India vs New Zealand 1st ODI Cricket Score: இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நேப்பியரில் தொடங்கியது. நியூசிலாந்து ஓப்பனர்களான மார்டின் கப்தில், காலின் மன்ரோ ஆகிய இருவரையும் முகமது ஷமி அடுத்தடுத்து போல்டாக்கினார். 24 ரன்கள் எடுத்திருந்த நியூசிலாந்தின் அனுபவ வீரர் ராஸ் டெய்லர், சாஹல் ஓவரில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதிரடி வீரர் டாம் லாதமை 11 ரன்னில் சாஹல் அவுட் செய்ய, ஹென்றி நிக்கோல்சை 12 ரன்னில் கேதர் ஜாதவ் வெளியேற்றினார். மிட்சல் சாண்ட்னர் 14 ரன்னில் ஷமி ஓவரில் எல்பிடபிள்யூ ஆனார். இதன்மூலம், ஆறாவது விக்கெட்டை நியூசி இழந்துள்ளது. ஓரளவுக்கு தாக்குப்பிடித்து ஆடிய கேப்டன் வில்லியம்சன் 64 ரன்னில் குல்தீப் யாதவ் ஓவரில் அவுட்டானார். 157 ரன்களில் நியூசிலாந்து ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக சாஹல் 4 விக்கெட்டுகளையும், ஷமி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி மிகவும் நிதானமாகவே ஆட்டத்தை தொடங்கியது. ரோஹித், தனது அதிரடி ஆட்டத்தை கட்டுப்படுத்தி பொறுமையாக ஆடி வருகிறார். வழக்கத்துக்கு மாறாக நேப்பியரில் சூரியன் கிழக்கில் இருந்து மேற்கில் அஸ்தமனம் ஆவதால், கண்களுக்கு நேராக வீசும் சூரிய வெளிச்சத்தால் பேட்ஸ்மேன்கள் பந்தை கணிக்க முடியாமல் தடுமாறினர். இதனால், ஆட்டம் தடைப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றிகரமான தொடருக்குப் பிறகு விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இந்நிலையில், நேப்பியரில் உள்ள மெக் லீன் மைதானத்தில் முதல் ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது.
நீர் வடிகால் பிரச்சனை காரணமாக சர்வதேச போட்டிகளை நடத்தும் அந்தஸ்தை இழந்து, கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஒருநாள் போட்டிகள் உட்பட எந்த சர்வதேச கிரிக்கெட்டும் நடத்தப்படாமல் இருந்த நேப்பியர் மெக்லீன் மைதானத்தில் தான் இன்று இரு அணிகளும் மோதுகின்றன. 2017 Feb 2ம் தேதியன்று இங்கு கடைசியாக ஒருநாள் போட்டி நடைபெற்றது.
கடைசியாக 2014ம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி நேப்பியரில் விளையாடிய போது, 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இம்முறை இந்திய அணி அதிக நம்பிக்கையுடன் களமிறங்கினாலும், நியூசிலாந்து உச்சபட்ச பலத்துடன் திகழ்கிறது. இதனால், ஆஸ்திரேலிய தொடரை விட இத்தொடர் கடினமாக இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.
NZ vs Ind 1st ODI Score: இந்தியா vs நியூசிலாந்து லைவ் அப்டேட்ஸ்
2:09 PM- இந்திய பௌலர்களின் சிறப்பான பந்துவீச்சு மற்றும் தவானின் அபார ஆட்டத்தால் (75*), இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் (DLS) அபார வெற்றி பெற்றது
1:24 PM - 10 போட்டிகளுக்கு பிறகு தவான் ஒரு நாள் போட்டிகளில் அரை சதம் கடந்துள்ளார். இன்று பதிவு செய்த அரை சதம் ஒரு நாள் போட்டிகளில் அவரது 26வது அரை சதம் ஆகும்.
