IND vs NZ T20 Full Scorecard: இந்திய கிரிக்கெட் அணி, இன்றைய போட்டியிலும், நியூசிலாந்து அணியை வென்று ஒயிட்வாஷ் செய்யும் என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. நடந்துமுடிந்த 4 போட்டிகளிலும் இந்திய அணி அபாரமாக விளையாடி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. கடைசியாக நடந்த 2 போட்டிகளிலும் இந்திய அணி சூப்பர் ஓவர் முறையில் அசத்தல் வெற்றி பெற்று ரசிகர்களை உற்சாகத்தின் எல்லைக்கே கொண் சென்றது யாரும் மறக்க இயலாதது.
இன்று ஐந்தாவது மற்றும் இறுதி போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியிலும் இந்திய அணி வென்று தொடரை 5-0 என்ற கணக்கில் வென்று, நியூசிலாந்து அணியை ஒயிட் வாஷ் செய்யும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
ஆறுதல் வெற்றி பெறும் முனைப்பில் நியூசிலாந்து அணி வீரர்கள் இன்று விளையாடுவார்கள் என்று அந்நாட்டு ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
IND vs NZ T20 Full Scorecard: இந்தியா -நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான 5வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியின் லைவ் ஸ்கோர், விக்கெட் உள்ளிட்டவைகளைே உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்
கேப்டன் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் காயம் காரணமாக விலகியுள்ளார். இவ்விரு கேப்டன்களும் பவுண்டரி லைனில் சிரித்து சிரித்து பேசி மகிழ்ந்த காட்சி பெரிய திரையில் காண்பிக்கப்பட்ட போது ரசிகர்கள் ஆரவாரம் எழுப்பினர்.
இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது. கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார். கேஎல் ராகுல் 45 ரன்கள் எடுத்தார்.
நியூசிலாந்து தரப்பில் குஜிலிஜின் அதிகபட்சமாக 2 விக்கெட்கள் வீழ்த்தினார்.
இந்திய அணி, நியூசிலாந்து அணிக்கு 164 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
போட்டியின் 10வது ஓவரை மிட்செல் சான்ட்னர் வீசினார். ரோகித் சர்மா, இந்த இன்னிங்சில் தனது முதல் சிக்சரை பதிவு செய்தார். கேஎல் ராகுலும் தனது பங்குக்கு ரன்களை விரட்டினார். இந்த ஓவரில் மட்டும் 15 ரன்கள் கிடைத்தது. இந்திய அணியின் ஸ்கோர் 10 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள்.
இந்திய அணி 3 ஓவர்கள் முடிவில் 25 ரன்கள் எடுத்த நிலையில், 4வது ஓவரை ஸ்காட் குஜிலிஜின் வீசினார். அவர் வைடுகளை அள்ளி வழங்கி 5 எக்ஸ்ட்ரா ரன்களை தந்தார். போதாக்குறைக்கு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா வேற பவுண்டரி அடிக்க அந்த ஓவரில் மட்டும் 9 ரன்கள் கிடைத்தது. இந்திய அணி 4 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 34 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய அணி சாம்சன் விக்கெட்டை பறிகொடுத்திருந்த நிலையில், நியூசி., கேப்டன் சவுத்தீ பவுலிங் செய்ய வந்தார். சவுத்தீயின் பந்தை அநாயசமாக எதிர்கொண்ட கே எல் ராகுல், அசத்தல் சிக்சர் அடித்து அசத்தினார். 2 பவுண்டரிகளை தொடர்ந்து ராகுல் சிக்சர் அடித்தது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் ஸ்கோர் 3 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 25 ஆக இருந்தது.
தோள்பட்டை காயம் காரணமாக நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விலகியுள்ளதால் டிம் சவுத்தீ கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights