீசிய பந்தில் அவர் அவுட் ஆனார்.
-
Mar 09, 2025 15:56 IST
சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி: NZ 83/3 (15)
இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 15 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு நியூசிலாந்து அணி 83 ரன்கள் எடுத்துள்ளனர். -
Mar 09, 2025 15:44 IST
கேன் வில்லியம்சன் அவுட்
குல்தீப் யாதவ் தனது இரண்டாவது விக்கெட்டாக கேன் வில்லியம்சனை வீழ்த்தினார். விக்கெட்டின் வேகம்தான் அவரை லெக் சைடில் வேலை செய்ய முயன்று லீடிங் எட்ஜ் நேராக பந்துவீச்சாளர் குல்தீப் யாதவிடம் சென்றது போல் தோன்றியது.
-
Mar 09, 2025 15:41 IST
ரச்சீன் ரவீந்திரா அவுட்
குல்தீப் யாதவ் அதிரடியாக விளையாடி முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தினார். குல்தீப் வீசிய பந்தை ரச்சின் ரவீந்திரா அடிக்காததால், ஆஃப் ஸ்டம்பில் சிக்கியது. அதேபோல கேன் வில்லியம்சன் விக்கெட்டை வீழ்த்தினார்.
-
Mar 09, 2025 14:59 IST
பவுண்டரிகளாக விளாசும் ரவீந்திரா; நியூசிலாந்து ரன் வேட்டை
நியூசிலாந்து அணி 5 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 37 ரன்கள் எடுத்துள்ளது. ரச்சின் ரவீந்திரா பவுண்டரிகள் விளாசி ரன் குவித்து வருகிறார்
-
Mar 09, 2025 14:45 IST
12வது முறையாக டாஸ் தோல்வி
ரோகித் சர்மா 12 ஆவது முறையாக டாஸில் தோல்வியடைந்துள்ளார்
-
Mar 09, 2025 14:43 IST
இரண்டாவது பேட்டிங் செய்வதில் உண்மையில் கவலையில்லை - ரோகித்
ரோஹித் சர்மா: நாங்கள் இங்கே போதுமான அளவு விளையாடி இருக்கிறோம், முதலில் பேட் செய்திருக்கிறோம், முதலில் பந்து வீசியிருக்கிறோம், இரண்டாவது பேட்டிங் செய்வதில் உண்மையில் கவலையில்லை. இது பெரிதாக மாறவில்லை, நாங்கள் சேஸ் செய்து வெற்றி பெற்றுள்ளோம். இது உங்களுக்கு நிறைய நம்பிக்கையைத் தருகிறது, ஆட்டத்திலிருந்து டாஸை விலக்குகிறது. நாள் முடிவில், நீங்கள் எவ்வளவு நன்றாக விளையாட விரும்புகிறீர்கள் என்பதுதான் முக்கியம். அதைத்தான் நாங்கள் டிரஸ்ஸிங் ரூமில் பேசினோம், டாஸைப் பற்றி கவலைப்பட வேண்டாம், நன்றாக விளையாடுங்கள், அதைத்தான் நாங்கள் செய்துள்ளோம், இன்றும் நாங்கள் செய்ய வேண்டும். நியூசிலாந்து கடந்த பல ஆண்டுகளாக மிகச் சிறந்த அணியாக இருந்து வருகிறது, அவர்கள் ஐ.சி.சி போட்டிகளில் நல்ல கிரிக்கெட்டை விளையாடுகிறார்கள். இப்போது அவர்களுக்கு எதிராக சிறப்பாக விளையாடுவது எங்களுக்கு சவால். அணியில் மாற்றமில்லை.
-
Mar 09, 2025 14:37 IST
நாங்கள் முதலில் பேட்டிங் செய்யப் போகிறோம் - மிட்செல் சாண்ட்னர்
மிட்செல் சாண்ட்னர்: நாங்கள் முதலில் பேட்டிங் செய்யப் போகிறோம். ஒரு வாரத்திற்கு முன்பு இந்தியாவுடன் விளையாடியதைப் போலவே, இது ஒரு நல்ல மைதானம் போல் தெரிகிறது. ரன்கள் எடுத்து என்ன நடக்கிறது என்று பார்க்க விரும்புகிறேன். வெளிப்படையாக சில நீல நிற சட்டைகள், சிறந்த சூழல், சிறந்த மைதானம் எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானில் நாங்கள் பெற்றதை விட சற்று வித்தியாசமாக இருக்கும். இந்தியா எப்படி விளையாடியது, அதிலிருந்து அவர்கள் என்ன பெற்றார்கள் என்பதைப் பார்த்தோம். சிறிது நேரம் கழித்து பிட்ச் மெதுவாகிவிடும் என்று நம்புகிறோம். வெவ்வேறு வீரர்கள் வெவ்வேறு நேரங்களில் முன்னேறியுள்ளனர். நீங்கள் தொடக்கத்திலிருந்தே பந்து வீச விரும்புகிறீர்கள், நாங்கள் அதைச் செய்துள்ளோம், இந்தியாவும் அதைச் செய்துள்ளது. துரதிர்ஷ்டவசமாக மாட் ஹென்றி வெளியேற்றப்பட்டார், நாதன் ஸ்மித்தை உள்ளே வர வைத்துள்ளோம்.
-
Mar 09, 2025 14:20 IST
இந்தியா அணி விளையாடும் வீரர்களின் விபரம்
ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், கே.எல் ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹார்டிக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி
-
Mar 09, 2025 14:11 IST
நியூசிலாந்து அணி விளையாடும் வீரர்களின் விபரம்
வில் யங், ரச்சின் ரவீந்திர, கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல், டாம் லாதம் (விக்கெட் கீப்பர்), க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), கைல் ஜேமிசன், வில்லியம் ஓரோர்க், நாதன் ஸ்மித்
-
Mar 09, 2025 14:09 IST
டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு
இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து இந்தியா முதலில் பந்துவீச உள்ளது
-
Mar 09, 2025 13:14 IST
வானிலை அறிவிப்பு
பாகிஸ்தானில் உள்ள மைதானங்களுடன் ஒப்பிடும்போது துபாய் மைதானம் குறைந்த ஸ்கோரிங் பரப்பளவாக இருந்து வருகிறது. இந்த ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக உள்ளது, மேலும் இறுதி ஓவர்களில் பந்து பழையதாகவும் மென்மையாகவும் மாறியவுடன், பவர்பிளேயில் புதிய பந்தை விட பேட்டிங் மிகவும் கடினமாக இருக்கும். எனவே முதல் இன்னிங்ஸ் அல்லது இரண்டாவது இன்னிங்ஸ் எதுவாக இருந்தாலும், பந்து புதியதாகவும் கடினமாகவும் இருக்கும்போது அணிகள் முதல் 10 ஓவர்களை பயன்படுத்திக் கொள்ள விரும்புவார்கள்.
-
Mar 09, 2025 12:51 IST
இந்தியா vs நியூசிலாந்து: உத்தேச அணி விபரம்
நியூசிலாந்து: வில் யங், ரச்சின் ரவீந்திர, கேன் வில்லியம்சன், டாம் லாதம் (விக்கெட் கீப்பர்), டேரில் மிட்செல், க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), கைல் ஜேமிசன், வில்லியம் ஓரூர்க், மேட் ஹென்றி/நாதன் ஸ்மித்
-
Mar 09, 2025 12:32 IST
இந்தியா vs நியூசிலாந்து: உத்தேச அணி விபரம்
இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹார்டிக் பாண்ட்யா, அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி மற்றும் வருண் சக்கரவர்த்தி
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.