கடைசி டி20 போட்டியிலும் அபார வெற்றி: 5-0 என தொடரை வென்றது இந்தியா

IND vs NZ T20 Full Scorecard: இந்தியா -நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான 5வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியின் லைவ் ஸ்கோர், விக்கெட் உள்ளிட்டவைகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்

By: Feb 2, 2020, 5:23:04 PM

IND vs NZ T20 Full Scorecard: இந்திய கிரிக்கெட் அணி, இன்றைய போட்டியிலும், நியூசிலாந்து அணியை வென்று ஒயிட்வாஷ் செய்யும் என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. நடந்துமுடிந்த 4 போட்டிகளிலும் இந்திய அணி அபாரமாக விளையாடி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. கடைசியாக நடந்த 2 போட்டிகளிலும் இந்திய அணி சூப்பர் ஓவர் முறையில் அசத்தல் வெற்றி பெற்று ரசிகர்களை உற்சாகத்தின் எல்லைக்கே கொண் சென்றது யாரும் மறக்க இயலாதது.

இன்று ஐந்தாவது மற்றும் இறுதி போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியிலும் இந்திய அணி வென்று தொடரை 5-0 என்ற கணக்கில் வென்று, நியூசிலாந்து அணியை ஒயிட் வாஷ் செய்யும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

ஆறுதல் வெற்றி பெறும் முனைப்பில் நியூசிலாந்து அணி வீரர்கள் இன்று விளையாடுவார்கள் என்று அந்நாட்டு ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

IE Tamil commentary

India in New Zealand, 5 T20I Series, 2020Bay Oval, Mount Maunganui 28 January 2021

New Zealand 156/9 (20.0)

vs

India 163/3 (20.0)

Match Ended ( Day - 5th T20I ) India beat New Zealand by 7 runs

Live Blog
IND vs NZ T20 Full Scorecard: இந்தியா -நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான 5வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியின் லைவ் ஸ்கோர், விக்கெட் உள்ளிட்டவைகளைே உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்
16:11 (IST)02 Feb 2020
டி20 தொடரை “அலேக்” ஆக அள்ளியது இந்தியா

இந்தியா - நியூசிலாந்து ஐந்தாவது மற்றும் இறுதி டி20 போட்டியில், இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் டி 20 தொடரை 5-0 என்ற கணக்கில் வென்றுள்ளது.

16:04 (IST)02 Feb 2020
வெற்றியின் விளிம்பில் இந்தியா - ரசிகர்கள் ஆரவாரம்

இந்திய அணி, நியூசிலாந்து அணி 9 விக்கெட்களை இழந்து திணறி வருகிறது. 19வது ஓவரில் 143 ரன்களை மட்டும் எடுத்துள்ளது. இதன்மூலம், இந்திய அணி தொடரை 5-0 கணக்கில் தொடரை வெல்ல உள்ளது.

15:55 (IST)02 Feb 2020
இந்தியாவின் அபார பந்துவீச்சால் நியூசிலாந்து திணறல்

இந்திய பவுலர்களின் அபாரமான பந்துவீச்சால் நியூசிலாந்து அணி திணறிவருகிறது.  17.3 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 134 ரன்கள் மட்டுமே எடுத்தது.

15:43 (IST)02 Feb 2020
நியூசிலாந்து 129/5

நியூசிலாந்து அணி 5 வது விக்கெட்டை இழந்தது.  16 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தது.

15:37 (IST)02 Feb 2020
நியூசிலாந்து 122/5

நியூசிலாந்து அணி 5 வது விக்கெட்டை இழந்தது.  15 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்தது.

15:33 (IST)02 Feb 2020
5 வது விக்கெட்டை இழந்தது நியூசிலாந்து

நியூசிலாந்து அணி 5 வது விக்கெட்டை இழந்தது. அதிரடியாக விளையாடி செய்பெர்ட் 50 ரன்களில் ஆட்டமிழந்தார். 14 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்தது.