12:30 PM - ஆட்டம் மீண்டும் தொடங்கியது. ஷிகர் தவான், விராட் கோலி களத்தில் உள்ளனர்
12:10 PM - வழக்கத்துக்கு மாறாக நேப்பியரில் சூரியன் கிழக்கில் இருந்து மேற்கில் அஸ்தமனம் ஆவதால், கண்களுக்கு நேராக வீசும் சூரிய வெளிச்சத்தால் பேட்ஸ்மேன்கள் பந்தை கணிக்க முடியாமல் தடுமாறினர். இதனால், ஆட்டம் தடைப்பட்டுள்ளது.
11:45 AM - உணவு இடைவேளை முடித்து வந்தவுடன், ரோஹித் ஷர்மா 11 ரன்களில் பிரேஸ்வெல் ஓவரில் அவுட்டானார்.
11:25 AM - இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் முதல் விக்கெட்டை வீழ்த்தியபோது, சர்வதேச ஒருநாள் அரங்கில் தனது 100-வது விக்கெட்டை வீழ்த்திய மைல் கல்லை எட்டினார்.
இதன் மூலம், அதிவேகமாக ஒருநாள் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் எனும் சாதனையை படைத்தார். தனது 56-வது போட்டியில் முகமது ஷமி இந்த சிறப்பைப் பெற்றார்.
11:00 AM - 9 ஓவர்கள் முடிவில், இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 41 ரன்கள் எடுத்துள்ளது.
That's dinner break here at the McLean Park.#TeamIndia 41/0 in 9 overs, chasing 157
Follow the game here - https://t.co/08fs504Yhh #NZvIND pic.twitter.com/nVr80EJTnb
— BCCI (@BCCI) 23 January 2019
10:45 AM - இந்தியா நிதான தொடக்கம்
தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி மிகவும் நிதானமாகவே ஆட்டத்தை தொடங்கியது. ரோஹித், தனது அதிரடி ஆட்டத்தை கட்டுப்படுத்தி பொறுமையாக ஆடி வருகிறார்.
10:15 AM - 157 ரன்களில் நியூசிலாந்து ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக சாஹல் 4 விக்கெட்டுகளையும், ஷமி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
Innings Break!
A clinical bowling performance from #TeamIndia and New Zealand are bundled out for 157 (Kuldeep 4/39, Chahal 2/43, Shami 3/19)#NZvIND pic.twitter.com/rfjIqv9zdk
— BCCI (@BCCI) 23 January 2019
10:00 AM - கேன் வில்லியம்சன் அவுட்
ஓரளவுக்கு தாக்குப்பிடித்து ஆடிய கேப்டன் வில்லியம்சன் 64 ரன்னில் குல்தீப் யாதவ் ஓவரில் அவுட்டானார்.
09:40 AM - விக்கெட் சரிவில் நியூசிலாந்து
மிட்சல் சாண்ட்னர் 14 ரன்னில் ஷமி ஓவரில் எல்பிடபிள்யூ ஆனார். இதன்மூலம், ஆறாவது விக்கெட்டை நியூசி இழந்துள்ளது.
Shami on fire ????????????#TeamIndia #NZvIND pic.twitter.com/NHBnPOH19l
— BCCI (@BCCI) 23 January 2019
09:20 AM - அதிரடி வீரர் டாம் லாதமை 11 ரன்னில் சாஹல் அவுட் செய்ய, ஹென்றி நிக்கோல்சை 12 ரன்னில் கேதர் ஜாதவ் வெளியேற்றினார்.
08:45 AM - 24 ரன்கள் எடுத்திருந்த நியூசிலாந்தின் அனுபவ வீரர் ராஸ் டெய்லர், சாஹல் ஓவரில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
100 ODI wickets and counting for @MdShami11 ????????#TeamIndia #NZvIND pic.twitter.com/3RVvthg1CH
— BCCI (@BCCI) 23 January 2019
07:50 AM - நியூசிலாந்து ஓப்பனர்களான மார்டின் கப்தில், காலின் மன்ரோ ஆகிய இருவரையும் முகமது ஷமி அடுத்தடுத்து போல்டாக்கினார்.
07:30 AM - இந்திய அணி பிளேயிங் XI
விராட் கோலி (C), ரோஹித் ஷர்மா (vc), ஷிகர் தவான், அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ், மகேந்திர சிங் தோனி (WK), விஜய் ஷங்கர், குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.