கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாம் நாள் ஆட்டத்தில், இந்திய அணியின் பந்துவீச்சு அற்புதமாக இருந்தாலும், இந்தியாவின் பேட்டிங் ஒரு குழப்பமான பதிலை தந்துள்ளது.
அஜிங்க்யா ரஹானேவின் பேட்டிங்கில், இந்த குழப்பத்தை நாம் தெள்ளத்தெளிவாக காணலாம். அவர் நகரும் பந்தை விளையாடக்கூடிய ஒரு வீரர். ஆனால் இன்று க்ரீஸில் இருந்த ஒவ்வொரு நிமிடமும் விக்கெட்டை பாதுகாப்பதா? அல்லது அடித்தாடுவதா? என்ற திணறல் அவரிடம் அதிகமாக தென்பட்டது. அவரால் ஒரு சமநிலையை உருவாக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் நம்பிக்கை இழந்த அவர், அனைத்து பந்துகையும் மடக்கி ஆட முடிவு செய்தார். இறுதியில், நீல் வாக்னர் வீசிய ஷார்ட் பந்தில் போல்டாகி வெளியேறினார்.
இந்திய கேப்டன் விராட் கோலி: விராட் கோலி இன்று ஆட்டமிழந்த விதத்தை பார்க்கும் பொழுது, முதல் இன்னிங்சின் மறுஒளிபரப்போ என்றே தோன்றியது. இந்த முறை, கொலின் டி கிராண்ட்ஹோம் வீசிய பந்தில் வெளியேறினார். outside off-stump செல்லும் பந்துகளை சந்திப்பதில் தெளிவின்மையோடு விராட் கோலி செயல்படுகிறார்.
சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் போன்ற உச்சக் கட்ட வீரர்களும் இது போன்ற தருணத்தை சந்தித்தனர். ஆனால், out-of-form-ஐ எதிர் கொண்ட விதம் அவர்களின் வாழ்க்கையை வரையறுத்தது. விராட் கோலி நீண்ட காலத்திற்குப் பிறகு சரிவை சந்தித்திக்கிறார். இதை அவர் எவ்வாறு கையாளுகிறார் என்பதை உலகம் பார்த்துக் கொண்டே இருக்கும்.
தொடக்க ஆட்டக்காரர்களான பிருத்வி ஷா மற்றும் மாயங்க் அகர்வால் ஆகியோரும் தங்கள் பேட்டிங் பலவீனத்தை அம்பலப்படுத்தினர். முதல் இன்னிங்க்சை போலவே, பிருத்வி ஷா,ஷார்ட் பாலில் வெளியேறினார். உலகெங்கிலும் உள்ள பந்து வீச்சாளர்களுக்கும் , இந்திய தொடக்க வீரர்களுக்கு எந்த வகையில் பந்து வீசலாம் என்பது இப்போது தெளிவாக தெரிந்திருக்கும்.
Night watchman-க உமேஷ் யாதவை அனுப்பியதை நம்ப முடியவில்லை .அணி நிர்வாகம் ஹனுமா விஹாரி, ரிஷாப் பந்த் ஆகியோரைப் பாதுகாக்க முயன்றது. டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிரமப்பட்டிருந்த சூழ்நிலைகளில், இரண்டு ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன்களை விட tail-ender அனுப்புவது புரியாத புதிர் .
விக்கெட் கீப்பிங் ஒரு நிபுணத்துவமான செயல். விருத்திமான் சஹா விட்டுவிட்டு ரிஷாப் பண்டை தேர்ந்தேடுப்பது அட்டூழியத்தின் உச்சம் . இந்திய பேட்டிங் வரிசையைப் பற்றிய சரியான புரிதல் அணி நிர்வாகத்திடம் இல்லை என்பதை உறுதிப்படுத்திகிறது.
இன்று, ரிஷாப் பண்ட் பைஸ் மூலம் 20 ரன்களை விட்டுக்கொடுத்தார். விருத்திமான் சஹா போன்ற ஒரு உயர் நிபுண ‘கீப்பர்' நின்றிருந்தால் இதில் குறைந்தது 12 ரன்களை தடுத்திருக்க முடியும். ரிஷாப் பண்ட் ஒன்று ஆடம் கில்கிறிஸ்ட் இல்லை. மேலும், முதல் டெஸ்டில் இந்தியா அணி நிர்வாகம் என்ன தவறு செய்தது என்பதை ரவீந்திர ஜடேஜா இன்று காட்டினார். இரண்டு விக்கெட்டுகளைத் தவிர, அவரின் ஃபீல்டிங் மற்றும் கேட்சிங் இந்தியா அணி முதல் இன்னிங்ஸ் முன்னிலை பெற வழி வகுத்தது.