15:26 (IST)02 Feb 2020
4 வது விக்கெட்டை இழந்தது நியூசிலாந்து

நியூசிலாந்து அணி 4வது விக்கெட்டை இழந்தது. அதிரடியாக விளையாடி செய்பெர்ட் 50 ரன்களில் ஆட்டமிழந்தார். 13 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் எடுத்தது.

15:18 (IST)02 Feb 2020
நியூசிலாந்து 12 ஓவரில் 113 ரன்கள்

நியூசிலாந்து 12 ஓவரில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 113 ரன்கள் எடுத்துள்ளது.  ராஸ் டெய்லர் மற்றும் செய்பெர்ட் களத்தில் உள்ளனர்.

15:12 (IST)02 Feb 2020
நியூசிலாந்து 10 ஓவரில் 99/3

நியூசிலாந்து 10 ஓவரில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 99 ரன்கள் எடுத்துள்ளது.  ராஸ் டெய்லர் மற்றும் செய்பெர்ட் களத்தில் உள்ளனர்.

15:00 (IST)02 Feb 2020
கோலி - வில்லியம்சன் அளவளாவல்

கேப்டன் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் காயம் காரணமாக விலகியுள்ளார். இவ்விரு கேப்டன்களும் பவுண்டரி லைனில் சிரித்து சிரித்து பேசி மகிழ்ந்த காட்சி பெரிய திரையில் காண்பிக்கப்பட்ட போது ரசிகர்கள் ஆரவாரம் எழுப்பினர்.

14:58 (IST)02 Feb 2020
இந்தியா அபார பந்துவீச்சு – நியூசிலாந்து திணறல்

164 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய நியூசிலாந்து அணி திணறி வருகிறது.  7.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 49 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

14:09 (IST)02 Feb 2020
நியூசிலாந்துக்கு வெற்றி இலக்கு 164 ரன்கள்

இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது. கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார். கேஎல் ராகுல் 45 ரன்கள் எடுத்தார். 

நியூசிலாந்து தரப்பில் குஜிலிஜின் அதிகபட்சமாக 2 விக்கெட்கள் வீழ்த்தினார்.

இந்திய அணி, நியூசிலாந்து அணிக்கு 164 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

13:54 (IST)02 Feb 2020
ரோகித் சர்மா ரிட்டயர்ட் ஹர்ட்

ரோகித் சர்மா, தசைப்பிடிப்பு காரணமாக தொடர்ந்து இயலாமல் போனதால், ரிட்டயர்ட் ஹர்ட் வாங்கியுள்ளார். ஷிவம் துபே தற்போது களமிறங்கியுள்ளார்.

13:52 (IST)02 Feb 2020
இந்தியா 140 ரன்கள்

இந்திய அணி 17 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்கள் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்துள்ளது.

13:49 (IST)02 Feb 2020
இந்திய அணியின் அசத்தல் ரன்ரேட்

இந்திய அணியின் ரன்ரேட் கடைசி 5 ஓவர்களில் 8.41 ஆக உள்ளது.

13:46 (IST)02 Feb 2020
ரோகித் தசைப்பிடிப்பால் அவதி

ரோகித் சர்மா, காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவரின் உதவியை ரோகித் நாடியுள்ளார்.

13:42 (IST)02 Feb 2020
ரோகித் சர்மா அசத்தல் அரைசதம்

கேப்டன் ரோகித் சர்மா 37 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தியுள்ளார்.  இந்திய அணி 16 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்பிற்கு 131 ரன்களை எடுத்துள்ளது.

13:27 (IST)02 Feb 2020
கே எல் ராகுல் 45 ரன்னில் அவுட்

கே எல் ராகுல் 45 ரன்கள் எடுத்த நிலையில் பென்னட் பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இந்திய அணியின் ஸ்கோர் 11.3 ஓவரில் 2 விக்கெட்கள் இழப்பிற்கு 96 ரன்கள்.

13:23 (IST)02 Feb 2020
சான்ட்னர் ஓவரில் வானவேடிக்கை

போட்டியின் 10வது ஓவரை மிட்செல் சான்ட்னர் வீசினார். ரோகித் சர்மா, இந்த இன்னிங்சில் தனது முதல் சிக்சரை பதிவு செய்தார். கேஎல் ராகுலும் தனது பங்குக்கு ரன்களை விரட்டினார். இந்த ஓவரில் மட்டும் 15 ரன்கள் கிடைத்தது. இந்திய அணியின் ஸ்கோர் 10 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள்.

13:21 (IST)02 Feb 2020
இந்தியா நிதான ஆட்டம்

ஓகே எல் ராகுல், ரோகித் சர்மா நிதான ஆட்டம் விளையாடி வருகின்றனர். இந்திய அணி 9 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 69 ரன்கள் எடுத்துள்ளது.

13:11 (IST)02 Feb 2020
இந்தியா அரைசதம்

இந்தியா 6 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 53 ரன்கள் எடுத்துள்ளது. 

13:06 (IST)02 Feb 2020
எக்ஸ்ட்ராக்களை வாரி வழங்கிய ஸ்காட் குஜிலிஜின்

இந்திய அணி 3 ஓவர்கள் முடிவில் 25 ரன்கள் எடுத்த நிலையில், 4வது ஓவரை ஸ்காட் குஜிலிஜின் வீசினார். அவர் வைடுகளை அள்ளி வழங்கி 5 எக்ஸ்ட்ரா ரன்களை தந்தார். போதாக்குறைக்கு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா வேற பவுண்டரி அடிக்க அந்த ஓவரில் மட்டும் 9 ரன்கள் கிடைத்தது. இந்திய அணி 4 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 34 ரன்கள் எடுத்துள்ளது.

12:58 (IST)02 Feb 2020
சவுத்தி பந்தில் ராகுல் அசத்தல் சிக்சர்

இந்திய அணி சாம்சன் விக்கெட்டை பறிகொடுத்திருந்த நிலையில், நியூசி., கேப்டன் சவுத்தீ பவுலிங் செய்ய வந்தார். சவுத்தீயின் பந்தை அநாயசமாக எதிர்கொண்ட கே எல் ராகுல், அசத்தல் சிக்சர் அடித்து அசத்தினார்.  2 பவுண்டரிகளை தொடர்ந்து ராகுல் சிக்சர் அடித்தது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் ஸ்கோர் 3 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 25 ஆக இருந்தது.

 

12:51 (IST)02 Feb 2020
சஞ்சு சாம்சன் 2 ரன்னில் அவுட்

இந்திய அணியின் துவக்க வீரர் சஞ்சு சாம்சன் 1.3 ஓவரில் 2 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.  இந்தியா 8 ரன்னிற்கு 1 விக்கெட்டை இழந்தது. கேஎல் ராகுல் உடன் ரோகித் சர்மா களமிறங்கியுள்ளார்.

12:47 (IST)02 Feb 2020
நியூசிலாந்து அணி வீரர்கள்

மார்டிவ் குப்தில், கோலின் மன்ரோ, டிம் செய்பர்ட் ( விக்கெட் கீப்பர்), ராஸ் டைலர், டாம் புருஸ், டேரில் மிட்செல், மிட்செல் சான்ட்னர், ஸ்காவட் குஜிலிஜின், டிம் சவுத்தீ ( கேப்டன்). இஷ் சோதி, ஹமீஷ் பென்னட்

12:45 (IST)02 Feb 2020
இந்திய அணி வீரர்கள்

ரோகித் சர்மா ( கேப்டன்), கேஎல் ராகுல் ( விக்கெட் கீப்பர், சஞ்சு சாம்சன். ஸ்ரேயாஸ் அய்யர், மணீஷ் பாண்டே, ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், நவ்தீப் சைனில யுவேந்திர சாஹல், ஜஸ்பிரீத் பும்ரா

IND vs NZ T20 Full Scorecard: கேப்டன் கோலிக்கு இந்த போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், கேப்டன் பொறுப்பை ரோகித் சர்மா ஏற்றுள்ளார்.

தோள்பட்டை காயம் காரணமாக நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விலகியுள்ளதால் டிம் சவுத்தீ கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார்.

Web Title:India vs new zealand india vs new zealand live india vs new zealand live cricket score

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
இதைப் பாருங்க!
X